இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்
Updated on
1 min read

மேஷம்: சகோதரர்களுடன் மனவருத்தம் ஏற்படக் கூடும். கடன் வாங்கும் சூழல் உண்டாகும். மின் சாதனங்கள் பழுதாகும். அவற்றை கையாளும்போது கவனம் தேவை. திடீர் பயணம் உண்டு.

ரிஷபம்: எத்தனை பிரச்சினைகள் வந்தாலும் எதிர்கொள்ளும் மனப்பக்குவம் கிடைக்கும். உங்கள் மீது அக்கறை கொண்ட நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். புத்துணர்ச்சி பிறக்கும்.

மிதுனம்: வழக்குகளில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. இழுபறியாக இருந்துவந்த வேலைகள் முடியும். தந்தைவழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும்.

கடகம்: கல்வித் தகுதியை அதிகப்படுத்திக் கொள்வீர்கள். அறிஞர்களின் நட்பு கிடைக்கும். சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். சிலருக்கு பெரிய பொறுப்புகள் கிடைக்கக் கூடும்.

சிம்மம்: சோர்வு, களைப்பு நீங்கும். புது முயற்சிகளில் உற்சாகமாக இறங்குவீர்கள். வீடு, மனை விற்பது, வாங்குவதும் லாபகரமாக முடியும். விருந்தினர் வருகை உண்டு.

கன்னி: தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். நீண்டநாள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். கலைப்பொருட்கள் சேரும்.

துலாம்: மனதில் குதூகலம் பிறக்கும். உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். வேற்று மொழி பேசுபவர்களால் சில காரியங்கள் நிறைவேறும். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

விருச்சிகம்: உடல் உஷ்ணம் அதிகரிப்பால் சில தொந்தரவுகள் உண்டாகும். யாருக்கும், எதற்காகவும் உறுதிமொழி தரவேண்டாம். பொதுக் காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

தனுசு: அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. திடீர் பயணங்கள் வரும். புது வேலையில் சேருவீர்கள். விலகியிருந்த நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் விரும்பி வந்து பேசுவார்கள்.

மகரம்: எதிர்பார்த்த வகையில் பணம் வரும். நண்பர்களிடம் இருந்துவந்த பகை நீங்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். அக்கம்பக்கத்தினரின் உதவி தக்கசமயத்தில் கிடைக்கும்.

கும்பம்: எதையும் தாங்கும் மனவலிமை கிட்டும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். எதிர்ப்புகள், ஏமாற்றங்களை சமாளித்து வெற்றி பெறுவீர்கள். சகோதரர்களும் பக்கபலமாக இருப்பார்கள்.

மீனம்: தைரியமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சகோதரர்களிடம் நிலவிய கருத்துவேறுபாடு நீங்கும். நிலம் வாங்குவது விற்பது லாபம் தரும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in