Published : 11 Nov 2019 02:49 PM
Last Updated : 11 Nov 2019 02:49 PM

இந்த வாரம் இப்படித்தான் - நட்சத்திர பலன்கள் - எந்தக் கிழமைகளில் என்னென்ன பலன்கள்? (நவம்பர் - 11 முதல் 17 வரை ) விசாகம் முதல் உத்திராடம் வரை

ஜோதிடர் ஜெயம் சரவணன்

விசாகம் -
சுபவிரயங்கள் அதிகமாக இருக்கும். வீடு, மனை முதலியவற்றில் முதலீடு செய்வீர்கள். திருமணம் போன்ற சுப காரியங்கள் நடக்கும், அல்லது குழந்தைகளுக்கு மொட்டை அடித்தல், காது குத்துதல் போன்ற சுப விசேஷங்கள் செய்வீர்கள்.
ஒரு சிலருக்கு வேலை மாற்றம் தொலைதூரமாக அமையும் வாய்ப்பு உண்டு. கடன்களை அடைக்க வாய்ப்புகள் கிடைக்கும். வங்கிக் கடன் கிடைக்கும். மருத்துவ செலவுகள் குறையும். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் இப்போது முழுமையாக குணம் அடைந்து வீடு திரும்புவார்கள்.
உத்தியோகம் - வேலையில் இடமாற்றம், பதவி உயர்வு, பணியிட மாற்றம் ஏற்படும். வேலையிலிருந்த அழுத்தங்கள் குறையும். அரசு ஊழியராக இருந்தால் பொறுப்புகள் அதிகமாகும். கூடுதல் பணிச்சுமை ஏற்படும். உயரதிகாரிகளுக்கு உங்கள் மீதிருந்த கோபம் விலகும். அவர்களின் ஆதரவு கிடைக்கும். சேவை சார்ந்த வேலை செய்பவர்களுக்கு அலைச்சலும்,அலைச்சலுக்கு உண்டான ஆதாயமும் கிடைக்கும்.
வணிக நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் வேறு நிறுவனத்திற்கு மாறுவார்கள். அல்லது பணிபுரியும் நிறுவனத்திலேயே பதவி உயர்வு கிடைக்கப் பெறுவார்கள்.
தொழில் - தொழிலில் மிதமான முன்னேற்றம் உண்டு. புதிய முயற்சிகள் இப்போது வேண்டாம். அதேபோல தொழிலை விரிவுபடுத்த முதலீடுகளைச் செய்ய வேண்டாம். அதற்கு இன்னும் காலம் இருக்கிறது. இருக்கின்ற தொழிலை சிறப்பாகச் செய்தாலே போதும். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் இருப்பவர்கள் நல்ல வளர்ச்சி காண்பார்கள். ஆடை உற்பத்தியாளர்கள், நூல் உற்பத்தியாளர்கள், சாயத் தொழில் செய்பவர்கள் நல்ல வளர்ச்சியைக் காண்பார்கள், அதிக ஆர்டர்கள் பெறுவார்கள். கட்டுமானத் தொழில் செய்பவர்கள் இந்த வாரம் நல்ல வளர்ச்சியைக் காண முடியும். பங்கு வர்த்தகத் தொழில் செய்பவர்கள் கவனமாக முதலீடுகள் செய்ய வேண்டும்.
பெண்களுக்கு - குடும்பத்தில் சுப விசேஷங்கள் நடைபெறும். உங்கள் சகோதரருக்கு திருமணம் நடக்க வாய்ப்பு இருக்கிறது, அல்லது திருமணம் உறுதி செய்யப்படும். உங்கள் கணவருக்குப் பதவி உயர்வு கிடைக்கும். உங்கள் பெயரில் சொத்துக்கள் வாங்கும் யோகமும் உண்டு.
