Published : 18 Nov 2019 05:21 PM
Last Updated : 18 Nov 2019 05:21 PM

இந்த வாரம் இப்படித்தான் -  நட்சத்திரப் பலன்கள் : எந்தக் கிழமைகளில் என்னென்ன பலன்கள்?  விசாகம் முதல் உத்திராடம் வரை - (நவம்பர் 18 முதல் - 24 வரை)


ஜோதிடர் ஜெயம் சரவணன்

விசாகம் -
எடுக்கின்ற முயற்சிகள் அனைத்தும் வெற்றியைத் தரக்கூடிய வாரம் . சோம்பலை விடுத்து சுறுசுறுப்புக்கு மாறினால் அனைத்தும் வெற்றியாகும். தன்னம்பிக்கை கூடுதலாகும். ஒருவித சலிப்பு மனநிலையில் இருந்து வெளியே வருவீர்கள். உங்கள் தேவைகள்கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். பணவரவு சரளமாக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.


உத்தியோகம் -
வேலையில் இருந்த அழுத்தங்கள் குறைய ஆரம்பிக்கும். இடமாற்றம் பற்றிய விஷயங்கள் தள்ளிப்போகலாம். பதவி உயர்வு தொடர்பான விஷயங்கள் இந்த வாரம் ஆலோசனைக்கு எடுத்துக்கொள்ளப்படும். அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வணிக நிறுவனங்கள், கடைகளில் பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். ஊதிய உயர்வும் உண்டாகும். நீங்கள் பணி நிறுவனங்களின் மற்ற கிளை நிறுவனங்களுக்கு மாற்றப்படலாம்.


தொழில் -
தொழிலில் எதிர்பார்த்த முன்னேற்றமான தகவல்கள் கிடைக்கும். பலவித உதவிகள் தொழிலுக்கு கிடைக்கும். அயல்நாட்டு ஒப்பந்தங்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அயல்நாட்டு நிறுவனங்களோடு இணைந்து செயலாற்றவும் வழி கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் இருப்பவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. நல்ல வளர்ச்சி உண்டாகும். பங்கு வர்த்தகத் துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான விஷயங்கள் நடக்கும். கட்டுமானத் தொழில் செய்பவர்களுக்கு லாபம் ஏற்படக் கூடிய அளவில் வியாபாரம் இருக்கும்.


பெண்களுக்கு -
தேவைகள் கடைசி நேரத்தில்தான் பூர்த்தியாகும். சகோதர வழியில் ஒரு சில சங்கடங்களை சந்திக்க வேண்டியது வரும். அந்த வருத்தங்களை பெரிதாக மாறாமல் பார்த்துக் கொள்ளுங்கள். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் உறுதியாகும்.


மாணவர்களுக்கு -
வெளிநாடு சென்று கல்வி பயிலும் ஆர்வம் உள்ளவர்களுக்கு இந்த வாரம் அதற்கான சாதகமான சூழ்நிலை இருக்கிறது. உங்கள் திறமைகள் வெளிப்படும் நேரம் இது.


கலைஞர்களுக்கு -
உங்களுடைய திறமைகளை மற்றவர்கள் இப்போது தெரிந்து கொள்வார்கள். உங்கள் மீதான மதிப்பு, மரியாதை அதிகமாகும். நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.


பொதுப்பலன் -
அலட்சியத்தையும் சோம்பலையும் விட்டுவிட்டால் சிறப்பான பலன்கள் இந்த வாரம் நடந்தேறும். நல்ல வாய்ப்புகள் வரும், அதைத் தேர்ந்தெடுப்பதில் குழப்பங்கள் நேரும். தேவையில்லாத பிரச்சினைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது. ஒரு சில விஷயங்களில் கௌரவம் பார்க்காமல் விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள். ஆதாயம் தரும் பயணம் ஒன்று ஏற்படும், அதில் அதிக நன்மைகள் கிடைக்கும்.


இந்த வாரம் -


திங்கள் - திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் முழு வெற்றியை தரும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். நீண்ட நாளாக வராத தொகை இன்று கைக்கு வந்து சேரும். எடுக்கின்ற முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும்.


செவ்வாய் - தொலைதூரப் பயணங்களைத் தவிர்க்க வேண்டும். உங்களுக்கு சம்பந்தம் இல்லாத விஷயங்களில் தலையிடக் கூடாது. அது தேவையற்ற பிரச்சினைகளை உங்களுக்கு உண்டு பண்ணும். கவனமாக இருப்பது நல்லது.


புதன் - நிலம் வீடு சம்பந்தப்பட்ட விஷயங்கள் லாபகரமாக இருக்கும். தாயாரின் உடல் நலம் சீராகும். தாய்வழி உறவினர்களால் ஒரு பெரிய ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள்.


