Published : 25 Nov 2019 05:11 PM
Last Updated : 25 Nov 2019 05:11 PM

இந்த வாரம் இப்படித்தான் - நட்சத்திரப் பலன்கள்; எந்தக் கிழமைகளில் என்னென்ன பலன்கள்? - திருவோணம் முதல் ரேவதி வரை நவம்பர் 25 முதல் டிசம்பர் 1ம் தேதி வரை)

இந்த வாரம் இப்படித்தான் - நட்சத்திரப் பலன்கள்; எந்தக் கிழமைகளில் என்னென்ன பலன்கள்? - திருவோணம் முதல் ரேவதி வரை நவம்பர் 25 முதல் டிசம்பர் 1ம் தேதி வரை)

- ஜோதிடர் ஜெயம் சரவணன்


திருவோணம் -
நற்பலன்கள் நடக்கும் என சொல்வதை விட, எல்லாவிதமான யோகங்களும் கிடைக்கும் என்று சொல்வது தான் சரி. வீடு வாங்குவது முதல் பதவி உயர்வு பெறுவது வரை திருமணம், குழந்தை பாக்கியம், வெளிநாடுகளுக்கு செல்லுதல், வெளிநாடுகளில் பணிபுரிதல் என எல்லாவிதமான யோகங்களும் கிடைக்கும். பயணங்களால் லாபம் கிடைக்கும்.நிலம் பூமி மூலம் ஆதாயம் கிடைப்பது, அதிர்ஷ்ட வாய்ப்புகள் திடீரென கிடைப்பது, என இந்த வாரம் நன்மைகள் அதிகம் நடக்கும் வாரமாக இருக்கிறது.

உத்தியோகம் -
வேலையில் மனநிறைவும் திருப்தியும் உண்டாகும். எடுத்த வேலைகள் அனைத்தையும் எளிதாக முடிப்பீர்கள். எதிர்பாராத பதவி உயர்வு கிடைக்கும். ஊதிய உயர்வும் கிடைக்கும். ஒருசிலருக்கு தலைமைப்பதவி வரை கிடைக்க வாய்ப்பிருக்கிறது. அலுவலக விஷயமாக வெளிநாடு செல்லுதல் உண்டாகும்.சேவை சார்ந்த வேலை செய்பவர்கள் அதிக வளர்ச்சி காண்பார்கள். வாடிக்கையாளர்கள் அதிகமாவார்கள். வருமானம் இரு மடங்காக இருக்கும்.

தொழில் -
தொழில் அசாத்திய வளர்ச்சி பெறும். பெரிய அளவிலான ஒப்பந்தங்கள் கிடைக்கும். வெளிநாடுகளில் இருந்து உதவிகள் கிடைக்கும். உங்களுடன் கூட்டு சேர பலரும் முன்வருவார்கள். உங்கள் தொழிலை மற்றொரு தொழிலோடு இணைத்து செயல்பட வைப்பீர்கள். புதிய நிறுவனங்கள் ஆரம்பித்தல், கிளை நிறுவனங்கள் ஆரம்பித்தல் போன்றவை நடக்கும்.புதிய தொழில் முனைவோர் நல்ல வாய்ப்புகளைப் பெறுவார்கள். பங்கு வர்த்தக துறையில் இருப்பவர்களுக்கு அபார வளர்ச்சி உண்டாகும். லாபம் இரு மடங்காக இருக்கும். வியாபாரத்தில் வளர்ச்சி முன்னேற்றம் உண்டாகும்.


பெண்களுக்கு -

சொத்தில் பங்கு கிடைக்கும். பாகப்பிரிவினைகள் சுமூகமாக இருக்கும். .சகோதரர்கள் விட்டுக் கொடுப்பார்கள். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நடக்கும். புத்திரபாக்கியம் கிடைக்கும். ஆரோக்கியம் சீராகும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும்.


மாணவர்களுக்கு -
அருமையான வாரம். தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுப்பீர்கள். தொலைதூரக்கல்வியில் சேர்வீர்கள்.


கலைஞர்களுக்கு -
நல்ல வாய்ப்புகளும், நிறைய ஒப்பந்தங்களும் கிடைக்கும், அரசு வழியில் ஆதாயம் உண்டாகும். பயிற்சி மையங்கள் ஆரம்பிப்பீர்கள்.


பொதுப்பலன் -
எல்லா வாய்ப்புகளும் நல்ல வாய்ப்புகளே. கிரகங்கள் நல்ல நிலையில் இருப்பதால் பிரச்சினைகள் அனைத்தும் தீர வழி உண்டாகும். கிடைக்கின்ற அத்தனை வாய்ப்புகளையும் பயன்படுத்தி சொத்துக்கள் வாங்குதல், குடும்பத்தை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளுதல், தேவைகளை பூர்த்தி செய்தல் என திட்டமிட்டு செய்தால் எதிர்காலத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் வாழலாம். இந்த காலகட்டம் பொன்னான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் காலகட்டமாகும்.


