2020 - நட்சத்திரப் பலன்கள்; பரணிக்கு என்ன பலன்கள்?

2020 - நட்சத்திரப் பலன்கள்; பரணிக்கு என்ன பலன்கள்?
Updated on
1 min read


பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

பரணி:


எதையும் திட்டமிட்டு செய்து முடிக்கக் கூடிய திறமை உடைய பரணி நட்சத்திர அன்பர்களே.


நீங்கள் சுக்ர பகவானை நட்சத்திர நாயகனாகவும், செவ்வாய் பகவானை ராசி நாயகனாகவும் கொண்டவர்கள். நீங்கள் நேரத்தை கண் போன்று மதிப்பவர்கள். இந்த வருடம் நீண்ட நாட்களாக தடைபட்ட காரியத்தை செய்து முடிப்பீர்கள். அதிர்ஷ்டம் உண்டாகும். விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இருந்தாலும் கொள்கைக்காக பாடுபடுவீர்கள். அதிகம் பேசுவதைத் தவிர்ப்பது நல்லது. அடுத்தவர் சொல்வதை நம்பும் முன் அதைப்பற்றி ஆலோசனை செய்வது நல்லது.


தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் ஒரே குறிக்கோளுடன் இருப்பதை விட்டு வாடிக்கையாளர்களின் தேவைகளை அறிந்து செயல்படுவது முன்னேற்றத்திற்கு உதவும். பணவரத்து அதிகரிக்கும். அரசாங்கத்தின் மூலம் உதவிகளைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் துணிச்சலாக வேலைகளைச் செய்து வெற்றி பெறுவார்கள். சக ஊழியர்கள் மேல் அதிகாரிகளால் நன்மையும் உண்டாகும். எதிர்பார்த்த பதவி உயர்வு பெறுவதில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும்.


குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை குறைந்து நெருக்கம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு இருக்கும். பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். அதனால் நன்மையும் ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.


பெண்களுக்கு : அதிகம் பேசுவதை தவிர்த்து செயலில் வேகம் காட்டுவது நல்லது. அடுத்தவர் சொல்லுவதை செய்யும் முன்பு அது பற்றி ஆலோசனை செய்வது நல்லது.


கலைத்துறையினருக்கு : தேவையான உதவிகள் கிடைக்கும். எதிர்பாராத செலவுகள் உண்டாகும். சொத்து மனை சம்பந்தமான காரியங்களில் தடை, தாமதம் ஏற்படலாம். வீண்பயம் ஏற்படும். ஏற்கனவே செய்த காரியங்களுக்கான பலனைப் பெறுவீர்கள்.


அரசியல் துறையினருக்கு : சிலர் வீட்டை விட்டு வெளியில் சென்று தங்க நேரிடலாம். வீண் வழக்கு விவகாரங்கள் வரலாம். எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. வெளிநாட்டுப் பயண வாய்ப்புகள் ஏற்படலாம். சிலர் வெளியூர் பயணம் செல்வார்கள். எதிர்பாலினத்தாருடன் பழகும் போது கவனம் தேவை.


மாணவர்களுக்கு : கல்வியில் முன்னேற்றமடைய கூடுதல் கவனத்துடன் படிப்பீர்கள். ஆசிரியர், சக மாணவர் மத்தியில் நன்மதிப்பு உண்டாகும்.


பரிகாரம் : காளியை வழிபாடு செய்து வர, பணத் தட்டுப்பாடு நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை உண்டாகும்.


மதிப்பெண்கள்: உங்கள் நட்சத்திரத்துக்கு 79% நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்


+: சுபநிகழ்ச்சி நடக்கும்


-: பொருட்களைக் கையாளும் போது கவனம் தேவை.
*************************************************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in