Published : 19 Nov 2019 11:08 AM
Last Updated : 19 Nov 2019 11:08 AM

இந்த வாரம் இப்படித்தான் - நட்சத்திரப் பலன்கள் : திருவோணம் முதல் ரேவதி வரை (நவம்பர் 18 முதல் 24-ம் தேதி வரை)

ஜோதிடர் ஜெயம் சரவணன்


திருவோணம் -
எடுக்கின்ற முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். அலைச்சல்கள் அதிகமாக இருந்தாலும், அதற்குண்டான ஆதாயம் கிடைக்கும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடக்கும். திருமண முயற்சிகள் முடிவுக்கு வரும். வேலையில்லாமல் இருந்தவர்களுக்கு இப்பொழுது வேலை கிடைக்கும். மனதை வாட்டிக் கொண்டிருந்த கடனைத் தீர்ப்பீர்கள். வெளிநாடு செல்லும் முயற்சி வெற்றி ஆகும். ஆன்மிகப் பயணங்கள் ஏற்படும்.


உத்தியோகம் -
பணியிடத்தில் சகஜமான நிலையே இருக்கிறது. பெரிய பாதிப்புகள் ஏதும் இல்லை. எதிர்பார்த்த பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. ஒருசிலர் வருங்கால வைப்பு நிதியில் இருந்து கடன் வாங்குவார்கள். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும், உதவிகள் கிடைக்கும்.
வணிக நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு இப்பொழுது கூடுதல் பொறுப்புகளும், ஊதிய உயர்வும் ஏற்படும். சேவை சார்ந்த வேலை செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வாடிக்கையாளர்கள் அதிகமாவார்கள்.


தொழில் -
தொழிலில் இருந்த நெருக்கடிகள் அனைத்தும் விலகும். ஒரு சிலருக்கு அரசு வழியில் இருந்த வழக்குகள் சுமுகமானத் தீர்வு கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்த முயற்சி எடுப்பீர்கள். அதற்கான உதவிகள், பணத்தேவைகள் கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் நல்ல வளர்ச்சி இருக்கும். புதிய நிறுவனங்களோடு ஒப்பந்தம் போடுவீர்கள். பங்கு வர்த்தகத் துறையில் நல்ல வளர்ச்சி இருக்கும். இழப்புகள் என்பது இனி இருக்காது. நல்ல வளர்ச்சி காண்பார்கள். வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். புதிய வியாபாரக் கிளை ஒன்றை ஆரம்பிப்பீர்கள்.


பெண்களுக்கு -
மனதில் மகிழ்ச்சி நிலவும். எடுத்த முயற்சிகள் அனைத்தும் வெற்றி தரும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். திருமண முயற்சிகள் கைகூடும். சொத்து சேர்க்கை உண்டு. கடன்கள் தீரும்.


மாணவர்களுக்கு -

கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கிறது. வெளிநாடு சென்று கல்வி பயிலும் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு இப்பொழுது அந்த வாய்ப்பு கிடைக்கும்.


கலைஞர்களுக்கு -

நண்பர்களால் நிறைய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவீர்கள். வெளிநாடு செல்லும் யோகமும் உண்டு. உங்கள் துறை சார்ந்த பயிற்சி வகுப்புகள் ஆரம்பிக்க வழி கிடைக்கும்.


பொதுப்பலன் -
நல்ல பலன்கள் நடக்கும் வாரம் . அலைச்சல் அதிகமாக இருந்தாலும் ஆதாயம் இருக்கும். சொந்த வீடு வாங்கும் முயற்சி வெற்றி பெறும். வீடு வாங்குவதற்கான வங்கிக் கடன் எளிதாகக் கிடைக்கும். பெரிய கடன் ஒன்றை அடைப்பீர்கள். அடகு வைத்த நகைகளை மீட்பீர்கள்.


இந்த வாரம் -
திங்கள் - பணிபுரியும் இடத்தில் மற்றவர் வேலையை நீங்கள் செய்ய வேண்டியது வரும். கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும்.


செவ்வாய் - ஆதாயம் தரும் விஷயத்தைப் பேசி முடிப்பீர்கள். கடனை அடைப்பதற்கான முயற்சியில் இறங்குவீர்கள்.


புதன் - அலைச்சல்கள் ஏற்படும். கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். மற்றவர்கள் உங்களை எரிச்சல்படுத்தி பார்ப்பார்கள். மனக்கட்டுப்பாடு அவசியம்.


