இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்
Updated on
1 min read

மேஷம்: குடும்பத்தினருடன் மனம்விட்டு பேசுவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். பால்ய நண்பர் உதவுவார்.

ரிஷபம்: உடன்பிறந்தவர்களால் சில காரியங்கள் நிறைவேறும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். பழைய கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் வரும். பங்கு வர்த்தகம் லாபம் தரும்.

மிதுனம்: கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். திடீர் பயணம் ஏற்படலாம்.

கடகம்: சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியாவசிய செலவுகள் அடுத்தடுத்து ஏற்படும். கணவன் - மனைவிக்குள் நிலவிய கருத்துவேறுபாடு பிற்பகலில் நீங்கும்.

சிம்மம்: புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். சமூகத்தில் பிரபலமானவருடன் எதிர்பாராத சந்திப்பு நிகழும். வீட்டை விரிவுபடுத்துவீர்கள். முக்கிய விவகாரங்களில் எச்சரிக்கை தேவை.

கன்னி: கனிவாக பேசி காரியங்களை சாதிப்பீர்கள். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். உங்களை தவறாக நினைத்துக் கொண்டிருந்தவர்களின் மனம் மாறும்.

துலாம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். நீண்டநாள் பிரார்த்தனையை குடும்பத்துடன் சென்று நிறைவேற்றுவீர்கள்.

விருச்சிகம்: வீடு, வாகன பராமரிப்பு செலவுகள் திட்டமிட்டதைவிட அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. மூத்த சகோதரர் உதவுவார்.

தனுசு: சாதுர்யமாகப் பேசி காரியங்களை கச்சிதமாக முடிப்பீர்கள். பிள்ளைகளால் உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும்.

மகரம்: சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். அழகு, இளமை கூடி புதுப் பொலிவுடன் திகழ்வீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். நட்பு வட்டம் விரியும்.

கும்பம்: மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். மாலையில் மகிழ்ச்சி தரும் செய்தி வரும்.

மீனம்: முக்கிய கோப்புகளை கையாளும்போது அலட்சியம் காட்ட வேண்டாம். உடல் நலத்தில் அக்கறை காட்டுவது நல்லது. ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in