இந்த வாரம் -
திங்கள் - வீடு, நிலம் போன்றவற்றை பத்திரப்பதிவு செய்ய ஏற்றநாள். ஆதாயங்கள் அதிகமாகும். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.
செவ்வாய் - இன்று தங்களது உழைப்பு மற்றவர்களுக்காக இருக்கும். உங்களுக்கு கிடைக்கவேண்டிய ஆதாயங்கள் வேறொரு நபருக்கு செல்லும். உங்கள் பெயரை பயன்படுத்தி மற்றவர்கள் ஆதாயமடைவார்கள்.
புதன் - கடன்களை அடைக்க வாய்ப்புகள் கிடைக்கும். வங்கிக் கடன் கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. அல்லது வங்கியிலிருந்து கடன் தருவதற்கு ஒப்புதல் கிடைக்கப் பெறுவீர்கள். எதிர்பார்த்த ஒரு காரியம் நடந்து லாபம் கிடைக்கப் பெறுவீர்கள்.
வியாழன் - பொறுமையும், நிதானமும் தேவை. மற்றவர்களிடம் பேசும்போது கவனமாக இருங்கள். உங்களுடைய பேச்சு மற்றவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தலாம். நகைச்சுவையாக பேசுவதாக நினைத்து மற்றவர்களை காயப்படுத்த முயல வேண்டாம்.
வெள்ளி -தொலைதூர நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். வெகு காலமாக மறந்திருந்த நண்பரை சந்திக்க நேரிடும். புதிய நட்பு ஒன்று ஏற்படும், அவர்களால் ஆதாயம் ஏற்படும்.
சனி - இன்று சந்திராஷ்டமம், கவனமாக இருக்கவேண்டும். பயணங்களைத் தவிர்க்க வேண்டும். ஒப்பந்தங்கள் எதுவும் போடக்கூடாது. முக்கிய பேச்சுவார்த்தைகளை தள்ளி வையுங்கள்.
ஞாயிறு - பிரச்சினைகள் அதிகரிக்கும், அலைச்சல்கள் அதிகரிக்கும், ஒன்றுமில்லாத விஷயத்திற்கு ஊர் முழுவதும் சுற்றி வருவீர்கள். பெரிய நன்மை ஏதுமில்லை.


வணங்க வேண்டிய தெய்வம் - ஸ்ரீ யோக நரசிம்மரை வணங்குங்கள். நிறைய நன்மைகளைப் பெறலாம். முன்னேற்றங்கள் ஏற்படும். தேவைகள் பூர்த்தியாகும்.
******************************************************************


அவிட்டம் -
நன்மைகள் அதிகமாக நடக்கும். இந்த வாரம் நல்ல வாரமாக இருக்கிறது. எடுத்த முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். சொந்த வீடு கனவு இப்போது நனவாகும். பாதியில் நின்ற கட்டிடப் பணிகள் இப்போது நிறைவடையும். தாமதித்து கொண்டிருந்த திருமண முயற்சிகள் இப்பொழுது உறுதியாகும். திருமண தேதி குறிக்கப்படும். நீண்ட நாள் நோயில் இருந்து விடுபடுவீர்கள். மருத்துவ செலவுகள் குறையும்.


உத்தியோகம் -
வேலையில் ஓய்வு கிடைக்காவிட்டாலும் உற்சாகமான மனநிலையிலேயே இருப்பீர்கள். எடுத்த வேலையை கச்சிதமாக முடித்து தருவீர்கள். அலுவலகத்தில் அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள். . பெரிய நிறுவனத்திலிருந்து வேலைக்காக அழைப்பு வரலாம். தாராளமாக ஏற்றுக் கொள்ளுங்கள். விற்பனைப் பிரதிநிதிகள் தங்கள் இலக்கை எட்டி மகிழ்ச்சி அடைவார்கள். கட்டுமானத் தொழில் செய்பவர்கள் மனநிறைவான ஊதியம் பெற்று மகிழ்வார்கள். கடைகள், வணிக நிறுவனங்களில் பணிபுரிவோருக்கு பதவி உயர்வு உள்ளிட்ட சலுகைகள் கிடைக்கும். ஊதிய உயர்வும் உண்டாகும். சேவை சார்ந்த வேலை செய்பவர்களுக்கு நல்ல வளர்ச்சியை ஏற்படுத்தி தரும் வாரம் .


தொழில் -
நல்ல வளர்ச்சி உண்டு. நிறைய ஆர்டர்கள் பெறுவீர்கள். பழைய பாக்கிகள் எல்லாம் இப்பொழுது வசூலாகும். எனவே பணவரவுக்கு தடையில்லை. சிறு தொழில் செய்பவர்கள் வளர்ச்சி அடைவார்கள். தங்கள் தொழிலை விரிவு படுத்துவதற்கான வங்கிக் கடன் எளிதாக கிடைக்கும். கூடுதல் இயந்திரங்கள் வாங்குவீர்கள். ரியல் எஸ்டேட் துறையில் இருப்பவர்கள் வளர்ச்சி காண்பார்கள். இதுவரை விற்காத வீடு மனைகள் கூட இப்பொழுது விற்பனையாகும். மீண்டும் தொழில் சூடுபிடிக்கும். புதிய தொழில் முனைவோர் நல்ல வாய்ப்புகளை பெற்று தொழிலை ஆரம்பிப்பார்கள். பங்கு வர்த்தகத் துறையில் இருப்பவர்களுக்கு லாபம் இரட்டிப்பாகும்.வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். புதிய கிளைகளை ஆரம்பிக்கும் எண்ணமும் உண்டாகும். அபார வளர்ச்சி ஏற்படும்.