வியாழன் - இன்று செய்யப்படும் செயல்கள் யாவும் மற்றவர்களுக்கு நன்மையையும், உங்களுக்கு மனநிறைவை மட்டுமே தரக்கூடியதாக இருக்கும். புண்ணிய காரியங்கள் செய்ய முற்படுவீர்கள்.


வெள்ளி - கடன்களை அடைக்கும் வண்ணம் ஒரு பெரிய உதவி கிடைக்கும். அயல்நாட்டிலிருந்து நல்ல தகவல் கிடைக்கும். எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைப்பதற்கு நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.


சனி - உடல் அசதியாக இருக்கும். மனச்சோர்வு உண்டாகும். ஒருவித சலிப்பும், ஆயாசமும் உண்டாகும்.


ஞாயிறு - நல்ல விஷயங்கள் நடக்கும். எதிர்பார்த்த பணம் வரும். எடுத்த முயற்சிகள் அனைத்தும் வெற்றி தரும். வெளிநாட்டில் இருந்து ஒரு நல்ல தகவல் கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டு. வருமானம் இரட்டிப்பாகும்.


வணங்க வேண்டிய தெய்வம் -

அனுமனுக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபடுங்கள். நெய்தீபம் ஏற்றி மனமுருக வேண்டுங்கள். உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். சோம்பல் நீங்கும். மனதில் தைரியம் பிறக்கும்.
***************************************************
அனுஷம் -


பணவரவில் இருந்த தடைகள் இப்பொழுது படிப்படியாக நீங்கும். ஆனாலும் யாருக்கும் ஜாமீன் தரக்கூடாது. மற்றவர் விஷயங்களில் தலையிடக்கூடாது. தேவையில்லாத பிரச்சினைகளில் தலையிட்டால் வழக்குகளைச் சந்திக்க வேண்டியது வரும். ஆரோக்கிய பிரச்சினைகள் தீரும். மருத்துவச் செலவுகள் குறையும். அரசியலில் இருப்பவர்களுக்கு நல்ல பதவி கிடைக்கும். திறமைகள் இருந்தும் அடையாளம் காணப்படாத நபர்கள் இந்த வாரம் இந்த உலகத்திற்கு அடையாளம் காட்டப்படுவார்கள்.


உத்தியோகம் -
பணியிடத்தில் இருந்த நெருக்கடிகள் குறைய ஆரம்பிக்கும். பதவி உயர்வு தராமல் இழுத்தடித்துக் கொண்டிருந்த உயரதிகாரி, வேறு வழியில்லாமல் இந்த வாரம் உங்களுக்கு பதவி உயர்வைத் தருவார். ஊதிய உயர்வும் சேர்ந்தே இருக்கும். அரசுப் பணியாளர்களுக்கு பதவி உயர்வு உள்ளிட்ட பல சலுகைகள் கிடைக்கும். , ஏதேனும் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆட்பட்டிருந்தால் இப்பொழுது அந்த ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்படும். சேவை சார்ந்த வேலை செய்பவர்களுக்கு ஏற்றம் தரும் வாரம். நல்ல வாய்ப்புகளும், ஒப்பந்தங்களும் கிடைக்கும். புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். அவர்களால் ஆதாயம் கிடைக்கும்.


தொழில் -
தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வளர்ச்சிக்கான அத்தனை அம்சங்களும் உண்டு. ஆனாலும் தேவை இல்லாத நபர்களை உங்களோடு வைத்துக் கொள்ளவேண்டாம்., அவர்களால் பிரச்சினைகளை சந்திக்க வேண்டியது வரலாம். வழக்குகளை தள்ளி வைக்க முயற்சி செய்யுங்கள். காசோலை தருவது, ஒப்பந்தம் போடுதல் என்பவற்றை ஒருமுறைக்கு இருமுறை நன்கு ஆலோசனை செய்த பிறகே முடிவெடுக்க வேண்டும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்பவர்களுக்கு பிரச்சினைகள் ஏதும் இல்லை. தடைகள் ஏதும் வராது. பங்கு வர்த்தகத் துறையினருக்கு இதுவரை இருந்த சரிவிலிருந்து இப்போது மீண்டு வருவார்கள். இதுவரை தொழில் செய்யவேண்டும் என்ற எண்ணம் இல்லாதவர்களுக்கு கூட, இப்பொழுது தொழில் செய்யும் ஆர்வம் உண்டாகும். வியாபாரிகள் நல்ல வளர்ச்சியைக் காண்பார்கள். வியாபாரத்தில் கடன் கொடுப்பதை நிறுத்த வேண்டும்.


பெண்களுக்கு -
குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். மன அமைதி உண்டாகும். இனி உங்கள் வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும். கணவரின் உடல் நலத்தில் அக்கறை காட்ட வேண்டும்.


மாணவர்களுக்கு -
கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஞாபக சக்தி அதிகரிக்கும். உங்களுடைய தனித் திறமைகள் வெளிப்படும்.