மாணவர்களுக்கு - கல்வியில் முன்னேற்றம் இருக்கிறது. உயர் கல்விக்கான வாய்ப்புக்கள் எளிதாக கிடைக்கும்.
கலைஞர்களுக்கு - நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்கள் உங்களைப் பரிந்துரைப்பார்கள். நண்பர்களால் ஒரு சில ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கிறது.
பொதுப்பலன் - வீடு மாற்றம், இடமாற்றம் ஏற்படும். சொந்த வீடு வாங்கும் கனவு நிறைவேறும். அயல்நாடு செல்லும் முயற்சிகளில் முழு வெற்றி தரும். வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு குடியுரிமை உள்ளிட்ட சலுகைகள் கிடைக்கும். பணிநீட்டிப்பு கிடைக்கும். முதலீட்டுத் திட்டங்களில் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்வீர்கள்.
இந்த வாரம் -
திங்கள் - வீடு, நிலம் போன்றவற்றை பத்திரப்பதிவு செய்ய ஏற்ற நாள். ஆதாயங்கள் அதிகமாகும். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.
செவ்வாய் - இன்று தங்களது உழைப்பு மற்றவர்களுக்காக இருக்கும். உங்களுக்கு கிடைக்கவேண்டிய ஆதாயங்கள் வேறொரு நபருக்குச் செல்லும். உங்கள் பெயரைப் பயன்படுத்தி மற்றவர்கள் ஆதாயமடைவார்கள்.
புதன் - கடன்களை அடைக்க வாய்ப்புகள் கிடைக்கும். வங்கிக் கடன் கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. அல்லது வங்கியிலிருந்து கடன் தருவதற்கு ஒப்புதல் கிடைக்கப் பெறுவீர்கள். எதிர்பார்த்த ஒரு காரியம் நடந்து லாபம் கிடைக்கப் பெறுவீர்கள்.
வியாழன் - பொறுமையும் நிதானமும் தேவை. மற்றவர்களிடம் பேசும்போது கவனமாக இருங்கள். உங்களுடைய பேச்சு மற்றவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தலாம். நகைச்சுவையாக பேசுவதாக நினைத்து மற்றவர்களை காயப்படுத்த முயல வேண்டாம்.
வெள்ளி -தொலைதூர நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். வெகு காலமாக மறந்திருந்த நண்பரை சந்திக்க நேரிடும். புதிய நட்பு ஒன்று ஏற்படும், அவர்களால் ஆதாயம் ஏற்படும்.
சனி - இன்று சந்திராஷ்டமம். கவனமாக இருக்கவேண்டும். பயணங்களைத் தவிர்க்க வேண்டும். ஒப்பந்தங்கள் எதுவும் போடக்கூடாது. முக்கிய பேச்சுவார்த்தைகளை தள்ளி வையுங்கள்.
ஞாயிறு - பிரச்சினைகள் அதிகரிக்கும். அலைச்சல்கள் அதிகரிக்கும். ஒன்றுமில்லாத விஷயத்திற்கு ஊர் முழுவதும் சுற்றி வருவீர்கள். பெரிய நன்மை ஏதுமில்லை.
வணங்கவேண்டிய தெய்வம் - முருகப் பெருமானுக்கு மலர்மாலை சூட்டி, நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள். உங்கள் பிரச்சினைகள். எல்லாம் தீரும். கவலைகள் மறையும். ஆதாயம் ஏற்படும்.