பெண்களுக்கு -
மன மகிழ்வும் மனநிறைவும் உண்டாகும். ஆரோக்கியம் சீராகும். கர்ப்பப்பை சம்பந்தமான பிரச்சினைகள் தீரும். மருத்துவச் செலவுகள் குறையும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் உறுதியாகும். இதுவரை புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு மருத்துவ உதவியோடு புத்திரபாக்கியம் உண்டாகும்.


மாணவர்களுக்கு -

பயிற்சி வகுப்புகளில் சேர்வீர்கள். புதிய மொழி கற்கும் ஆர்வம் ஏற்படும். அதற்கான பயிற்சி மையத்தில் சேர்வீர்கள். தேர்வில் நல்ல மதிப்பெண் கிடைக்கும்.


கலைஞர்களுக்கு -
அயல்நாடுகளில் கலை நிகழ்ச்சிகள் நடத்தும் வாய்ப்பு உண்டு. அதனால் பெரிய வருமானம் கிடைக்கவும் வாய்ப்பு இருக்கிறது, உங்கள் துறை சம்பந்தப்பட்ட பயிற்சி மையங்களை ஆரம்பிப்பீர்கள்.


பொதுப்பலன் -
பயணங்களால் அதிக லாபம் ஏற்படும். நிலம் சம்பந்தப்பட்ட வியாபாரம் நல்ல சாதக பலனை தரும். கமிஷன் தொழில் செய்பவர்கள் பெரிய லாபத்தை பெறுவார்கள். இடமாற்றம், ஊர் மாற்றம் ஏற்படும். அது உங்கள் விருப்பத்தின் பேரிலேயே இருக்கும். பணவரவில் எந்த தாமதமும் இருக்காது. குறித்த நேரத்தில் பணம் கிடைக்கும்.எடுக்கின்ற முயற்சிகள் அனைத்தும் முழு வெற்றியை தரும். திருமண முயற்சிகள் சாதகமாக இருக்கும். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகளுக்கு இப்பொழுது குழந்தை பாக்கியம் உண்டாகும். இதுவரை தொழில் தொடங்கும் சிந்தனை இல்லாதவர்கள்கூட இப்பொழுது சொந்த தொழில் ஆரம்பிப்பார்கள்.


இந்த வாரம் -
திங்கள் - அலைச்சல் அதிகரிக்கும். செலவுகள் அதிகமாகும். வாகனப் பழுது ஏற்படும். தொலைதூரப் பயணங்களைத் தவிர்க்க வேண்டும்.
செவ்வாய் - நிலம் சம்பந்தப்பட்ட ஆதாயம் ஒன்று ஏற்படும். வியாபார பேச்சுவார்த்தைகள் வெற்றியைத் தரும். பணவரவு திருப்தி தரும்.
புதன் - அடுத்தவர் விஷயங்களில் தலையிட வேண்டாம். நண்பர்கள் பணம் கேட்டு தொல்லை தருவார்கள்.
வியாழன் - வங்கியில் எதிர்பார்த்த கடன் இன்று கிடைக்கும். அல்லது நல்ல தகவல் வந்து சேரும். ஆதாயம் தரும் பயணங்கள் உண்டாகும். பணவரவு மனநிறைவைத் தரும்.
வெள்ளி - உங்கள் செயல் மற்றவர்களுக்கு எரிச்சலைத் தரும். அளவாகப் பேசுங்கள். தேவையில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். யாருக்கும் ஆலோசனை தரக்கூடாது.
சனி- நன்மைகள் அதிகமாக நடக்கும். எடுத்த முயற்சிகள் வெற்றிதரும். ஆதாயம் தரும் வேலை ஒன்றை செய்து முடிப்பீர்கள்.
ஞாயிறு - தொலைதூரப் பயணம் ஒன்று ஏற்படும். அதனால் ஆதாயம் உண்டாகும். பழைய நண்பர் ஒருவரை ஒருவரை சந்திப்பீர்கள். அவரால் லாபம் ஏற்படும் விஷயம் ஒன்று நடைபெறும்.


வணங்கவேண்டிய தெய்வம் -
விஷ்ணு துர்கைக்குசெவ்வரளி மலர் கொண்டு அர்ச்சனை செய்து, நெய் தீபமேற்றி வழிபடுங்கள். நன்மைகள் அதிகமாகும். மனக்குறை நீங்கும், மகிழ்ச்சி அதிகரிக்கும்.

**************************************************************


சதயம் -
இந்த வாரம் அதிக நற்பலன்கள் நடக்கும் வாரம் . முயற்சிகள் அனைத்தும் முழு வெற்றியைத்
தரும். சொந்த வீடு வாங்கும் கனவு நனவாகும். திருமண முயற்சிகள் கைகூடும். புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும். எதிர்ப்புகள் காணாமல் போகும்.பிறருக்கு உதவி செய்து அதன் மூலம் மன நிறைவு அடைவீர்கள். கனவுகள் நனவாகும் நேரம். வாய்ப்புக்கள் அதிர்ஷ்டமாக மாறும். தம்பதிகளுக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை உண்டாகும். குழந்தைகளின் எதிர்காலம் கருதி அவர்களுக்கான சேமிப்பு தொடங்குவீர்கள். வங்கிகளில் இருந்த கடன் பிரச்சினைகள் தீர்ந்து மன அமைதி கொள்வீர்கள்.