கலைஞர்களுக்கு -
அற்புதமான வாய்ப்புகள் கிடைக்கும். உங்களுக்கான மரியாதை கௌரவம் கிடைக்கும். உங்கள் திறமை மீது இப்பொழுது மற்றவர்களுக்கு நம்பிக்கை ஏற்படும். சிறப்பான வாரம் இது.


பொதுப்பலன் -
வாக்கு கொடுப்பது, ஜாமீன் கொடுப்பது இந்த இரண்டையும் தவிர்த்து விட்டால் இந்த வாரம் பெரிய பிரச்சினைகள் ஏதும் இல்லை. உங்கள் மீதான மதிப்பு மரியாதை மற்றவர்களிடம் உயரும் . குடும்பத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்து கொடுத்து மகிழ்வீர்கள். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். மருத்துவச் செலவுகள் இனி இருக்காது. யாருக்கும் வாக்கு கொடுக்காதீர்கள்.வாக்கை காப்பாற்ற முடியாத சூழ்நிலை உருவாகலாம்.


இந்த வாரம் -


திங்கள் - உங்களுடைய உடல் நலம், மன நலம் சார்ந்து ஒரு முக்கிய நல்ல முடிவை எடுப்பீர்கள். பயணங்கள் ஏற்படும். பணவரவு திருப்தி தரும்.


செவ்வாய் - திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் இன்று வெற்றிகரமாக முடியும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். எதிர்பாராத பண வரவும் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவமொன்று நடைபெறும்.


புதன் - தொலைதூரப் பயணங்கள் வேண்டாம். ஒப்பந்தங்கள் எதுவும் போட வேண்டாம். பேச்சு வார்த்தைகள் ஏதும் இருந்தால் தள்ளிப்போடுவது நல்லது.


வியாழன் - ஆதாயம் தரும் விஷயங்கள் நடக்கும். வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும்.


வெள்ளி - மற்றவர்கள் வேலையை உங்கள் தலை மீது சுமத்துவார்கள். நீங்களும் கடமைக்காக செய்து கொடுப்பீர்கள். அலைச்சல் அதிகமாகும்.


சனி - கடனைத் தீர்ப்பதற்கான முயற்சியில் இறங்கி வெற்றி காண்பீர்கள். ஒரு பெரிய கடன் அடைக்கப்படும், அல்லது ஒரு பகுதியாவது திருப்பிச் செலுத்துவீர்கள். லாபகரமான நாள்.


ஞாயிறு - நண்பர்களோடு சேர்ந்து எங்கும் செல்ல வேண்டாம். தேவையற்ற பிரச்சினைகள் காத்துக்கொண்டிருக்கிறது. எனவே ஓய்வு எடுத்துக்கொள்வது உடலுக்கும், மனதுக்கும் நல்லது.


வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்திற்கு செல்லுங்கள். அம்மன் ஆலயத்தில் நெய் தீபம் ஏற்றி மனமுருக வேண்டுங்கள். பிரச்சனைகள் எதுவும் உங்களை அணுகாது, தீமைகள் உங்களை தொடராது, எதிரிகள் விலகிப் போவார்கள், நன்மைகள் நடக்கும்.

**********************************************************************
கேட்டை -


உங்கள் திறமைகள் முழுமையாக வெளிப்பட்டு சாதித்துக் காட்டுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். பணவரவில் இருந்த தடைகள் நீங்கும். வழக்குகள் ஏதும் நடந்து கொண்டிருந்தால் தள்ளிப் போகலாம். அல்லது உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரலாம். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். தம்பதிகளுக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். பிரிந்திருந்த தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். உங்கள் தவறுகளிலிருந்து பாடம் கற்பீர்கள்.


உத்தியோகம் -

வேலைப்பளு அதிகமாக இருந்தாலும் தொய்வு ஏதும் இருக்காது, குறித்த நேரத்தில் அனைத்து வேலைகளையும் செய்து முடித்து விடுவீர்கள். வேலையில் இருந்த அச்சம் நீங்கும். வேறு பணிக்கு மாறும் எண்ணம் இருந்தவர்கள், இப்போது தள்ளி வைப்பீர்கள். வணிகக் கடைகளில் பணிபுரிபவர்கள் கூடுதல் வேலைப்பளு அதிகரிக்கும். ஊதிய உயர்வு கிடைக்கும். விற்பனைப் பிரதிநிதிகளுக்கு அலைச்சலும், அலைச்சலுக்கு உண்டான ஆதாயமும் கிடைக்கும். சேவை சார்ந்த வேலை செய்பவர்கள் உழைப்பு அதிகமாகும்.