வியாழன் - நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். மூத்த சகோதரர் , உங்களுக்கு உதவுவார்.


வெள்ளி - தொலைதூரப் பயணம் ஒன்று ஏற்படும். வெளிநாடு செல்லும் முயற்சி வெற்றியாகும். ஆதாயம் தரும். ஒரு வியாபாரத்தை பேசி முடிப்பீர்கள். எதிர்பார்த்த பணம் கிடைக்கும்.


சனி - அலைச்சல்கள் அதிகரிக்கும். வீட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவீர்கள். ஆடம்பரச் செலவுகள் ஏற்படும்.


ஞாயிறு - குடும்பத்தில் சுப விசேஷ பேச்சுவார்த்தைகள் நடக்கும். சுப விசேஷங்கள் பேசி முடிக்கப்படும். பணவரவு தாராளமாக இருக்கும். எடுத்த முயற்சிகள் அனைத்தும் வெற்றி தரும். திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடக்கும்.


வணங்க வேண்டிய தெய்வம் -
லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்யுங்கள். அல்லது ஒலிக்கச் செய்து கேளுங்கள். நன்மைகள் அதிகமாகும். மனதில் இருந்த பரபரப்பு குறையும். செயல்களில் வெற்றி கிடைக்கும்.

********************************************************
அவிட்டம் -


எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் முழு வெற்றியைத் தரும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். மனம் அமைதி இல்லாமல் இருந்திருப்பீர்கள். இப்பொழுது மனதில் அமைதி திரும்பும். சேமிப்புகள் உயரும் . சொத்துக்களை வாங்கவோ அல்லது விற்கவோ முயல்வீர்கள், அந்த முயற்சி வெற்றி பெறும். பண வரவு திருப்தியாக இருக்கும். குடும்பத்தினருக்காக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். நன்மைகள் அதிகம் நடக்கும் வாரம் இது.


உத்தியோகம் -


வேலையில் பிரச்சினைகள் ஏதும் இருக்காது. சகஜமான நிலையே இருக்கும். பெரிய அளவில் அழுத்தங்களோ. பணிச் சுமைகளோ இருக்காது.
பதவி உயர்வுக்கான நடைமுறைகள் செயல்படுத்தப்படும். அலுவலகத்தில் இருந்து வரவேண்டிய நிலுவைத் தொகை கிடைக்கும். சேவை சார்ந்த வேலை செய்பவர்களுக்கு வருமானம் இரட்டிப்பாகும். வணிக நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு ஊதிய உயர்வு கிடைக்கும். இடமாற்றங்களும் ஏற்படலாம். விற்பனைப் பிரதிநிதிகள் நல்ல ஆதாயம் கிடைக்கப் பெறுவார்கள்.


தொழில் -


தொழிலில் எதிர்பார்த்த வளர்ச்சி இப்பொழுது நடக்கும். உதவிகள் கிடைக்கும். கடன்கள் கட்டுக்குள் இருக்கும். வழக்குகள் தள்ளிப்போகும். புதிய தொழில் முயற்சியில் இறங்குவீர்கள். அதற்கான வங்கிக் கடன் இப்பொழுது எளிதாகக் கிடைக்கும். வியாபாரிகள் நல்ல வளர்ச்சியைக் காண்பார்கள். கிளைகளைத் துவங்குவார்கள். வணிக நிறுவனங்களில் வியாபாரம் அதிகமாக நடக்கும். பங்கு வர்த்தகத் துறையினர் அபரிமிதமான வளர்ச்சி காண்பார்கள். இதுவரை ஏற்பட்ட நஷ்டங்களில் இருந்து மீண்டு வருவார்கள். புதிதாக தொழில் தொடங்கும் தொழில் முனைவோருக்கு உதவிகள் கிடைக்கும்.


பெண்களுக்கு -
குடும்பப் பிரச்சினைகள் தீரும். குடும்பத்தில் சுப விசேஷ பேச்சுவார்த்தைகள் நடக்கும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நடக்கும். ஆடை ஆபரணச் சேர்க்கை ஏற்படும். அரசு வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு இப்பொழுது அரசு வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.


மாணவர்களுக்கு -

கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய பாட வகுப்புகளில் சேர்வீர்கள். அடுத்த வருட கல்விக்கு உங்களை இப்போதே தயார் செய்து கொள்வீர்கள்.


கலைஞர்களுக்கு -


ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு முன்தொகை பெறுவீர்கள். ஒரு சிலருக்கு சொத்து வாங்கும் யோகம் ஏற்படும். பயிற்சி நிறுவனங்களை ஆரம்பிப்பீர்கள்.