உத்தியோகம் -
பணியில் மன நிறைவு உண்டாகும். பெரிய பிரச்சினைகள் ஏதுமில்லை. இடமாற்றம் விரும்பினால் உண்டாகும். இப்பொழுது முயற்சி செய்தால் வெளிநாடுகளுக்கு செல்லலாம். அங்கு உடனே வேலை கிடைக்கும். கடைகள் வணிக நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் பதவி உயர்வு பெறுவார்கள். சம்பள உயர்வு பெறுவார்கள்.சேவை சார்ந்த வேலை செய்பவர்கள் அதிக லாபம் பெறுவார்கள் புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள்.


தொழில் -
தொழிலை விரிவுபடுத்த வங்கிக் கடன் கிடைக்கும். நவீன இயந்திரங்களை வாங்குவீர்கள். அதற்கான முயற்சிகள் இப்பொழுது நடக்கும். ஊழியர்கள் உங்களுக்கு உண்மையாக இருப்பார்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய ஊழியர்களை தேர்ந்தெடுப்பீர்கள். உங்கள் தொழிலுக்கு மாற்றாக வேறு ஒரு தொழிலை செய்ய முற்படுவீர்கள். அதற்கான வேலைகளை இந்த வாரம் தொடங்குவீர்கள். அது தொடர்பான வல்லுநர்களை கலந்தாலோசிப்பீர்கள். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். புதிய ஆட்களை பணிக்கு அமர்த்துவீர்கள். பங்கு வர்த்தகத் துறையினருக்கு நல்ல வளர்ச்சி உண்டு. கட்டுமானத் தொழில் செய்பவர்கள் இதுவரை இருந்த தேக்க நிலை மாறி ,லாபகரமாக தங்கள் தொழிலை நடத்துவார்கள். முதலீடுகள் லாபகரமான பலனைத்தரும்.


பெண்களுக்கு -
நல்ல முன்னேற்றங்கள் ஏற்பட வாழ்க்கைத்துணை உதவி செய்வார். வீட்டிலிருந்தே வேலை செய்து பணம் சம்பாதிக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். கைவினைப் பொருட்கள் செய்வதில் ஆர்வம் உள்ள நீங்கள் அதை வியாபாரமாக மாற்றி பணம் சம்பாதிப்பீர்கள். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும். ஆண் வாரிசு எதிர்பார்த்தவர்களுக்கு இப்பொழுது ஆண் வாரிசு கிடைக்கும்.


மாணவர்களுக்கு -

கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு. புதிய மொழி கற்கும் ஆர்வம் ஏற்படும். வெளிநாடு செல்லும் முயற்சி வெற்றி பெறும். கல்வி சுற்றுலா செல்வீர்கள்.


கலைஞர்களுக்கு -

உங்கள்திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். புகழ் கிடைக்கும்.புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். பண ஆதாயம் உண்டு. அரசின்ஆதரவு கிடைக்கும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும்.


பொதுபலன் -
கருத்து வேறுபாடுகளால் பிரிந்திருந்த தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். உண்மையான நண்பர்கள் உற்ற துணையாக இருப்பார்கள். வழக்குகள் சாதகமாகும்.அரசு தொடர்பான வழக்குகள் ஏதும் இருந்தால் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும்.நல்ல வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். இயல்பான சொத்து சேர்க்கை ஏற்படும் .பாகப்பிரிவினைகள் சுமூகமாக இருக்கும்.


இந்த வாரம் -
திங்கள் -திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் முழு வெற்றியைத் தரும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். நீண்ட நாளாக வராத தொகை இன்று கைக்கு வந்து சேரும். எடுக்கின்ற முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும்.
செவ்வாய் -தொலைதூரப் பயணங்களைத் தவிர்க்க வேண்டும். உங்களுக்கு சம்பந்தம் இல்லாத விஷயங்களில் தலையிட கூடாது.அது தேவையற்ற பிரச்சினைகளை உங்களுக்கு உண்டு பண்ணும். கவனமாக இருப்பது நல்லது.
புதன் - நிலம் வீடு சம்பந்தப்பட்ட விஷயங்கள் லாபகரமாக இருக்கும். தாயாரின் உடல் நலம் சீராகும். தாய்வழி உறவினர்களால் ஒரு பெரிய ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள்.
வியாழன் - இன்று செய்யப்படும் செயல்கள் யாவும் மற்றவர்களுக்கு நன்மையையும், உங்களுக்கு மனநிறைவை மட்டுமே தரக்கூடியதாக இருக்கும். புண்ணிய காரியங்கள் செய்ய முற்படுவீர்கள்.
வெள்ளி - கடன்களை அடைக்கும் வண்ணம் ஒரு பெரிய உதவி கிடைக்கும். அயல்நாட்டிலிருந்து நல்ல தகவல் கிடைக்கும். எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைப்பதற்கு நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.
சனி- உடல் அசதியாக இருக்கும். மனச்சோர்வு உண்டாகும். ஒருவித சலிப்பும், ஆயாசமும் உண்டாகும்.
ஞாயிறு - நல்ல விஷயங்கள் நடக்கும். எதிர்பார்த்த பணம் வரும். எடுத்த முயற்சிகள் அனைத்தும் வெற்றி தரும். வெளிநாட்டில் இருந்து நல்ல தகவல் கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டு. வருமானம் இரட்டிப்பாகும்.