தொழில் -
உங்கள் தொழில் நிறுவனத்தை முதலிடத்திற்கு கொண்டு வர முயற்சிகள் எடுப்பீர்கள். ஆதாயம் தரும் வியாபாரத்தை அதிகமாக்குவீர்கள். கட்டுமான தொழில் செய்பவர்கள் சலுகைகளை அறிவித்து வியாபாரத்தை பெருக்குவீர்கள். வியாபாரிகள் மந்த நிலையிலிருந்து வெளியே வருவார்கள். வியாபாரத்தை பெருக்குவதற்கான நுட்பங்களைப் பயன்படுத்துவார்கள். புதிதாக தொழில் முனைவோர்கள் இப்போது தொழில் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு. வெளிநாட்டிலிருந்து முதலீடுகள் கிடைக்கும். பங்கு வர்த்தகத் துறையினர் மந்த நிலை மாறி முன்னேற்றப் பாதைக்கு செல்வார்கள். ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்பவர்கள் அதிக ஒப்பந்தங்களைப் பெறுவார்கள்.


பெண்களுக்கு -
குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். மனநிம்மதி உண்டாகும். குடும்பத்தினர் உங்களிடம் ஆலோசனை பெறுவார்கள். குடும்பக் கடனை தீர்க்க ஒரு நல்ல முடிவை எடுப்பீர்கள்.


மாணவர்களுக்கு -

கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வெளிநாடு சென்று கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு இப்போது அந்த வாய்ப்புகள் கிடைக்கும். ஞாபக சக்தி அதிகரிக்கும்.


கலைஞர்களுக்கு -

அற்புதமான வாய்ப்புகள் எல்லாம் கிடைக்கும். நண்பர்கள் தேடி வந்து உதவுவார்கள். பண ஆதாயம் கிடைக்கும். வெளிநாடு செல்லும் முயற்சி வெற்றி தரும்.


பொதுப்பலன் -
தடைகளை தகர்த்து முன்னேறுவீர்கள். வெற்றி எளிதாக இருக்கும். முயற்சிகள் உங்களுக்கு சாதகமாகும். சகோதர வழியில் இருந்த பிரச்சினைகள் சுமூகத் தீர்வு பெரும் . விவாகரத்து ஆனவர்களுக்கு மறுமணம் நடக்கும். ஆரோக்கியத்தில் இருந்த அச்சுறுத்தல் நீங்கும். மருத்துவ செலவுகள் குறையும். நீண்ட நாட்களாக விற்க முடியாமல் இருந்த சொத்துக்கள் இப்பொழுது விற்பனையாகும். அடகு வைத்த பொருட்களை மீட்பதற்கான வழி கிடைக்கும்.


இந்த வாரம் -


திங்கள் - கேட்ட உதவிகள் மட்டுமல்ல, கேட்காத இடத்திலிருந்தும் உதவிகள் கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். ஆன்மிகப் பயணம் ஏற்படும்.


செவ்வாய் - குடும்ப நலனுக்காக சில நல்ல முடிவுகளை எடுப்பீர்கள். ஆதாயம் தரும் அலைச்சல் ஒன்று உண்டாகும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும்.


புதன் - திட்டமிட்டு வைத்த காரியங்கள் அனைத்தும் திட்டமிட்டபடியே நடக்கும். எடுக்கின்ற அனைத்து முயற்சிகளும் வெற்றி தரும். பணவரவு தாராளமாக இருக்கும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். குடும்பத்தில் சுப நிகழ்வு ஒன்று நடக்கும்.


வியாழன் - பயணங்களைத் தவிர்க்க வேண்டும். கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். மற்றவர்கள் பிரச்சினையில் தலையிட வேண்டாம்.


வெள்ளி - சொந்த வீடு வாங்கும் கனவு ஈடேறும். ஆதாயம் தரும் வியாபாரம் ஒன்றைப் பேசி முடிப்பீர்கள். ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும்.


சனி - நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள். உறவினர் ஒருவர் சுப செலவுக்காக உங்களிடம் பணம் எதிர்பார்ப்பார்கள். ஒரு பெரிய கடன் தீர்வதற்கு வழி கிடைக்கும்.


ஞாயிறு - நீண்ட நாளாக பேசிவந்த ஒரு வியாபாரம் இன்று முடிவுக்கு வரும், அதில் ஒப்பந்தங்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. ஆதாயம் தரும் விஷயங்கள் இன்று நடைபெறும். பணவரவு உண்டாகும். எதிர்பார்த்த ஒரு சுப விஷயம் இன்று முடிவாகும்.


வணங்க வேண்டிய தெய்வம் - சித்தர்கள் ஜீவசமாதி அடைந்துள்ள ஆலயங்களுக்கு சென்று வாருங்கள். மனநிம்மதி உண்டாகும், வாக்கில் நிதானம் வரும், சிக்கனம் அதிகமாகும், சேமிப்புகள் உயரும் .
********************************************************
மூலம் -


மன நிம்மதி இழந்து தவித்துக் கொண்டிருந்த உங்களுக்கு இப்பொழுது மனநிம்மதி உண்டாகும். குழப்பங்கள் தீர்ந்து தெளிவு பிறக்கும். இடமாற்றம், ஊர் மாற்றம் ஏற்படும். பயணங்கள் அதிகரிக்கும். அலைச்சல் உண்டாகும். ஆரோக்கியத்தில் அவ்வப்போது சிறுசிறு பிரச்சினைகள் வந்து நீங்கும். பணத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். நீங்கள் இழந்த மதிப்பு மரியாதை மீண்டும் கிடைக்கும். உங்களிடம் இருந்த உங்களுக்கே தெரியாத தனித்திறமைகள் இப்போது வெளிப்படும்.


உத்தியோகம் -

உத்தியோகத்தில் இடமாற்றம் ஏற்படும். இப்போது இருக்கும் வேலையை விட்டுவிட்டு வேறு வேலைக்குச் செல்வீர்கள். அதற்கான முயற்சிகளில் இறங்குவீர்கள். இந்தவாரம் அதற்கான சாதகமான பதிலை எதிர்பார்க்கலாம். ஒருசிலருக்கு நிறுவனங்களிலிருந்து நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு வரும். வேலை செய்கின்ற இடத்தில் மற்றவர்களோடு அனுசரித்துச் செல்லவேண்டும். தேவையில்லாமல் அவர்களிடம் வாக்குவாதம் செய்யாதீர்கள். சேவை சார்ந்த வேலை செய்பவர்களுக்கு அலைச்சல் அதிகரிக்கும். ஆதாயம் ஓரளவுக்கு கிடைக்கும். புதிய வாடிக்கையாளர் ஒருவர் அறிமுகமாவார்.


தொழில் -
எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். வரவேண்டிய பாக்கி இப்போது வசூலாகும். கடன்களைத் தீர்ப்பதற்கு உதவிகள் கிடைக்கும். வழக்குகள் ஏதும் நடந்து கொண்டிருந்தால் இப்போது உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும். அரசு வழியில் இருந்த நெருக்கடிகள் தீரும். வருமானவரி சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் முடிவுக்கு வரும். புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். இடங்களை தேர்வு செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். பங்கு வர்த்தகத் துறையில் இருப்பவர்களுக்கு நிதானமான வளர்ச்சியைக் காணலாம். வியாபாரிகளுக்கு முன்னேற்றம் ஏற்படும், லாபம் அதிகரிக்கும்.


பெண்களுக்கு -
குடும்ப பிரச்சினைகள் தீரும். குடும்பத்தில் அமைதி திரும்பும். உங்கள் அவசர முடிவுகளால் எடுத்த விஷயங்கள் உங்களுக்கு எதிராக திரும்பி இருந்திருக்கும். அது இப்பொழுது உங்களுக்கு சாதகமாக மாறும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் உறுதியாகும். திருமணமான பெண்களுக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். ஆனாலும் கணவரின் உடல் நலத்தில் அக்கறை காட்ட வேண்டிய நேரமிது.


மாணவர்களுக்கு -
கல்வியில் அதிக கவனம் வேண்டும். கல்வியில் தடை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. தேர்வுகளில் கவனமாக இல்லாவிட்டால் மதிப்பெண்கள் குறையும்.


கலைஞர்களுக்கு -
நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். ஒப்பந்தங்கள் உண்டாகும். பணவரவு திருப்தி தரும். இதுவரை இருந்த இறுக்கமான சூழ்நிலை மாறும்.


பொதுப் பலன் -
புண்ணியத் தலங்களுக்குச் சென்று வர முயற்சி எடுப்பீர்கள். குலதெய்வ வழிபாடு செய்வீர்கள். குழந்தைகளின் எதிர்காலம் கருதி ஒரு சில முடிவுகளை எடுப்பீர்கள். அவர்களின் கல்வி உங்களுக்கு கவலை அளிப்பதாக இருக்கும். சோதனைகள் அவ்வப்போது வரும். ஆனாலும் தீர்வுகளும் உடனுக்குடன் கிடைக்கும். சோம்பல் அதிகமாகும். ஆயாசம் போன்ற உணர்வுகள் ஏற்படும்.


இந்த வாரம் -


திங்கள் - உதவிகள் கிடைக்கும். ஆதாயம் தரும் விஷயம் ஒன்று நடைபெறும். மன வருத்தம் ஏற்பட்டு பிரிந்த நண்பரை மீண்டும் சந்தித்து மன வருத்தத்தைப் போக்கிக் கொள்வீர்கள்.


செவ்வாய் - இடமாற்றம், வீடுமாற்றம் போன்ற சிந்தனைகள் உருவாகும். வெளிநாடு செல்லும் எண்ணமும் வரும். அதற்கான முயற்சிகளில் இறங்குவீர்கள். வெளிநாட்டில் இருக்கும் நண்பர் ஒருவருடைய உதவி கிடைக்கும்.