பொதுப் பலன் -


முன்னேற்றங்களை ஏற்படுத்தி தரும். நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். புதிய நண்பர் ஒருவர் அறிமுகமாவார். அவர் மூலமாக உங்களுக்கு பலவித நன்மைகள் ஏற்படும். புத்திர பாக்கியம் இல்லாத தம்பதிகளுக்கு இப்பொழுது புத்திர பாக்கியம் உண்டாகும். மருத்துவச் செலவுகள் குறையும். ஆரோக்கியம் மேம்படும். கடன்களை அடைக்க வழி கிடைக்கும். சொந்த வீடு வாங்கும் முயற்சி வெற்றி தரும். வாடகை வீட்டில் இருப்பவர்கள் இப்போது இருக்கும் வீட்டை விட நல்ல வசதியான வீட்டிற்கு மாறுவார்கள்.


இந்த வாரம் -


திங்கள் - வீடு வாங்கும் சிந்தனை தோன்றும். வீடு மாற்றம் செய்ய விரும்புபவர்களுக்கு எதிர்பார்த்த மாதிரியான நல்ல வீடு அமையும். சொத்துக்களால் ஆதாயம் ஏற்படும். பணவரவு உண்டு.


செவ்வாய் - கோயில்களுக்குச் சென்று வருவீர்கள். தர்ம காரியங்கள் செய்ய முற்படுவீர்கள். சக நண்பர்களுக்கு உதவி செய்வீர்கள்.


புதன் - எடுக்கின்ற முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். வியாபாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வந்து ஒப்பந்தம் ஏற்படும். ஆதாயங்கள் அதிகமாகும்.


வியாழன் - வேண்டாத பிரச்சினைகள் உங்களைத் தேடி வரும். அமைதியாக இருக்க வேண்டும். உணர்ச்சி வசப்படக் கூடாது. கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும்.


வெள்ளி - பள்ளித் தோழர்களை சந்திப்பீர்கள். வியாபாரப் பேச்சுவார்த்தைகள் வெற்றி தரும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி பெறும். எதிர்பார்த்த கடன் கிடைக்கும்.


சனி - வெளிநாடு செல்லும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். நீண்ட நாளாக வராமலிருந்த பணம் இன்று கிடைக்கும்.


ஞாயிறு - குடும்பத்தோடு நேரத்தை செலவிடுவீர்கள். வீட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவீர்கள். செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தினரோடு சேர்ந்து சில விஷயங்களை திட்டமிடுவீர்கள்.


வணங்க வேண்டிய தெய்வம் -
சிவாலயத்தில் சிவபெருமானுக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து, நெய் தீபமேற்றி வழிபடுங்கள். நன்மைகள் அதிகமாகும், பண வரவு திருப்தியாக, இருக்கும் நினைத்தது நிறைவேறும்.

*****************************************************
சதயம் -


எடுத்த முயற்சிகள் அனைத்தும் முழு வெற்றியைத் தரும். வெளிநாடு செல்லும் முயற்சி மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு போன்றவை கிடைக்கும். ஆதாயங்கள் அதிகமாகும். பெரிய வியாபாரங்கள் பேசி முடிப்பீர்கள். குடும்பத்திலிருந்த சச்சரவுகள் நீங்கும். கணவன்-மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். புத்திர பாக்கியம் இல்லாத தம்பதிகளுக்கு மருத்துவ உதவியுடன் குழந்தை பாக்கியம் உண்டாகும். வீட்டுக் கடனை முடிப்பீர்கள். நண்பரிடம் வாங்கிய கடன் ஒன்றை இப்பொழுது அடைப்பீர்கள். புதிய வாகனம் வாங்குவீர்கள்.


உத்தியோகம் -
வேலையில் பெரிய அளவில் எந்த பாதிப்பும் இருக்காது. பெரிய அளவிலான அழுத்தங்கள் ஏதும் இருக்காது. அலுவலகத்தில் இயல்பான நிலையே நீடிக்கும். வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு இப்போது நல்ல வேலை கிடைக்கும். படிப்புக்கு ஏற்ற வேலை இல்லாமல் ஏங்கியவர்களுக்கு இப்பொழுது படிப்புக்கேற்ற நல்ல வேலை கிடைக்கும். வெளிநாடுகளில் வேலை தேடுபவர்களுக்கு இப்பொழுது நல்ல தகவல் வந்து சேரும். சேவை சார்ந்த வேலை செய்பவர்களுக்கு இப்பொழுது வாடிக்கையாளர்கள் அதிகமாவார்கள். அதிக வேலை கிடைக்கப் பெறுவார்கள்.


