இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்
Updated on
1 min read

மேஷம்: தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது. வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துச் செல்லுங்கள். எல்லாவற்றுக்கும் அடுத்தவரை குறை கூறாதீர்கள்.

ரிஷபம்: குடும்பத்தினரிடம் கோபத்தைக் காட்டாதீர்கள். சாட்சிக் கையெழுத்திடுவது, ஜாமீன் தருவது வேண்டாம். தடைகள், இடையூறு வந்தாலும், அவற்றையும் தாண்டி முன்னேறுவீர்கள்.

மிதுனம்: கணவன் - மனைவிக்குள் மனம்விட்டு பேசுவீர்கள். அதிகாரத்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். நாடி வந்த உறவினர் களுக்கு உதவி செய்வீர்கள். எதிர்பாராத சந்திப்புகள் நிகழும்.

கடகம்: மனதில் நம்பிக்கை, உற்சாகம் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். பழைய பிரச்சினைகள் கட்டுக்குள் வரும். கல்யாண முயற்சி கைகூடும். பணவரவு உண்டு.

சிம்மம்: தடைபட்ட வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். உற வினர்களால் நன்மை உண்டு. பழுதான வீடு, வாகனத்தை சரி செய்வீர்கள். ஆன்மிகம், தியானம், யோகாவில் நாட்டம் அதிகரிக்கும்.

கன்னி: தாழ்வு மனப்பான்மைக்கு இடம் தராமல் நம்பிக்கையுடன் செயல்படுங்கள். அடுத்தவர் மனம் புண்படும்படி பேசாதீர்கள். எல்லாவற்றிலும் மற்றவருடன் உங்களை ஒப்பிட வேண்டாம்.

துலாம்: உங்கள் நிர்வாகத் திறமை வெளிப்படும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். மனைவி வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதிய நபர் அறிமுகத்தால் ஆதாயம் உண்டு.

விருச்சிகம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். பிரபலங்களின் நட்பால் ஆதாயம் உண்டாகும். வெளி வட்டாரத்தில் மரியாதை, அந்தஸ்து உயரும். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள்.

தனுசு: பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிந்து ஊக்கப்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். நட்பு வட்டம் விரிவடையும். எக்காரியத்திலும் நிதானம் தேவை.

மகரம்: வீண், ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது நல்லது. தாய் வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். மற்றவர்களுக்காக பொறுப்புகளை ஏற்பீர்கள். யாரையும் எடுத்தெறிந்து பேசக்கூடாது.

கும்பம்: திட்டவட்டமாக செயல்பட்டு முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். வாகன வசதி பெருகும். சொத்துப் பிரச்சினை சுமுகமாக தீரும்.

மீனம்: புதியவர்களின் அறிமுகம் கிடைக்கும். பழைய பிரச்சினை களுக்கு தீர்வு காண்பீர்கள். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். பழைய சொந்த பந்தங்கள் தேடி வந்து உறவாடுவார்கள்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in