இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்
Updated on
1 min read

மேஷம்: பழைய வாகனத்தை மாற்றிவிட்டு புது வாகனம் வாங்குவீர்கள். வீடு, வாகனம் வாங்க வங்கிக் கடன் கிடைக்கும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் நல்ல விதத்தில் முடியும்.

ரிஷபம்: சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். மின்சாதனங்கள் வாங்குவீர்கள். கணவன் - மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.

மிதுனம்: பணவரவு திருப்திகரமாக இருக்கும். செலவுகளும் அடுத்தடுத்து ஏற்படும். சகோதரர்களுடன் இருந்துவந்த மனக்கசப்பு நீங்கும். பால்ய நண்பரை எதிர்பாராது சந்திப்பீர்கள்.

கடகம்: வெற்றி வாய்ப்புகள் தேடி வரும். புது வாகனம், ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். வழக்குகள் சாதகமாகும். கலைப்பொருட்கள் சேரும்.

சிம்மம்: எதற்கெடுத்தாலும் உணர்ச்சிவசப்படுவீர்கள். இதனால் உடல்நலமும் அடிக்கடி பாதிக்கப்படும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். வாகனம் செலவு வைக்கும்.

கன்னி: திட்டமிட்டபடி பயணங்கள் அமையும். நீண்ட நாட்களாக விலகியிருந்த நண்பர்கள், உறவினர்கள் மீண்டும் வந்து பேசுவார்கள். திடீர் பணவரவு உண்டு. வழக்கில் திருப்பம் ஏற்படும்.

துலாம்: எதிர்காலத்துக்கான திட்டங்கள் தீட்டுவீர்கள். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். வெற்றி பெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு.

விருச்சிகம்: கடந்தகால இனிய சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். வீட்டை புதுப்பிக்க திட்டமிடுவீர்கள். அரசு காரியங்கள் சாதகமாக முடியும். விருந்தினர் வருகை அதிகரிக்கும்.

தனுசு: எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். பிள்ளைகள் பொறுப்புடன் செயல்படுவார்கள். வெளிநாட்டிலிருப்பவர்கள், வேற்றுமொழி பேசுபவர்களால் திடீர் திருப்பம் உண்டாகும்.

மகரம்: வாழ்க்கையில் ஒருவித சலிப்பு, வெறுப்பு, தாழ்வுமனப்பான்மை வந்து போகும். யோகா, தியானத்தில் மனதை செலுத்துங்கள். அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம்.

கும்பம்: உங்களின் முன்னேற்றத்துக்கு தடைகள் வந்தாலும் போராடி வெற்றி பெறும் சக்தி பெறுவீர்கள். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். மனைவிவழி உறவினர் உதவுவார்.

மீனம்: தோற்றப் பொலிவு கூடி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். சவாலான காரியங்களையும் சர்வ சாதாரணமாக முடித்துக் காட்டுவீர்கள்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in