புதன் - வேலை பற்றிய சில முடிவுகளை எடுப்பீர்கள். அலைச்சலுடன் கூடிய ஆதாயம் ஏற்படும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும்.


வியாழன் - திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் திட்டமிட்டபடியே நடக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு.


வெள்ளி - சில ஏமாற்றங்கள் ஏற்படலாம். உங்களுக்கு வாக்கு கொடுத்த ஒரு நபர் தன் வாக்கை காப்பாற்ற முடியாமல் போவார்.


சனி - எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். ஆதாயம் தரும் பயணம் ஒன்று ஏற்படும். கடனை அடைக்கும் முயற்சியில் இறங்குவீர்கள்.


ஞாயிறு - நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் சில உதவிகளை செய்து தருவீர்கள்., அவர்கள் வேலையாக உங்களுக்கு அலைச்சல் ஏற்படும்.


வணங்க வேண்டிய தெய்வம் -
பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முகக் கவசம் பாராயணம் செய்யுங்கள். காலை மாலை இருவேளையும் படித்து வந்தால் நன்மைகள் அதிகமாகும். குழப்பங்கள் தீரும், பணவரவு மனநிம்மதியைத் தரும்.

**************************************************
பூராடம் -


சோதனைகள் எவ்வளவு வந்தாலும் அதைத் தாங்கிக் கொண்டு அடுத்த முயற்சிகளில் இறங்குவீர்கள். எந்த முடிவும் எடுக்க முடியாமல் குழப்பம் ஏற்படும். நண்பர்கள், உற்றார் உறவினர்களிடம் தேவையில்லாத மன வருத்தங்கள் ஏற்படும். கடன் பிரச்சினைகள் நெருக்கடி தரும். கணவன் மனைவி ஒற்றுமையில் சில பிரச்சினைகள் உண்டாகும். விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டும். இல்லாவிட்டால் பிரிவு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அதற்கு இடம் கொடுக்காதீர்கள். சொத்துக்கள் விற்க முயற்சி செய்வீர்கள். சுபவிசேஷங்களுக்கு செலவு செய்ய நேரிடும்.


உத்தியோகம் -
வேலையில் பணிச்சுமை அதிகமாகும். அழுத்தங்கள் அதிகரிக்கும். வேலையை விட்டு விலகி வேறு வேலைக்கு செல்ல எண்ணம் வரும். வெளிநாடு செல்லும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். அதற்கு ஓரளவு நல்ல பலன் கிடைக்கும். சக ஊழியர்கள் உங்களுக்கு எதிராக இருப்பார்கள். திரைமறைவில் உங்களுக்கு எதிராக வேலை செய்வார்கள். உங்களைப் பற்றி உயரதிகாரிகளிடம் தவறான கருத்துக்களைச் சொல்வார்கள். இதையெல்லாம் எதிர்த்துப் போராடும் குணம் இயல்பிலேயே இருப்பதால் சிறிதும் அஞ்ச மாட்டீர்கள்.


தொழில் -
தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்த செலவு செய்ய வேண்டியது வரும். வெளிநாடுகளில் இருந்து உதவிகள் கிடைக்க வாய்ப்பு உண்டு. ஏற்றுமதி இறக்குமதி தொழில் சிறப்பாகவே இருக்கும். பங்குவர்த்தகத்தில் இருப்பவர்களுக்கு ஓரளவு லாபம் ஏற்படும். ஆனாலும் கவனமாக இருக்க வேண்டும். வியாபாரிகளுக்கு நல்ல வளர்ச்சி கிடைக்கும். வருமானம் அதிகமாகும், வியாபாரம் பெருகும்.


பெண்களுக்கு -

அவசரமான முடிவுகளை எடுக்க வேண்டாம். நிதானமாக யோசித்து மற்றவர்களுடன் கலந்து பேசி பிறகு முடிவு எடுக்க வேண்டும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும். வேலை இல்லாத பெண்களுக்கு இப்போது நல்ல வேலை கிடைக்கும்.


மாணவர்களுக்கு - படிப்பைத் தவிர மற்ற ஆடம்பர விஷயங்களில் அதிக நாட்டம் ஏற்படும். ஞாபக மறதி அதிகமாகும். தேர்வுகளில் மதிப்பெண் குறைய வாய்ப்பு இருக்கிறது.


கலைஞர்களுக்கு - நல்ல வாய்ப்புகள் கிடைத்து வெளிநாடு செல்லும் யோகம் உண்டு. வெளிநாடுகளில் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.


