இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்
Updated on
1 min read

மேஷம்: வாழ்க்கையின் நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். வெளியூரிலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வரும்.

ரிஷபம்: உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். குலதெய்வப் பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் சென்று நிறைவேற்றுவீர்கள். பழைய சிக்கலில் ஒன்று தீரும்.

மிதுனம்: எதையும் புதிய கோணத்தில் சிந்திப்பீர்கள். வீடு, வாகன பராமரிப்புச் செலவு திட்டமிட்டதைவிட அதிகரிக்கும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள்.

கடகம்: தாய்வழி உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும். சுபநிகழ்ச்சிகளாலும், விருந்தினர்களின் வருகையாலும் வீடு களைகட்டும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும்.

சிம்மம்: புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். நவீன மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். மனைவிவழி உறவினரால் ஆதாயம் உண்டு.

கன்னி: பழைய பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கும். கொஞ்சம் பொறுமையை இழப்பீர்கள். உறவினர், நண்பர்களின் பேச்சும், செயல்பாடுகளும் உங்களுக்கு பிடிக்காமல் போகும்.

துலாம்: வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். பண விஷயத்தில் கறாராக இருங்கள். அநாவசியச் செலவுகளை தவிர்த்து விடுங்கள். ஒருவித பதட்டம், படபடப்புடன் காணப்படுவீர்கள்.

விருச்சிகம்: குடும்பத்தாரின் ஆதரவு அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் புதியவர்களின் நட்பு கிடைக்கும். நீண்டநாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். திடீர் பயணம் உண்டு.

தனுசு: உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். பிரபலமானவர்களின் சந்திப்பு நிகழும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள்.

மகரம்: பிரச்சினைகளின் ஆணிவேரை கண்டறிவீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். புண்ணிய தலங்களுக்கு சென்று வருவீர்கள். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

கும்பம்: உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்க முற்படுங்கள் வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். வரவேண்டிய பணத்தை போராடி பெறுவீர்கள். வாகனம் செலவு வைக்கும்.

மீனம்: சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் காரியங்களில் வெற்றி பெறுவீர்கள்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in