வணங்க வேண்டிய தெய்வம் -
அனுமனுக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபடுங்கள். நெய்தீபம் ஏற்றி மனமுருக வேண்டுங்கள். உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றி ஆகும். சோம்பல் நீங்கும். மனதில் தைரியம் பிறக்கும்.

*******************************************************


பூரட்டாதி -
மனதில் குழப்பமும் பிறகு தெளிவும் உண்டாகும். பதவி மாற்றம் இடமாற்றம் ஏற்படும். சிலருக்கு திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும். எதிரிகள் காணாமல் போவார்கள். வழக்குகள் ஒன்றுமில்லாமல் நீர்த்துப்போகும். ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் முற்றிலும் நீங்கி குணமாகும். மீண்டும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். ஒரு சிலர் வேலையை விட்டுவிட்டு அதன் பிறகு வேறு வேலை தேடுவார்கள். தாமதமானாலும் நல்ல வேலை கிடைக்கும்.


உத்தியோகம் -
வேலையில் அழுத்தங்கள் இருந்தாலும் சிரித்த முகத்தோடு செய்து முடிப்பீர்கள். போட்டிகள் பொறாமைகள் அதிகமிருக்கும். வேலையை ராஜினாமா செய்யும் எண்ணம் உண்டாகும். மாற்று வேலையை உறுதி செய்தபின் வேலையை கைவிடுங்கள். கடைகளில் வேலை செய்பவர்களுக்கு வேலைச்சுமை அதிகமாகும். அலைச்சல் அதிகரிக்கும். விற்பனைப் பிரதிநிதிகளுக்கு அலைச்சல் அதிகமாகும் ஆனால் அதற்குண்டான ஆதாயம் கிடைக்கும். ஒருசிலர் நண்பர்களுக்காக வேலை பரிந்துரை செய்வீர்கள்.

தொழில் -
வளர்ச்சி உண்டு சிலசமயம் தளர்ச்சியும் உண்டு. ஒரு சில ஒப்பந்தங்கள் தள்ளிப் போகலாம். அல்லது கைவிட்டுப் போகலாம். ஆனால் விடாது முயற்சி செய்தால் தொழில் பிரச்சினை இல்லாமல் செல்லும். கடன்கள் அழுத்தம் தந்தாலும் பிரச்சினைகள் தராது. புதிய கடன் வாங்குவதை முடிந்தவரை தவிர்த்து விடுங்கள். முடியாத பட்சத்தில் வேண்டுமானால் வாங்கலாம். புதிய தொழில் தொடங்கும் சிந்தனை உள்ளவர்கள் இப்பொழுது தொழில் தொடங்க வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் தனியாக செய்ய முற்படுவீர்கள். வியாபாரம் செய்பவர்கள் வியாபாரத்தில் திருப்தியை உணர்வார்கள். ரியல் எஸ்டேட் துறை சார்ந்தவர்கள் வளர்ச்சி காண்பார்கள்.


பெண்களுக்கு -
மகிழ்ச்சியும் மனநிறைவும் உண்டாகும். சொத்து சேர்க்கை உண்டு. பூர்வீகச் சொத்து கிடைக்கும். பூர்வீக சொத்து வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். சகோதரர்கள் இறங்கி வருவார்கள். சகோதரிகள் அன்பு பாராட்டுவார்கள். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் உறுதியாகும். புத்திர பாக்கியம் கண்டிப்பாக கிடைக்கும்.


மாணவர்களுக்கு -
கல்வியில் முன்னேற்றம் உண்டு. அதேசமயம் ஆடம்பர நாட்டத்தால் கவன சிதறலும் உண்டு. மனதை ஒருநிலைபடுத்தினால் இந்த தடுமாற்றம் இருக்காது. நல்ல மதிப்பெண்கள் பெறுவீர்கள். கௌரவம் கிடைக்கும்.


கலைஞர்களுக்கு -
நல்ல நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பணம் பல வழிகளிலும் வரும். சொத்து சேர்க்கை ஏற்படும். நண்பர்களால் ஆதாயமடைவீர்கள்.


பொதுபலன் -
தேவையற்ற பிரச்சினைகளில் தலையிடாமல் இருந்தாலே போதும். இந்த வாரம் சிறப்பாகவே இருக்கும். வழக்கு ஏதேனும் நடந்து கொண்டிருந்தால் தள்ளிப்போகும். உங்கள் மீதான விசாரணைகள் இருந்திருந்தால் அது கைவிடப்படும். பணவரவில் இருந்த தடைகள் நீங்கும். வெளிநாடு செல்லும் முயற்சிகள் வெற்றியைத் தரும். குடும்பத்தை விட்டு பிரிந்து இருந்தவர்கள் இப்பொழுது ஒன்று சேர்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.


