இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்
Updated on
1 min read

மேஷம்: வெளிவட்டாரத்தில் புது அனுபவம் கிடைக்கும். வாகனம் வாங்குவது குறித்து ஆலோசிப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் அதிகரிக்கும். திடீர் பயணம் உண்டு.

ரிஷபம்: நீண்டநாள் பிரச்சினைகளுக்கு சுமுகத் தீர்வு கிடைக்கும். வழக்குகள் சாதகமாகும். மனைவிவழி உறவினர்களுடன் இருந்துவந்த கருத்துவேறுபாடு நீங்கும். கலைப்பொருட்கள் சேரும்.

மிதுனம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வரும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பால்ய நண்பரை சந்திப்பீர்கள்.

கடகம்: உடல் உஷ்ணம் அதிகரிப்பால் சில அவதிகள் ஏற்படும். யாருக்கும், எதற்காகவும் உறுதிமொழியோ, உத்தரவாதமோ தரவேண்டாம். பொதுக் காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

சிம்மம்: அரசு அதிகாரிகளால் சில காரியங்கள் நிறைவேறும். திடீர் பயணங்கள் ஏற்படும். விலகியிருந்த உறவினர்கள், நண்பர்கள் விரும்பி வந்து பேசுவார்கள். வாகனம் செலவு வைக்கும்.

கன்னி: எதையும் தாங்கும் மனவலிமை கிட்டும். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.. எதிர்ப்புகள், ஏமாற்றங்களை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். சகோதரர்கள் பக்கபலமாக இருப்பார்கள்.

துலாம்: எதிர்பார்த்த உதவிகள் தக்கசமயத்தில் கிடைக்கும். தெளிவான முடிவுகளால் தொல்லைகள் நீங்கும். குடும்பத்தார் ஆதரவாக இருப்பார்கள். வீட்டை விரிவுபடுத்த முயல்வீர்கள்.

விருச்சிகம்: சவாலான காரியங்களையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். திடீர் பயணம் உண்டு. விருந்தினர் வருகையால் வீடு கலகலப்பாகும். அக்கம்பக்கத்தினர் ஆதரவாக இருப்பார்கள்.

தனுசு: அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பழைய சொந்தபந்தங்கள் தேடி வருவார்கள். வேலை தொடர்பான முயற்சிகள் இழுபறியாகும். வெளி உணவுகளை தவிருங்கள்.

மகரம்: இங்கிதமாகவும், இதமாகவும் பேசி எல்லோரையும் கவருவீர்கள். உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். பங்கு வர்த்தகம் லாபம் தரும்

கும்பம்: சமயோசிதமாகச் செயல்பட்டு பல காரியங்களையும் முடித்துக் காட்டுவீர்கள். கைமாற்றாக வாங்கியிருந்த தொகையை தந்து முடிப்பீர்கள். மின்னணு சாதனம் வாங்குவீர்கள்.

மீனம்: அறிஞர்களின் நட்பு கிடைக்கும். மேல்படிப்புக்கான முயற்சிகள் சாதகமாகும். சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். சிலருக்கு பெரிய பொறுப்புகள் எதிர்பாராமல் கிடைக்கும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in