இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்
Updated on
1 min read

மேஷம்: தோற்றப் பொலிவு கூடும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வெளிவட்டாரத்தில் மகிழ்ச்சி தங்கும்.

ரிஷபம்: செலவுகளைக் குறைக்க முடியாமல் திணறுவீர்கள். குடும்பத்தாரின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுங்கள். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம்.

மிதுனம்: குடும்பத்தைப் பற்றிய கவலைகள் அவ்வப்போது வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் அநாவசியமாக யாரையும் விமர்சிக்க வேண்டாம். எதிர்மறை எண்ணங்கள் தோன்றும்.

கடகம்: சொந்த முயற்சியால் முன்னேறுவீர்கள். நண்பர்கள், உறவினர்களிடம் செல்வாக்கு கூடும். சொந்தபந்தங்களில் சிலர் உதவி கேட்டு வருவார்கள். ஆடை, ஆபரணங்கள் சேரும்.

சிம்மம்: புகழ், கவுரவம் கூடும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். சமூகத்தில் பிரபலமானவர்களால் ஆதாயம் கிடைக்கும். சுபச் செலவுகள் உண்டு.

கன்னி: குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். மதிப்பு, மரியாதை கூடும். திடீர் பயணம் உண்டு.

துலாம்: யாரையும் நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். நெருங்கியவர்கள் சிலர் உங்களை உதாசீனப்படுத்தி பேசுவார்கள். வேலைச்சுமை அதிகரிக்கும். வாகனம் செலவு வைக்கும்.

விருச்சிகம்: நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். பிள்ளைகளால் மதிப்பு கூடும். தடைபட்ட திருமண காரியங்கள் மீண்டும் கூடிவரும். வீடு, மனை வாங்கும் சூழல் உருவாகும்.

தனுசு: அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பழைய சொந்தபந்தங்கள் உங்களைத் தேடி வருவார்கள். உங்களின் யோசனைகள் அனைவரும் ஏற்கும்படி இருக்கும்.

மகரம்: உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். உங்களின் நீண்டநாள் கனவு நினைவாகும். கலைப்பொருட்கள் வாங்குவீர்கள்.

கும்பம்: திட்டமிட்ட காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் உண்டு.

மீனம்: சகோதரர் வகையில் நன்மை உண்டு. பூர்வீக சொத்து பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு கிடைக்கும். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பணவரவு திருப்தி தரும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in