பொதுபலன் -

நிதானமாக சிந்தித்து செயல்பட்டால் எந்த பிரச்சினையும் உங்களை அணுகாது. செலவுகளை கட்டுப்படுத்த திட்டமிட வேண்டும். தேவையான செலவுகளை மட்டும் செய்ய வேண்டும். அனாவசிய செலவுகளை குறைக்க வேண்டும். சொத்துக்களை விற்பனை செய்து கடன்களை அடைக்க நேரிடும். தனிமையில் இருப்பதைத் தவிர்க்கவேண்டும், அதிகமாக சிந்திக்கக் கூடாது, . கணவன் மனைவி மனம் விட்டுப் பேச வேண்டும். பூர்வீக சொத்துப் பிரச்சினை இப்போது சுமூகமாக தீரும். பிடிவாதம் பிடிக்காமல் கிடைப்பதை பெற்றுக் கொள்ளுங்கள்.


இந்த வாரம் -


திங்கள் - உங்களுக்கு சம்பந்தமில்லாத பிரச்சினைகளில் தலையிடாதீர்கள். உங்களை நோக்கி பிரச்சினைகள் வந்தாலும் அமைதியாக இருங்கள். தேவையற்ற வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம்.


செவ்வாய் - சொத்து விற்பனை சம்பந்தமாக நல்ல முடிவு கிடைக்கும். பேச்சுவார்த்தைகள் திருப்தி தரும். உதவிகள் கிடைக்கும்.


புதன் - வெளிநாடு செல்லும் முயற்சி வெற்றியாகும். தொலைதூரப் பயணம் ஒன்றை மேற் கொள்வீர்கள். அதனால் ஆதாயம் கிடைக்கும். எதிர்பார்த்த கடன் கிடைக்கும்.


வியாழன் - கடன் சம்பந்தமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். அது உங்களுக்கு சாதகமாக இருக்கும். பணப் பிரச்சினைகள் தீர்வதற்கு வழி கிடைக்கும்.


வெள்ளி - முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.


சனி - தேவையற்ற பயணங்கள் செய்ய வேண்டாம். குடும்பத்தினருடன் வாக்குவாதங்களை செய்யவேண்டாம். கணவன்-மனைவிக்குள் வரும் கருத்து வேறுபாடுகளை விட்டுக்கொடுத்துச் செல்லவேண்டும்.


ஞாயிறு - ஆரோக்கியத் தொல்லைகள் அகலும். மருத்துவ செலவுகள் குறையும். ஆதாயம் தரும் வியாபாரம் ஒன்று பேசி முடிப்பீர்கள். ஒரு சில ஒப்பந்தங்கள் நடக்கும்.


வணங்கவேண்டிய தெய்வம் -
காலபைரவரை வழிபாடு செய்யுங்கள், பைரவருக்கு செவ்வரளி மாலை, எலுமிச்சை மாலை சாற்றி வழிபடுங்கள். எதிர்ப்புகள் அகலும், எதிரிகள் காணாமல் போவார்கள், குடும்பத்தில் அமைதி நிலவும். பிரச்சினைகள் தீரும்.

********************************************************
உத்திராடம் -


பிரச்சினைகளில் இருந்து இப்பொழுதுதான் மெல்ல மெல்ல வெளியே வருவீர்கள். தேவையான உதவிகள் கிடைக்கும். நிறைய நண்பர்கள் ஆதரவுக் கரம் நீட்டுவார்கள். இழந்த சொத்துக்களை எல்லாம் திரும்பப் பெறுவதற்கான வழி கிடைக்கும். இந்த வாரம் அதற்கான வாய்ப்புகள் ஏற்படும். மன மகிழ்ச்சி உண்டாகும் வகையில் சில சம்பவங்கள் நடக்கும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் தீரும். குடும்பத்தினருக்காக செலவு செய்ய நேரிடும். கடன்கள் அனைத்திலிருந்தும் விடுபட வாய்ப்புகள் உண்டு. அதற்கான வழிவகைகள் இந்த வாரத்தில் இருந்து தொடங்குகிறது.


உத்தியோகம் -
வேலையில் இருந்த அழுத்தங்கள் நீங்கும். பணிச்சுமை குறையும் .அதிக வேலை இல்லாத இடத்திற்கு இடமாற்றம் ஏற்படும். கூடுதல் பொறுப்புகள் வழங்கப்படும். அந்த பொறுப்புகளை உணர்ந்து பணி செய்வீர்கள். உங்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் ரத்து செய்யப்படும். வெளிநாடு செல்லும் முயற்சிகள், வெளிநாட்டில் வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். சேவை சார்ந்த வேலை செய்பவர்களுக்கு நீண்ட நாளாக வேலை இல்லாமல் தவித்து வந்த நிலை மாறும். இப்பொழுது வேலை அதிகமாக கிடைக்கும், பணவரவு திருப்திகரமாக இருக்கும்.