*******************************************************************************************************

அனுஷம் -
குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் தீரும். பண வரவில் இருந்த தடைகள் மெள்ள மெள்ள அகல ஆரம்பிக்கும். தேவையில்லாத பிரச்சினைகளில் சிக்கி இருந்த நீங்கள், இப்போது அந்த பிரச்சினைகளிலிருந்து வெளியே வருவீர்கள். எதிர்ப்புகளும் எதிரிகளும் அதிகமாக இருந்தது, இனி எதிர்ப்புகள் மறைய ஆரம்பிக்கும். எதிரிகள் காணாமல் போவார்கள். சகோதர வழியில் இருந்த சண்டை சச்சரவுகள் நீங்கி சமாதானமாகும். தேவையற்ற சர்ச்சைகளில் சிக்கி இருந்தால், இப்போது அந்த சர்ச்சைகள் நீங்கும். யாரிடமாவது பணம் கொடுத்து ஏமாந்து இருந்தால் அந்தப் பணம் இப்போது திரும்பக் கிடைக்க வழி கிடைக்கும். மருத்துவச் செலவுகள் குறையும். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டு இருந்தவர்கள் இப்பொழுது உடல் நலம் தேறி வீடு திரும்புவார்கள்.
உத்தியோகம் - வேலையில் இடமாற்றம் ஏற்படும். ஒரு சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பும் ஏற்படும். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் இருந்த சச்சரவுகள் முடிவுக்கு வரும். உங்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்படும். ஒருசிலருக்கு வேலையை விட்டுவிலகும்படி நிர்பந்தம் கொடுத்திருப்பார்கள். இப்போது அந்த நிர்பந்தம் விலகும். புதிதாக வேலை தேடுவோருக்கு இப்போது நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு வரும். வணிக நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் வேறு வேலைக்கு செல்ல முயற்சி செய்வீர்கள். இப்போது சாதகமாக இருக்கும்.
தொழில் - தொழிலில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். தொழிலை விரிவுபடுத்த முதலீடுகள் செய்வீர்கள். ஒரு சில தொழில் நிறுவனங்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்பாக, சில வெளிநாட்டு முதலீடுகள் கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்பவர்கள் வளர்ச்சி காண்பார்கள். தொழில் சார்ந்த வழக்குகள் ஏதும் இருந்தால் இப்போது தள்ளி வைக்கப்படும். அரசு வழியில் இருந்த நெருக்கடிகள் நீங்கும். புதிதாக தொழில் செய்ய விரும்புவோர் ஆரம்பகட்ட வேலைகளை மட்டும் பார்க்கலாம். கட்டுமானத் தொழில் செய்பவர்கள் வளர்ச்சிப் பாதைக்கு திரும்புவார்கள். எதிர்பார்த்த வங்கிக் கடன் இப்போது கிடைக்கும்.


பெண்களுக்கு - சுபச் செலவுகள் அதிகமாகும். வீடு வாங்கும் யோகம் உண்டு. ஆபரண சேர்க்கையும் ஏற்படும். அடகு வைத்த பொருட்களை மீட்க வழி கிடைக்கும். தள்ளிப் போய்க்கொண்டிருந்த திருமண முயற்சிகள் இப்போது கைகூடும்.
மாணவர்களுக்கு - கல்வியில் ஆர்வம் குறையும். ஞாபக மறதி அதிகமாகும். தேர்வுகளில் தவறான பதில்களை எழுதுவீர்கள்.
கலைஞர்களுக்கு - அற்புதமான வாய்ப்புகள் ஏற்படும். ஒப்பந்தங்கள் உண்டாகும். நண்பர்கள் உங்களுக்கு உதவுவார்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. நீண்ட நாளாக வராத தொகை இப்போது கைக்கு வந்து சேரும்.
பொதுப்பலன் - வெளிநாடு செல்லும் முயற்சிகள் வெற்றியாகும். வெளிநாட்டில் வசிக்கும் நபர்கள் குடியுரிமை பெறுவார்கள். வேலைக்காக பிரிந்து இருந்த தம்பதியினர் இப்போது ஒன்றுசேர்வார்கள். இருவருக்கும் ஒரே இடத்தில் வேலை செய்யும் வாய்ப்பு கிடைக்கும். இது அயல் நாடாக இருந்தாலும் பொருந்தும்.
இந்த வாரம் -
திங்கள் - புதிய பேச்சுவார்த்தைகள் எதுவும் செய்ய வேண்டாம். ஒப்பந்தங்கள் எதுவும் போட வேண்டாம். தொழில் பயணமோ, தனிப்பட்ட பயணமோ.எதுவாக இருந்தாலும் தவிர்க்க வேண்டும்.
செவ்வாய் - ஆதாயங்கள் ஏற்படும் நாள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். முக்கியமான பிரச்சினை ஒன்று முடிவுக்கு வரும். எதிர்பார்த்த வங்கிக் கடன் .சம்பந்தமாக சாதகமான தகவல்கிடைக்கும்.
புதன் - உங்களுக்கு சம்பந்தமில்லாத பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். அடுத்தவர் விஷயங்களில் உங்கள் கருத்துக்களைச் சொல்லாதீர்கள். அது உங்களுக்கு எதிராகத் திரும்பும்.
வியாழன் -நண்பர்களிடம் இருந்து உதவிகள் கிடைக்கும். உற்றார் உறவினர்கள் கூட உங்கள் பிரச்சினைகளுக்கு உதவுவார்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.நீண்ட நாளாக பிரச்சினைக்குரிய ஒரு கடன் இன்று தீர்க்கப்படும்.
வெள்ளி -பிறருக்காக நீங்கள் வேலை செய்ய வேண்டியது வரும். சம்பந்தமே இல்லாத நபர் கூட உங்களை வேலை வாங்குவார்.
சனி -பல்வேறு உதவிகள் கிடைக்கும். தொலைபேசி வழித் தகவல் உற்சாகத்தைத் தரும். முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும்.
ஞாயிறு - இன்று செய்யப்படும் வேலைகள் அனைத்தும் உங்களுக்கு நல்ல ஆதாயத்தை ஏற்படுத்தித் தரும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள், அவர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள்.