தொழில் -
தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அரசு வழியில் இருந்து ஆதாயம் கிடைக்கும். பெரிய அளவிலான வங்கிக் கடன் கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்தும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். புதிய தொழில் ஒன்றை தொடங்குவீர்கள். கிளை நிறுவனங்கள் ஆரம்பிப்பீர்கள். கட்டுமானத் தொழில் செய்பவர்களுக்கு அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். ஒருசிலர் சலுகைகளை அறிவித்து வியாபாரத்தை அதிகமாக்குவார்கள். பங்கு வர்த்தகத் துறையினருக்கு அபரிமிதமான முன்னேற்றம் ஏற்படும். வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி உண்டாகும்.


பெண்களுக்கு -
மனம் மகிழும் சம்பவங்கள் இந்த வாரம் நடக்கும். திருமண முயற்சிகள் கைகூடும். புத்திர பாக்கியம் இல்லாத பெண்களுக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். வேலை இல்லாத பெண்களுக்கு இப்போது நல்ல வேலை கிடைக்கும். சொத்துச் சேர்க்கை ஏற்படும். சகோதர வழியில் உதவிகள் கிடைக்கும்.


மாணவர்களுக்கு -
கல்வியில் முன்னேற்றம் உண்டு. ஆசிரியர் ஒருவரின் உதவி கிடைக்கும். சக மாணவர்கள் உதவி செய்வார்கள்.


கலைஞர்களுக்கு -
பணவரவு திருப்திகரமாக இருக்கும். நண்பர்களின் உதவியோடு புதிய ஒப்பந்தம் ஒன்றை கிடைக்கப்பெறுவீர்கள். வெளிநாடு செல்லும் முயற்சி வெற்றி ஆகும்.


பொதுப்பலன் -
நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வாய்ப்புகள் கிடைக்கும்போது அதை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். முன்னேற்றமான வாரம் இது. தொலைதூரத் தகவல் நம்பிக்கை ஏற்படுத்தும். நண்பர்களின் உதவி கிடைக்கும். குடும்பத்தில் சுப விசேஷங்கள் நடைபெறும். திருமண முயற்சிகள் கைகூடும். சொந்த வீடு வாங்கும் கனவு நனவாகும்.


இந்த வாரம் -


திங்கள் - அலைச்சல்கள் அதிகரிக்கும் .அலைச்சலுக்கு உண்டான ஆதாயம் தள்ளிப்போகும். தொலைதூரப் பயணங்களைத் தவிர்க்க வேண்டும். வாகனச் செலவு ஏற்படும்.


செவ்வாய் - நிலம், வீடு சம்பந்தப்பட்ட வியாபாரம் வெற்றி தரும். பண வரவு திருப்தியாக இருக்கும். வேலைக்கான நேர்முகத் தேர்வு அழைப்பு வரும்.


புதன் - நண்பர்கள், உறவினர்கள் விஷயமாக ஒரு உதவி செய்து தருவீர்கள். கல்வி சம்பந்தப்பட்ட உதவி கேட்டு வருவார்கள். அவர்களுக்கு உதவுவீர்கள்.


வியாழன் - முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். ஆதாயம் தரும் ஒரு விஷயத்தை பேசி முடிப்பீர்கள். நீண்ட நாளாக பேசிவந்த ஒரு விஷயம் இன்று நல்ல முடிவிற்கு வரும்.


வெள்ளி - வீண் அலைச்சல்கள் ஏற்படும். ஒரு முக்கிய நபரை சந்திக்கும் விஷயம் தள்ளிப் போகலாம். விரக்தியான மனநிலை இருக்கும்.


சனி- வேண்டிய உதவிகள் கிடைக்கும். தடைப்பட்டிருந்த பணவரவு இன்று கைக்கு கிடைக்கும். கடன் கிடைப்பதற்கான வழி கிடைக்கும். அடகு வைத்த பொருட்களை மீட்பீர்கள்.


ஞாயிறு -தொலைதூரப் பயணம் ஒன்று ஏற்படும், அதில் ஆதாயம் கிடைக்கும். வியாபார சம்பந்தமான பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். சொத்துக்கள் சம்பந்தமான ஒரு விஷயம் நல்ல முடிவுக்கு வரும்.


வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீ துர்கை அம்மனுக்கு செவ்வரளி மாலை சூட்டி, சிவப்பு நிற வஸ்திரம் சாத்தி வழிபடுங்கள். நன்மைகள் அதிகமாகும். நினைத்தது நடக்கும்.

*************************************************************
பூரட்டாதி -
அலைச்சல்கள் அதிகரிக்கும். மனக்குழப்பங்கள் ஏற்படும். பிரச்சினைகளில் முடிவு எடுக்க முடியாமல் தடுமாறுவீர்கள். கடன் நெருக்கடி தந்தாலும், வேறு ஒரு கடனைப் பெற்று பழைய கடன்களை அடைப்பீர்கள். நண்பர்களின் உதவி கிடைக்கும். வேலையில் இடமாற்றம் ஏற்படும். பதவி உயர்வு தள்ளிப் போகலாம். பணத்தேவைகள் பூர்த்தியாகும். நண்பர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படும். மற்றவர்கள் பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பது உங்களுக்கு நல்லது.


உத்தியோகம் -
பணியிடத்தில் அழுத்தங்கள் அதிகரிக்கும். விருப்பமில்லாத இடமாற்றம் ஏற்படும். கூடுதல் பணிச்சுமை ஏற்படும். கடைகள், வணிக நிறுவனங்கள் முதலானவற்றில் பணிபுரிபவர்கள் பொருட்களைக் கையாளும்போது கவனமாக இருக்க வேண்டும். சேவை சார்ந்த வேலை செய்பவர்கள் வாடிக்கையாளர்களிடம் கனிவாக நடந்துகொள்ளவேண்டும். விற்பனைப் பிரதிநிதிகளுக்கு அலைச்சல்கள் அதிகரிக்கும்,. இலக்குகளை எட்ட சிரமப்படுவீர்கள்.


தொழில் -
தொழிலில் ஓரளவு முன்னேற்றம் ஏற்படும். தொழிலை விரிவுபடுத்த தேவையான கடன் உதவி கிடைக்கும். இயந்திர பழுதுகளை சரி செய்வதில் பணம் செலவாகும். ஊழியர்களுக்கு பல சலுகைகளை செய்து தருவீர்கள். வியாபாரிகளுக்கு பெரிய பாதிப்பு ஏதும் இல்லை. நல்ல வளர்ச்சி இருக்கும். பங்கு வர்த்தகத் துறையில் இருப்பவர்களுக்கு லாபம் கிடைக்கும். கட்டுமானத் தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு லாபத்தைக் குறைத்து வியாபாரத்தை அதிகமாக்கும் திட்டமொன்றை செயல்படுத்துவீர்கள். ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்பவர்கள் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவார்கள்.


பெண்களுக்கு -
கடன் பிரச்சினைகள் தீரும். அடகு வைத்த சொத்துக்களை மீட்க வழி கிடைக்கும். உறவினர்களிடம் தேவையில்லாத வாக்குவாதங்களைச் செய்ய வேண்டாம். வேலை இல்லாத பெண்களுக்கு இப்பொழுது நல்ல வேலை கிடைக்கும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும்.


மாணவர்களுக்கு -
கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட நாளாக தேடி வந்த புத்தகம் ஒன்று கிடைக்கும் .கல்விக் கடன் கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது.


கலைஞர்களுக்கு -
புதிய ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். முன் தொகையாக காசோலை பெறுவீர்கள். சொத்து வாங்க யோகமுண்டு. நண்பர்கள் அதிக அளவில் உதவி செய்வார்கள்.


பொதுப்பலன் -
சரியாக திட்டமிட்டு உங்கள் பணிகளை வகுத்துக் கொண்டால் பிரச்சினைகள் பெரிதாக இருக்காது. அலைச்சல்களை தவிர்த்துக் கொள்ளலாம். வீடு மாற்றம் ஏற்படும். வேலையில் இடமாற்றம் ஏற்படும். அது குடும்பத்தினரை விட்டு சற்று பிரிந்து இருப்பதாக இருக்கும். பழைய கடன்களை எல்லாம் அடைக்க புதிய கடன் ஒன்று பெறுவீர்கள். திருமண முயற்சிகள் கைகூடும். ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் அகலும். மருத்துவச் செலவுகள் கட்டுப்படும்.


இந்த வாரம் -


திங்கள் - திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் திட்டமிட்டபடியே நடக்கும். முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். வியாபாரப் பேச்சுவார்த்தைகள் முழுமையடையும். பணவரவு தாராளமாக இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும்.