இந்த வாரம் -
திங்கள் - எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். பலவிதத்திலும் வருமானங்கள் வரும். கிடைக்கின்ற வாய்ப்புகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
செவ்வாய் - புதிதாக எதுவும் செய்ய வேண்டாம். குறிப்பாக பேச்சுவார்த்தைகள் தொடங்குவது, ஒப்பந்தங்கள் போடுவது போன்ற எதையும் செய்ய வேண்டாம். பயணங்களையும் தவிர்ப்பது நல்லது.
புதன் - ஆதாயங்கள் அதிகமாகும். வருமானம் கூடும். சொந்த வீடு கனவு நனவாகும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும்.
வியாழன் - இன்று நாள் முழுவதும் பலவித வேலைகள் செய்தாலும் ஆதாயங்கள் தள்ளிப்போகும். மற்றவர்களுக்கு நீங்களாகவே உதவிசெய்வீர்கள்.
வெள்ளி - நீண்ட நாளாக பிரச்சினை தந்து கொண்டிருந்த ஒரு கடனை இன்று அடைக்க வாய்ப்பு இருக்கிறது. அல்லது அதில் ஒரு பகுதியாவது இன்று அடைப்பீர்கள். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். ஒப்பந்தங்கள் உண்டாகும். பயணங்களால் ஆதாயம் உண்டு.
சனி- அமைதியாக இருக்க வேண்டும். தேவையற்ற பிரச்சினைகளில் தலையிட வேண்டாம் .அடுத்தவர் விஷயங்களில் உங்கள் கருத்துக்களை திணிக்க வேண்டாம்.
ஞாயிறு - பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். அவர்கள் தரும் தகவலை வைத்து ஒரு ஆதாயம் தரும் தொழிலை செய்வதற்கு வாய்ப்பிருக்கிறது. முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும்.


வணங்க வேண்டிய தெய்வம் -
நவக்கிரகத்தில் உள்ள குருபகவானுக்கு கொண்டைக் கடலை நைவேத்தியம் செய்து குழந்தைகளுக்கு தானம் தாருங்கள். மனதில் தெளிவு பிறக்கும். குழப்பங்கள் விடைபெறும். நல்ல முடிவுகளை எடுப்பீர்கள்.

****************************************************


உத்திரட்டாதி -
சுப பலன்கள் நடைபெறும். வீடு மாற்றம் உண்டாகும். ஆரோக்கியத்தில் அவ்வப்போது அச்சுறுத்தல் இருந்தாலும் பெரிய பாதிப்புகள் வராது சொந்தத் தொழில் செய்பவர்கள் நிதானப் போக்கை கடைபிடித்தால் பிரச்சினைகள் ஏதும் வராது. அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். குடும்பத்தில் அவ்வப்போது பிரச்சினைகள் வந்தாலும் நீங்கள் அமைதி காத்தால் பிரச்சினைகள் ஒன்றுமில்லாமல் போகும். நீங்களும் பிடிவாதம் பிடித்தால் பிரச்சினை பெரிதாகும். எனவே நிதானம் தேவை ஒரு சிலருக்கு வீடு அல்லது சொத்துக்கள் விற்பனை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும். அப்படியான விரயங்கள் நல்லது.


உத்தியோகம் -
வேலையில் அழுத்தங்கள் இருந்தாலும் கண்டும் காணாமல் இருந்தால் பிரச்சினைகள் ஏதும் இல்லை. இல்லை என்றால் வேலையை விட்டு வெளியேற வேண்டிய நிலை உண்டாகும். எனவே பொறுமை மிக அவசியம். சக ஊழியர்கள் கேலி கிண்டல் செய்வார்கள்,. அதை பொருட்படுத்த வேண்டாம். உயரதிகாரிகள் தேவையற்ற கேள்விகளை கேட்டு மனதில் சுமையை ஏற்றுவார்கள். எனவே நிதானமும் பொறுமையும் இருந்தால் இவற்றை எளிதாக கடந்து செல்லலாம். வேலை மாற்றம் சிந்தனை வரும். அடுத்த வேலையை உறுதி செய்தபின் இந்த வேலையை விட்டுவிடலாம். ஏனென்றால் இப்போது உங்களுக்கு இடமாற்றம் தேவை.


தொழில் -
தொழில் பற்றிய கவலை அதிகமாகி கொண்டே இருக்கும். சற்று பொறுமையாக மாற்று ஏற்பாடுகளை யோசித்துப்பாருங்கள். நல்ல வழி கிடைக்கும். அதற்கான நேரம் இப்போது தொடங்கிவிட்டது. இதுவரை தோன்றாத சிந்தனைகள் இப்போது உதயமாகும். அதை பரிட்சார்த்த முறையில் சோதித்து பிறகு நடைமுறைப்படுத்துங்கள். வெற்றி உண்டாகும். மொத்த வியாபாரிகள் வியாபாரத்தில் தேக்க நிலையை கண்டு கவலைப்படுவீர்கள். இன்னும் சில நாட்களில் இந்த கவலைகள் மாறும். ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் அந்த நிலையைக் கண்டு வருத்தப்படுவீர்கள். நீங்களும் ஏதாவது புதிய உத்தியைக் கையாண்டு வியாபாரத்தை வளர்ச்சிக்கு கொண்டு செல்லலாம். அதற்கான வழி கிடைக்கும். சுயதொழில் செய்பவர்களுக்கு இந்த வாரம் சுமாராகவே இருக்கிறது.


