Published : 08 Dec 2019 10:15 AM
Last Updated : 08 Dec 2019 10:15 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: கைமாற்றாக கேட்டிருந்த இடத்தில் பணம் கிடைக்கும். சொத்து பிரச்சினைகள் தீரும். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியோ, உத்தரவாதமோ தரவேண்டாம்.

ரிஷபம்: சகோதரர் வகையில் பிரச்சினைகள் வந்து நீங்கும். ரத்த அழுத்தம் அதிகரிக்கக் கூடும். மனைவியுடன் எதிர்பாராத வகையில் கருத்து மோதல்கள் வரும். வாகனம் செலவு வைக்கும்.

மிதுனம்: நிர்வாகத் திறன் அதிகரிக்கும். வரவேண்டிய பணம் கைக்கு வரும். பிள்ளைகளின் தனித் திறமைகளை கண்டறிந்து ஊக்குவிப்பீர்கள். மனைவிவழி உறவினர்களால் ஆதாயம் உண்டு.

கடகம்: சவாலான காரியங்களையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். பிள்ளைகள் சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள்.

சிம்மம்: உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். அடிக்கடி தலைகாட்டிய முன்கோபம் விலகும். மனைவியுடன் இருந்துவந்த மோதல்போக்கு மறையும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும்.

கன்னி: கணவன் - மனைவிக்குள் ஈகோ பிரச்சினைகள் வந்து நீங்கும். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். கடன் பிரச்சினையை நினைத்து அவ்வப்போது கலக்கமடைவீர்கள்.

துலாம்: அடிமனதில் இருந்துவந்த போராட்டம் நீங்கும். உறவினர்களின் ஆதரவு கிட்டும். புதிய நண்பர்களின் அறிமுகத்தால் உற்சாகமடைவீர்கள். வெளியூர் பயணம் ஏற்படக்கூடும்.

விருச்சிகம்: மறைமுக எதிரிகளைக் கண்டறிந்து ஒதுக்குவீர்கள். வேலைகள் தடையின்றி முடியும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். வீட்டை விரிவுபடுத்தி கட்ட முயற்சிப்பீர்கள்.

தனுசு: திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். சுபநிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். உறவினர்கள் உங்களைப் பற்றி பெருமையாக பேசுவார்கள். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

மகரம்: பிரபலங்கள் அறிமுகமாவார்கள். விருந்தினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். பணவரவு திருப்தி தரும்.

கும்பம்: கோபதாபங்கள் குறையும். தடைபட்ட அரசு வேலைகள் உடனே முடியும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். விலகியிருந்த பழைய சொந்தபந்தங்கள் தேடி வருவார்கள்.

மீனம்: முயற்சிகள் வெற்றி தரும். பூர்வீக சொத்து இழுபறிக்கு பின் கைக்கு வரும். உறவினர்களால் அனுகூலம் உண்டு. கோயில் திருப்பணிகளுக்கு கணிசமான தொகை வழங்குவீர்கள்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x