செவ்வாய் - அலைச்சல்கள் அதிகமாகும். பேசுகின்ற வார்த்தைகளில் கவனம் வேண்டும். வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம்.


புதன் - தொழில் விஷயமாக எடுக்கும் முயற்சி வெற்றி தரும். வீடு மனை சம்பந்தப்பட்ட வியாபாரம் வெற்றிகரமாக முடியும். பண வரவு திருப்தியாக இருக்கும். புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு.


வியாழன் - வியாபார விஷயமாக வெளியூர் சென்று வருவீர்கள். சுப விசேஷங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு உண்டு. சுபவிசேஷம் தொடர்பான செலவுகளும் ஏற்படும்.


வெள்ளி - வியாபாரப் பேச்சுவார்த்தைகள் வெற்றியாகும். ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். அடகு வைத்த சொத்துக்களை மீட்க வழி கிடைக்கும்.


சனி - வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். உங்களுக்கு சம்பந்தமில்லாத பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். சமூக வலைதள பயன்பாட்டை குறைத்துக்கொள்ளுங்கள்.


ஞாயிறு - எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். வியாபார பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வரும். சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் பேசி தீர்க்கப்படும்.


வணங்கவேண்டிய தெய்வம் -
அருகிலிருக்கும் ஐயப்பன் கோயிலுக்கு சென்று வாருங்கள். நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள். நன்மைகள் அதிகமாகும். மன பாரம் குறையும். பிரச்சினைகள் தீரும்.

*************************************************
உத்திரட்டாதி -


சிரமங்கள் அதிகமாக இருந்தாலும் பணத்தேவைகள் சரியான நேரத்தில் பூர்த்தியாகும். அலைச்சல்கள் அதிகரிக்கும். ஆதாயங்கள் குறையும். உங்களுக்குக் கிடைக்கும் ஆதாயத்தை பங்கு தர வேண்டியது வரும். சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் நல்ல முடிவுக்கு வரும். பயணங்கள் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் அவ்வப்போது சிறுசிறு பிரச்சினைகள் வரும். சரியாக திட்டமிட்டால் அலைச்சலைக் குறைக்க முடியும். தாயாரின் உடல்நலம் கவலை தரும், ஆனால் பெரிய பாதிப்பு ஏதும் வராது.


உத்தியோகம் -
வேலையில் இடமாற்றம் ஏற்படும். பணிச்சுமை அதிகரிக்கும். பதவி உயர்வு தள்ளிப் போகலாம். சக ஊழியர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். அரசுப் பணியில் இருப்பவர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். அதன்காரணமாக அலைச்சல் அதிகமாகும். சேவை சார்ந்த வேலை செய்பவர்களுக்கு வேலைக்குத் தகுந்த ஆதாயம் இருக்காது. வணிக நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு பணிச் சுமை அதிகமாகும். ஓய்வு எடுக்க முடியாத அளவுக்கு வேலையில் நெருக்கடி ஏற்படும். பொருட்களைக் கையாளும் பொழுது கவனமாக இருக்க வேண்டும்.


தொழில் -
தொழில் ஓரளவுக்கு முன்னேற்றம் இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்பவர்களுக்கு பெரிய பாதிப்புகள் ஏதும் இருக்காது. பங்கு வர்த்தகத் துறையில் இருப்பவர்களுக்கு லாபம் குறையும். கட்டுமானத் தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு ஓரளவு வளர்ச்சி ஏற்படும். வியாபாரிகளுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏதுமில்லை. ஓரளவுக்கு வளர்ச்சி இருக்கும். புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கு அரசு உதவி கிடைக்கும், அரசு மானியம் கிடைக்கும்.


பெண்களுக்கு -

உறவினர்களிடம் தேவையில்லாத மனவருத்தங்கள் ஏற்படும். சுப விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். சமூக வலைதளங்களில் இருந்து விலகி இருங்கள். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்படும். ஒரு சிலருக்கு ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படும்.


மாணவர்களுக்கு -

கல்வியில் மந்த நிலை ஏற்படும். ஆர்வம் குறையும் .எதையோ இழந்ததைப் போல் இருப்பீர்கள்.


கலைஞர்களுக்கு -

வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களின் உதவியால் ஒப்பந்தங்கள் ஏற்படும். பண வரவு கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். முன்னேற்றமான ஒரு தகவல் வந்து சேரும்.