பெண்களுக்கு -
ஆசைகள் அதிகம் இருந்தாலும் அதை அடைவதற்கு கடும் சிரமம் ஏற்படும். எனவே பொறுமையாக இருந்தால் அனைத்தும் தானாக கிட்டும். சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் ஏதும் இருந்தால் பேசி தீர்த்துக் கொள்ளுங்கள். குடும்பத்தில் அமைதி நிலவ உங்களின் பொறுமை மிக அவசியம். பண உதவி கடைசி நேரத்தில் கிடைத்து மனநிம்மதி உண்டாகும்.


மாணவர்களுக்கு -

கவனமாக இருந்தால் கல்வியில் முன்னேற்றம் உண்டு. கவனச்சிதறல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.உயர் கல்வி கற்பவர்களுக்கு எந்த தடையும் இருக்காது, சுமுகமாக இருக்கும்.


கலைஞர்களுக்கு - நல்ல ஆதாயங்கள் கிடைக்கும். வருமானம் பல வழிகளிலும் வரும். முயற்சிகள் முழு வெற்றியை தரும்.


பொதுப்பலன் -
தேவையற்ற பிரச்சினைகளில் தலையிடாமல் இருந்தாலே போதும். இந்த வாரம் சிறப்பாகவே இருக்கும். வழக்கு ஏதேனும் நடந்து கொண்டிருந்தால் தள்ளிப்போகும். உங்கள் மீதான விசாரணைகள் இருந்திருந்தால் அது கைவிடப்படும். பணவரவில் இருந்த தடைகள் நீங்கும். வெளிநாடு செல்லும் முயற்சிகள் வெற்றியைத் தரும். குடும்பத்தை விட்டு பிரிந்து இருந்தவர்கள் இப்பொழுது ஒன்று சேர்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.


இந்த வாரம் -
திங்கள் - எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி ஆகும். பலவிதத்திலும் வருமானங்கள் வரும். கிடைக்கின்ற வாய்ப்புகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
செவ்வாய் - புதிதாக எதுவும் செய்ய வேண்டாம். குறிப்பாக பேச்சுவார்த்தைகள் தொடங்குவது, ஒப்பந்தங்கள் போடுவது போன்ற எதையும் செய்ய வேண்டாம். பயணங்களையும் தவிர்ப்பது நல்லது.
புதன் - ஆதாயங்கள் அதிகமாகும். வருமானம் கூடும். சொந்த வீடு கனவு நனவாகும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும்.
வியாழன் - இன்று நாள் முழுவதும் பலவித வேலைகள் செய்தாலும் ஆதாயங்கள் தள்ளிப்போகும். மற்றவர்களுக்கு நீங்களாகவே உதவிசெய்வீர்கள்.
வெள்ளி - நீண்ட நாளாக பிரச்சினை தந்து கொண்டிருந்த ஒரு கடனை இன்று அடைக்க வாய்ப்பு இருக்கிறது. அல்லது அதில் ஒரு பகுதியாவது இன்று அடைப்பீர்கள். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். ஒப்பந்தங்கள் உண்டாகும். பயணங்களால் ஆதாயம் உண்டு.
சனி- அமைதியாக இருக்க வேண்டும். தேவையற்ற பிரச்சினைகளில் தலையிட வேண்டாம் .அடுத்தவர் விஷயங்களில் உங்கள் கருத்துக்களை திணிக்க வேண்டாம்.
ஞாயிறு - பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். அவர்கள் தரும் தகவலை வைத்து ஒரு ஆதாயம் தரும் தொழிலை செய்வதற்கு வாய்ப்பிருக்கிறது. முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும்.


வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீ சக்கரத்தாழ்வார்க்கு வெண்பொங்கல் நைவேத்தியம் செய்து தானம் தாருங்கள் .தடைகள் விலகும் குழப்பங்கள் மறையும் நன்மைகள் பெருகும்.

********************************************************


ரேவதி -
நல்ல பலன்கள் நடைபெறும். மதிப்பும் மரியாதையும் அதிகமாகும். சமூகத்தில் அந்தஸ்து உயரும் . தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும் வழக்குகள் சாதகமாகும் எதிர்ப்புகள் அகலும். எதிரிகள் காணாமல் போவார்கள் போட்டியாளர்கள் தோற்றுப் போவார்கள்.