தொழில் -
தொழிலில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். முன்னேற்றமான நிலை ஏற்படும். உதவிகள் பல வகையிலும் கிடைக்கும். வெளிநாட்டிலிருந்து முதலீடுகள் கிடைக்கப்பெறுவீர்கள். தொழில் வளர்ச்சிப் பாதையில் செல்வதால், தொழிலை விரிவுபடுத்துவீர்கள். அரசு வழியில் இருந்த நெருக்கடிகள் அனைத்தும் தீரும். அரசின் உதவி கிடைக்கும். அரசின் சலுகைகள் கிடைக்கும். வங்கியில் கடன் தாராளமாக கிடைக்கும். உங்கள் தொழிலுக்கு தேவையான புதிய இயந்திரங்கள் வாங்குவீர்கள். வியாபாரிகளுக்கு அபரிமிதமான வளர்ச்சி உண்டு, பல கிளைகளைத் தொடங்க திட்டமிடுவீர்கள். பங்கு வர்த்தகத் துறையில் இருப்பவர்களுக்கு பொன்னான நேரம். அற்புதமான முன்னேற்றம் ஏற்படும். கமிஷன் தொழில் செய்பவர்களுக்கு பெரிய அளவில் வியாபாரம் செய்து முடிப்பீர்கள்.


பெண்களுக்கு -
அடகு வைத்த நகைகள் அனைத்தும் மீட்கப்படும். சகோதரர்கள் உதவுவார்கள். அரசு வேலை கிடைக்கும். வேலையில் இருந்தால் இப்பொழுது பதவி உயர்வு கிடைக்கும். சொந்த வீடு வாங்கும் கனவு நனவாகும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும்.


மாணவர்களுக்கு -

கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத அளவுக்கு மதிப்பெண்கள் கிடைக்கப் பெறுவீர்கள். உயர்கல்விக்காக இப்போதே திட்டமிடுவீர்கள்.


கலைஞர்களுக்கு -

வாய்ப்புகளைத் தேடி அலைந்து கொண்டிருந்தீர்கள். இனி வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். பெரிய தொகை ஒன்று கைக்கு கிடைக்கும்.


பொதுப்பலன் -
சோதனையான காலம் முடிந்துவிட்டது, இனி சாதிக்கக்கூடிய காலம் . முயற்சிகள் அனைத்தும் வெற்றி தரும். பணவரவு தாராளமாக இருக்கும். எதிர்ப்புகள் முற்றிலுமாக இல்லாமல் போகும். எதிரிகள் காணாமல் போவார்கள். சொத்து சேர்க்கை இயல்பாக ஏற்படும். தோல்வி என்பதே இருக்காது. சரியாக திட்டமிட்டால் யோகங்கள் இன்னும் அதிகமாகும்.


இந்த வாரம் -


திங்கள் - எதிர்பாராத பல நன்மைகள் நடக்கும். முக்கியமான கடன்களை அடைப்பீர்கள். அதற்கான பணம் கிடைக்கும். நன்மைகள் அதிகமாக இருக்கும்.


செவ்வாய் - பலரும் உங்களை உதவி கேட்டு நச்சரிப்பார்கள். இப்போதைக்கு யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம். இன்று அமைதியாக இருப்பது நல்லது.


புதன் - நன்மைகள் அதிகமாக இருக்கும். உதவிகள் தேடி வரும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். ஒப்பந்தங்கள் போடுவீர்கள். லாபமான நாள்.


வியாழன் - முகம் தெரியாத நபர் கூட உங்களுக்கு உதவுவார். அயல்நாட்டிலிருந்து நல்ல தகவல் கிடைக்கும். ஆதாயம் தரும் வியாபாரம் ஒன்று நடக்கும். தேவைகள் பூர்த்தியாகும்.


வெள்ளி - கடன் சம்பந்தமாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். குடும்பத்தினர் நலன் கருதி சேமிப்பு தொடங்குவீர்கள். அலைச்சல் உண்டு, அலைச்சலுக்கு உண்டான ஆதாயமும் உண்டு.


சனி- திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் திட்டமிட்டபடியே நடக்கும். எடுத்துக் கொண்ட அனைத்து முயற்சிகளும் வெற்றியை தரும். பணவரவு தாராளமாக இருக்கிறது.


ஞாயிறு - அவசியமற்ற பயணங்களை தவிர்க்கவேண்டும். கோபமான வார்த்தைகளை தவிர்க்க வேண்டும். ஒரு சிலரால் தேவையற்ற எரிச்சல் ஏற்படும்.


வணங்க வேண்டிய தெய்வம் -

உக்கிரமாக இருக்கும் பெண் தெய்வங்களை வணங்குவது, அதாவது வக்ரகாளி, பிரத்தியங்கிரா போன்ற தெய்வங்களை வணங்குவது நன்மைகள் அதிகமாகும். தேவைகள் பூர்த்தியாகும். பணப் பிரச்சினைகள் தீரும்.
***************************************************************

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x