பொதுபலன் -

அலைச்சல்கள் அதிகரிக்கும். ஆதாயம் ஓரளவுக்கு இருக்கும் .கடன்கள் கட்டுக்குள் இருந்தாலும்., ஒரு சில கடன்கள் நெருக்கடி தரும். வங்கிக் கடன் கிடைப்பதில் தள்ளிப் போகலாம். அல்லது கூடுதல் தகவல் கேட்டு தாமதமாகலாம்.


இந்த வாரம் -


திங்கள் - அலைச்சல்கள் அதிகரிக்கும். ஆதாயங்கள் குறையும் .உங்களுக்கு வர வேண்டிய லாபத்தை பங்கு போட வேண்டியது வரும்.


செவ்வாய் - வியாபாரப் பேச்சுவார்த்தைகள் வெற்றி ஆகும். பணவரவு தாராளமாக இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.


புதன் - அலைச்சல்கள் இருக்கும். ஒரு சில விஷயங்கள் தள்ளிப்போகலாம். முக்கியமான முடிவுகள் எதையும் எடுக்க வேண்டாம்.


வியாழன் - வீடு மாற்றம் ஏற்படும். நல்ல வீடு அமையும். வியாபாரப் பேச்சுவார்த்தைகள் வெற்றியாகும். புதிய தொழில் தொடங்கும் சிந்தனை உருவாகும்.


வெள்ளி - அலைச்சல்கள் அதிகரிக்கும். ஆதாயம் குறையும். ஆடம்பரச் செலவுகள் ஏற்படும்.


சனி - எதிர் பார்த்த பணம் கிடைக்கும். முக்கிய கடன் ஒன்று அடைப்பீர்கள். அடகுப் பொருட்களை மீட்க வழி கிடைக்கும்.


ஞாயிறு - பயணங்கள் வேண்டாம். ஒப்பந்தங்கள் எதுவும் செய்ய வேண்டாம், வாகனச் செலவு, வீட்டு பராமரிப்பு செலவுகள் உண்டாகும். அக்கம்பக்கத்தினருடன் சண்டை சச்சரவுகள் வேண்டாம்.


வணங்க வேண்டிய தெய்வம் -
கோ பூஜை செய்யுங்கள். பசுமாட்டுக்கு உணவளியுங்கள். பிரச்சினைகள் தீரும். தடைகள் அகலும். பணவரவு உண்டாகும்.

*********************************************************
ரேவதி -


நன்மைகள் அதிகமாக நடக்கும். புண்ணிய காரியங்கள் செய்வதில் ஆர்வம் ஏற்படும். பரிகார ஆலயங்களுக்குச் சென்று வருவீர்கள். சித்தர்கள் வாழ்ந்த பூமி, ஜீவ சமாதி போன்ற இடங்களுக்குச் சென்று வருவீர்கள். ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் குறையும். வீடு மாற்றம் வாகன மாற்றம் போன்றவை ஏற்படும். செலவுகளுக்கு ஏற்ற பணவரவு இருக்கும். குழந்தைகளின் எதிர்காலம் கருதி சேமிப்புத் திட்டங்களில் சேருவீர்கள். குடும்பத்தில் சுப விசேஷங்கள் நடைபெறும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும்.


உத்தியோகம் -
வேலையில் பெரிய அளவில் அழுத்தங்கள் ஏதும் இருக்காது. ஒரு சில நிர்ப்பந்தங்கள் மட்டும் ஏற்படும். பணிகளை விரைவாக முடிக்கச் சொல்லி கேட்டுக் கொள்வார்கள். உயர் அதிகாரிகள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். இதுவரை வேலையில்லாமல் இருந்தவர்களுக்கு இப்பொழுது வேலை கிடைக்கும். பதவி உயர்வு எதிர்பார்த்தவர்களுக்கு இப்பொழுது பதவி உயர்வு கிடைக்கும். சேவை சார்ந்த வேலை செய்பவர்களுக்கு வாடிக்கையாளர்கள் அதிகமாவார்கள். வேலைகளில் திருப்தி ஏற்படும். கட்டுமான வேலை செய்பவர்கள் வேறு இடங்களுக்கு வேலைக்குச் செல்வார்கள். வணிக நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்கும்.