உத்தியோகம் -
வேலையில் பெரிய பிரச்சினைகள் ஏதும் இல்லை. சுமுகமாகவே இருக்கும் அலுவலக நண்பர்களுடன் சுற்றுலா சென்று வருவீர்கள். பணியிட மாற்றம் எதிர்பார்த்தவர்களுக்கு இப்பொழுது இடமாற்றம் ஏற்படும். பதவி உயர்வு கிடைக்கும். ஊதிய உயர்வும் உண்டாகும். இதுவரை வேலை இல்லாதவர்களுக்கு இப்பொழுது வேலை கிடைக்கும் வெளிநாடு செல்லும் முயற்சிகள் வெற்றி பெறும் வெளிநாட்டு வேலை உறுதியாகும். சகோதர சகோதர வழி உறவுகள் உங்கள் வேலைக்கு உதவுவார்கள். உடலுழைப்பு தொழிலாளர்கள் ஆதாயம் அதிகம் கிடைக்கப் பெறுவார்கள்.


தொழில் -
தொழில் முன்னேற்றப் பாதைக்கு செல்லும். தேக்க நிலைகள் மாறும். தேங்கி நின்ற பொருட்கள் விற்பனையாகும். ஊழியர்களின் தேவைகளை ஓரளவு பூர்த்தி செய்வீர்கள். புதிய தொழில் தொடங்கும் சிந்தனை தள்ளிப்போகும். வல்லுநர்கள் உதவியோடு தொழிலை விரிவு படுத்தும் எண்ணம் உண்டாகும். புதிதாக தொழில் தொடங்க நினைப்போர் இன்னும் சில வாரங்கள் பொறுத்திருந்தால் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மொத்த வியாபாரிகள் கணிசமான லாபம் பார்ப்பார்கள். கமிஷன் ஏஜெண்டுகள் சுமாரான லாபம் அடைவார்கள். ஓரளவு வளர்ச்சி உண்டு.
பங்கு வர்த்தகத் துறையில் இருப்பவர்களுக்கு லாபம் நன்றாகவே இருக்கும்.ரியல் எஸ்டேட் துறை நல்ல வளர்ச்சியை பெறும். வியாபாரம் அதிகமாக நடக்கும்.


பெண்களுக்கு -
திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நடக்கும். ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் விலகும். கர்ப்பப்பை பிரச்சினை இருந்தவர்கள் இப்பொழுது குணம் அடைவார்கள். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும்.சொத்து விஷயத்தில் உங்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும்.


மாணவர்களுக்கு -
மந்த நிலையிலிருந்து வெளியே வாருங்கள். சுறுசுறுப்பாக இருங்கள். மொத்த கவனத்தையும் படிப்பில் செலுத்துங்கள். வெற்றி பெறுவீர்கள்.

கலைஞர்களுக்கு -

நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் ஒரு சிலருக்கு புதிய ஒப்பந்தங்கள் உண்டாகும் .பண வரவு திருப்தி தரும். நண்பர்களால் ஆதாயம் உண்டு.


பொதுப்பலன் -
நன்மைகளும் பாதிப்புகளும் கலந்தே இருக்கிறது. அதேசமயம் நன்மைகள் அதிகமாக இருப்பதால் பெரிய பிரச்சினைகள் ஏதும் இருக்காது. தனவரவு திருப்தி தரும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் இருந்தாலும் முடிவில் அனைவரும் சமாதானம் அடைவார்கள்.
சமூக வலைதள பயன்பாட்டை குறைத்துக் கொள்ளுங்கள். சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட வேண்டாம். பெண்கள் புதிய நண்பர்களுடன் பழகுவதை தவிர்க்க வேண்டும்.வீடு சம்பந்தமான பிரச்சினைகள் முடிவுக்கு வரும் சொத்துக்கள் பாகப்பிரிவினை சுமுகமாக நடக்கும்.


இந்த வாரம் -
திங்கள் - வங்கிக் கடன் கிடைக்கும். ஒரு பெரிய கடன் ஒன்றை தீர்க்க முயற்சி எடுப்பீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.
செவ்வாய் - அலைச்சல் அதிகமாக இருக்கும். உடல் பலவீனமாக இருக்கும். மருத்துவ செலவுகள் ஏற்படும். தேவையில்லாத சிந்தனைகள் தோன்றும்.
புதன் - நண்பர்களிடமிருந்து உதவி கிடைக்கும் . சொத்து சம்பந்தமாக லாபம் ஏற்படும். மருத்துவ செலவு குறையும்.
வியாழன் - வெளிநாடு செல்லும் முயற்சிகள் வெற்றியாகும். வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல்கள் கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டு. எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும்.
வெள்ளி - அலைச்சல்கள் அதிகரிக்கும். பரபரப்பாக இருப்பீர்கள். பணத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும்.
சனி- திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் கச்சிதமாக முடியும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் சுப விசேஷங்கள் பற்றிய விஷயங்கள் பேசி முடிக்கப்படும்.
ஞாயிறு - பயணங்கள் எதுவும் வேண்டாம். பேச்சு வார்த்தைகள் எதுவும் ஈடுபடாதீர்கள். அது உங்களுக்கு எதிராகப் போகும்.


வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீ பிரத்யங்கிரா, ஸ்ரீ துர்கை போன்ற அம்மன் ஆலயங்களுக்கு சென்று வாருங்கள் .ஆலயத்தில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள். நன்மைகள் அதிகமாகும் பிரச்சினைகள் அகலும். முயற்சிகள் வெற்றியாகும்.

*****************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x