இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்
Updated on
1 min read

மேஷம்: பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வீண் குழப்பங்களில் இருந்து விடுபடுவீர்கள். தொட்ட காரியங்கள் எல்லாம் துலங்கும். அனைத்து காரியங்களும் தடையின்றி முடியும்.

ரிஷபம்: திருமணப் பேச்சுவார்த்தை நல்ல விதத்தில் முடியும். உறவினர், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். சுப நிகழ்ச்சி களில் கவுரவிக்கப்படுவீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

மிதுனம்: அநாவசிய, ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது நல்லது. குடும்ப விஷயங்களை வெளி நபர்களிடம் பேசக் கூடாது. யாரிடமும் வீண் பேச்சு, விமர்சனங்கள், வாக்குவாதங்கள் வேண்டாம்.

கடகம்: எதிலும் குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். பழுதான பழைய வாகனத்தை மாற்றி புதிது வாங்குவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நிகழும். பணவரவு, பொருள் வரவு கூடும்.

சிம்மம்: எத்தனை தடைகள், பிரச்சினைகள் வந்தாலும் அவற்றை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். விஐபிகளின் ஆதரவுடன் சில வேலைகள் முடிவடையும். பேச்சில் நிதானம் தேவை.

கன்னி: எல்லா வகையிலும் வெற்றி கிடைக்கும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். பெரிய மனிதர்கள் ஆதரவாக இருப்பார்கள். திடீர் பணவரவு உண்டு. வெளியூர் பயணத்தால் ஆதாயம் கிடைக்கும்.

துலாம்: நண்பர்கள், உறவினர்கள் வருகையால் வீடு களைகட்டும். பழைய இனிய சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். யாரையும் எடுத்தெறிந்து பேசக்கூடாது.

விருச்சிகம்: விஐபிகளின் அறிமுகம் கிடைக்கும். கணவன் - மனைவிக்குள் மனஸ்தாபம் நீங்கி அன்யோன்யம் அதிகரிக்கும். வெளியூர், வெளி மாநிலம் செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.

தனுசு: எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். வரவேண்டிய பணம் கைக்கு வரும். புதிய வாகனம் வாங்குவீர்கள். வெளிநாட்டில் இருப்பவர் களால் ஆதாயம் அடைவீர்கள். எக்காரியத்திலும் நிதானம் அவசியம்.

மகரம்: தாழ்வு மனப்பான்மைக்கு இடம்தராமல் நம்பிக்கை, துணிச் சலுடன் செயல்படுங்கள். யாரை நம்புவது என்ற குழப்பம் வந்து நீங்கும். கையொப்பமிட்டு காசோலைகளை வைக்க வேண்டாம்.

கும்பம்: வேலைச்சுமையால் படபடப்பு, டென்ஷனுடன் காணப் படுவீர்கள். எந்த காரியமும் பலமுறை முயன்ற பிறகே முடியும். சோர்வு, களைப்பு வந்து நீங்கும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.

மீனம்: எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி வரும். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். எங்கு சென்றாலும் மதிப்பு, மரியாதை கூடும். அனைவரையும் அரவணைத்துச் செல்வீர்கள்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in