

மேஷம்
வீடு மாற நினைத்தவர்களுக்கு நல்ல வீடு அமையும். புதிய வாகனம் வாங்குவீர்கள். பிள்ளைகளால் பெருமை உண்டு. வெளிநாடு செல்ல முயற்சித்தவர்களுக்கு நல்ல பதில் கிடைக்கும்.
ரிஷபம்
தொட்டதெல்லாம் துலங்கும். சகோதர உறவுகள் உங்களை சரியாக புரிந்துகொள்வார்கள். வீடு, மனை, சொத்து வாங்க முன்பணம் தருவீர்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும்.
மிதுனம்
பங்குச் சந்தை வகையில் ஆதாயம் உண்டு. வராது என்று நினைத்த பணம் கைக்கு வரும். அரசு, வங்கி வகையில் நன்மை, லாபம் உண்டு. பெரிய நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.
கடகம்
யாரையும் நம்பி ஏமாறாதீர்கள். வீணாக யாருக்கும் எந்த உறுதிமொழியும் தரவேண்டாம். வாக்குவாதங்கள், விமர்சனங்கள் செய்ய வேண்டாம். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும்.
சிம்மம்
பணம் வந்தாலும் செலவுகளும் அடுக்கடுக்காக இருக்கும். சிபாரிசு செய்வது, சாட்சிக் கையெழுத்து போடுவது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. பேச்சில் கவனம் தேவை.
கன்னி
பெரிய திட்டங்கள் தீட்டி செயல்படுத்துவீர்கள். எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். வெற்றி பெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும். ஆன்மிகம், யோகாவில் நாட்டம் ஏற்படும்.
துலாம்
விரும்பிய பதவிகள் தேடி வரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த விசா கிடைக்கும். பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். பணவரவு, பொருள் வரவு உண்டு.
விருச்சிகம்
நீண்டகால பிரச்சினைகளுக்கு உங்கள் வித்தியாச அணுகுமுறையால் சுமுக தீர்வு காண்பீர்கள். தக்க சமயத்தில் விஐபிகளின் உதவி கிடைக்கும். எக்காரியத்திலும் நிதானம் தேவை.
தனுசு
வாகனப் பயணத்தின்போது அதிக கவனம் அவசியம். செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவது கூடாது. பழைய நண்பர்கள், உறவினர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.
மகரம்
எத்தனை சோதனைகள் வந்தாலும் போராடி வெற்றி பெறுவீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். சுப காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும்.
கும்பம்
இடையூறு, பிரச்சினை, சிக்கல், உடல்நலக் குறைவு என எது வந்தாலும் தைரியமாக சமாளிப்பீர்கள். குடும்பத்தினருடன் புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள்.
மீனம்
பிள்ளைகளால் மரியாதை, அந்தஸ்து உயரும். பழைய வாகனத்தை மாற்றிவிட்டு புதுசு வாங்குவீர்கள். வீடு, வாகனம் வாங்க லோன் கிடைக்கும். அனைவரையும் அரவணைத்துச் செல்வீர்கள்.
*****
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |