2020 நட்சத்திரப் பலன்கள்; மிருகசீரிஷத்துக்கு என்ன பலன்கள்?

2020 நட்சத்திரப் பலன்கள்; மிருகசீரிஷத்துக்கு என்ன பலன்கள்?
Updated on
1 min read

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மிருகசீரிஷம்:


பிறரின் நட்பை பயன்படுத்தி எதையும் செய்து முடிக்கும் மிருகசீரிஷ நட்சத்திர அன்பர்களே.


நீங்கள் செவ்வாய் பகவானை நட்சத்திர நாயகனாகவும், முதல் 2 பாதத்திற்கு சுக்ர பகவானை ராசிநாயகனாகவும், 3, 4 பாதங்களுக்கு புதன் பகவானை ராசிநாதனாகவும் கொண்டவர்கள். உங்களிடம் ஆளக்கூடிய திறமை இருக்கும்.


இந்த வருடம் வீண் அலைச்சல் குறையும். சிக்கல்கள் தீரும். எண்ணிய காரியம் கைகூடும் குறிக்கோள் நிறைவேறும். சுணங்கிக் கிடந்த காரியங்கள் வேகம் பெறும். சமூகத்தில் அந்தஸ்து உண்டாகும்.


தொழில் வியாபாரத்தில் மாற்றம் செய்ய எண்ணுவீர்கள். சிலர் புதிய தொழில் தொடங்க முற்படுவார்கள். அவர்கள் கவனமாகச் செயல்படுவது நல்லது. வாடிக்கையாளர்களின் தேவைகளை சமாளித்து விடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் உண்டாகும். குறிக்கோளை அடைவதில் உறுதியாகச் செயல்படுவீர்கள். புதிய தொடர்புகள் மூலம் லாபம் கிடைக்கும்.


குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த வாக்குவாதங்கள் அகலும். வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு வெளியே தங்க நேரிடலாம். சுபச்செலவுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உஷ்ணம் சம்பந்தமான நோய் உண்டாகலாம். அடுத்தவரைப் பார்த்து எதையும் செய்யத் தோன்றலாம். அதனை விட்டுவிடுவது நல்லது.


பெண்களுக்கு : எண்ணிய காரியம் கை கூடும். வீண் அலைச்சல் குறையும். சிக்கலான பிரச்சினைகளில் நல்ல முடிவு கிடைக்கும்.
கலைத்துறையினருக்கு : வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. காரிய தாமதம் ஏற்பட்டாலும் சாதகமான பலன் கிடைக்கும். எதிர்பார்த்த காரியங்கள் தடைகளின்றி முடியும். எதிர்ப்புகள் மறையும்.


அரசியல் துறையினருக்கு : பகை பாராட்டியவர்கள் பகையை மறந்து நட்புக் கரம் நீட்டுவார்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினைகள் குறையும். மனஉறுதி அதிகரிக்கும். சொத்துக்களை அடைவதில் தடைகள் ஏற்படும்.


மாணவர்களுக்கு : கல்வியில் கூடுதல் மதிப்பெண் பெற எண்ணுங்கள். அதற்கான முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும்.


பரிகாரம் : தினமும் மஹாலக்ஷ்மியை வணங்கி வந்தால், பிரச்சினைகள் குறையும். காரியங்களில் இருந்த தடைகள் நீங்கும்.


மதிப்பெண்கள்: உங்கள் நட்சத்திரத்துக்கு 71% நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்


+: குடும்பத்தில் மகிழ்ச்சி


-: கோபத்தால் பிரச்சினைகள் வரலாம்.
*************************************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in