தொழில் -
தொழிலில் எதிர்பார்த்த வளர்ச்சி உண்டாகும். தொழில் சார்ந்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். தொழிலுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்குவீர்கள். அரசு வழியில் இருந்து உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த வங்கிக் கடன் இந்த வாரம் கிடைக்கும். பங்கு வர்த்தகத் துறையில் இருப்பவர்களுக்கு வளர்ச்சி உண்டாகும். லாபம் அதிகரிக்கும். கட்டுமானத் தொழில் செய்பவர்கள் அதிக அளவில் வியாபாரம் செய்வார்கள். வியாபாரிகளுக்கு நல்ல வளர்ச்சி உண்டாகும். கிளை நிறுவனங்களை ஆரம்பிப்பார்கள். தங்கள் கடைகளை விரிவுபடுத்துவீர்கள். உணவகத் தொழில் செய்பவர்கள் நகரின் மையப்பகுதியில் இடம் கிடைத்து தொழில் தொடங்குவார்கள்.


பெண்களுக்கு -
நன்மைகள் அதிகமாக நடக்கும். கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். குடும்பத்தில் சுப விசேஷங்கள் நடக்கும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும் . ஒரு சில பெண்கள் சுயதொழில் முயற்சியில் இறங்குவார்கள், அதற்கான உதவி குடும்பத்தில் இருந்து கிடைக்கும்.
மாணவர்களுக்கு - கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தேர்வுகளில் அதிக மதிப்பெண் கிடைக்கும். உயர்கல்விக்காக இப்பொழுதே திட்டமிடுவீர்கள்.


கலைஞர்களுக்கு -
அரசு வழியில் கௌரவம் கிடைக்கும். அரசு உதவி கிடைக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வாய்ப்புகள் கிடைக்கும்.


பொதுபலன் -
சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குள்ளான கருத்துக்களை பதிவு செய்ய வேண்டாம். அது உங்களுக்கு பிரச்சினையாக மாறும். வெளி நபர்களிடம் பழகும் பொழுது கவனமாக இருங்கள். வீட்டுக்குத் தேவையான அத்தியாவசியச் செலவுகளை செய்வீர்கள். சகோதரரிடம் ஏற்பட்ட மன வருத்தம் அகலும். சொத்து சம்பந்தமான பிரச்சினைகள் சுமூகமாகத் தீரும். சொந்த வீடு வாங்கும் முயற்சி இப்பொழுது வெற்றியாகும். ஆடம்பரச் செலவுகளை தவிர்க்க வேண்டும். சேமிப்புகளை உயர்த்த வேண்டும்.


இந்த வாரம் -


திங்கள் -வெளிநாடு செல்லும் முயற்சி வெற்றியாகும். நண்பர்களிடமிருந்து உதவி பெறுவீர்கள். எதிர்பார்த்த பணம் கிடைக்கும்.


செவ்வாய் - ஆரோக்கியம் சம்பந்தமாக சில நல்ல முடிவுகளை எடுப்பீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். வெளியூர் பயணம் ஒன்று ஏற்படும்.


புதன் - பணம் பல வழிகளிலும் கிடைக்கும். வியாபாரங்கள் வெற்றியாகும். நல்ல ஒப்பந்தங்கள் உண்டாகும். முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். தொழில் சம்பந்தமாக ஒரு ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. நீண்ட நாளாக பேசி வந்த ஒரு முக்கிய விஷயம் நல்ல முடிவுக்கு வரும்.


வியாழன் - சர்ச்சைக்குரிய வகையில் யாரிடமும் பேச வேண்டாம். வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம். உங்களுக்கு சம்பந்தமில்லாத பிரச்சினைகளில் தலையிட வேண்டாம்.


வெள்ளி - சொந்த வீடு வாங்குவது சம்பந்தமாக முயற்சிகள் வெற்றியாகும். எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும். ஆதாயம் தரும் வியாபாரங்கள் நடக்கும். முயற்சிகள் வெற்றியாகும்.


சனி- புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சுபச்செலவுகள் ஏற்படும். வீட்டுப் பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும்.


ஞாயிறு - கடன் பிரச்சினைகள் தீர்வதற்கு வழி கிடைக்கும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். வேலைக்கான நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டால் வெற்றி கிடைக்கும். வேலையில் சேர்வதற்கான பணி ஆணை கிடைக்கும்.


வணங்கவேண்டிய தெய்வம் -
மகாலட்சுமி தாயாருக்கு வெண்தாமரை மலர்களால் அர்ச்சனை செய்து, நெய் தீபமேற்றி வழிபடுங்கள். நன்மைகள் அதிகமாகும், முயற்சிகள் வெற்றியாகும், தேவைகள் பூர்த்தியாகும்.

*********************************************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x