வணங்க வேண்டிய தெய்வம் -
ஸ்ரீ வாராஹி அம்மனை வழிபடுங்கள். ஸ்ரீ வாராஹி மூல மந்திரத்தை உச்சாடனம் செய்யுங்கள், வளர்ச்சி அதிகமாகும். தடைகள் அகலும். தன்னம்பிக்கை பிறக்கும்.

*******************************************************************************************************

கேட்டை -
கொடுத்த வாக்குறுதியை எப்பாடுபட்டாவது நிறைவேற்றுவீர்கள். ஏற்கனவே தள்ளி வைக்கப்பட்ட காரியங்கள் இப்பொழுது நடைபெற ஆரம்பிக்கும். மறைமுக எதிரிகள் விலகிப் போவார்கள். அலுவலகத்தில் உங்களுக்கு பிரச்சினை உண்டு பண்ணிய ஊழியர், இப்பொழுது அலுவலகத்தை விட்டு வெளியேறுவார். ஆனாலும், ஒரு சில பிரச்சினைகள் இருக்கும். அவர்களை சமாளிக்கும் ஆற்றல் உங்களுக்கு இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வருத்தங்கள் மறையும். குடும்பத்தினர் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.
உத்தியோகம் - பணியிட மாற்றம் எதிர்பார்த்தவர்களுக்கு இப்பொழுது பணியிடமாற்றம் கிடைக்கலாம். அயல்நாடு செல்லும் முயற்சிகள் வெற்றியாகும். ஒரு சிலர் வேறு வேலைக்கு மாற முயற்சி மேற்கொள்வார்கள், அது நல்ல பலனைத் தரும். சேவை சார்ந்த தொழில் புரிவோர் இழந்த வாடிக்கையாளர்களை மீண்டும் பெறுவார்கள். ஒப்பந்தங்கள் கிடைக்கும். விற்பனைப் பிரதிநிதிகளுக்கு அலைச்சல் அதிகமானாலும், ஆதாயம் ஏற்படும். சிறு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் வேறு நல்ல நிறுவனங்களுக்கும் மாறும் முயற்சி வெற்றி ஆகும்.
தொழில் - தொழிலில் எதிர்பார்த்துக் கொண்டிருந்த முன்னேற்றம் இப்பொழுதுதான் ஆரம்பிக்கும். இனி தொடர்ச்சியாக வளர்ச்சி உண்டு. புதிதாக தொழில் தொடங்கும் எண்ணம் உடையவர்கள் ஆரம்பகட்ட வேலைகளைப் பார்க்கலாம். கட்டுமானத் தொழில் செய்பவர்கள் வளர்ச்சிப் பாதையில் செல்வார்கள். கொடுக்கல் வாங்கல் தொழில் செய்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். சரியான நபர்களை தேர்ந்தெடுத்து கடன் தர வேண்டும். நீங்கள் ஏமாற்றப் பட வாய்ப்பு இருக்கிறது.
பெண்களுக்கு - குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் எல்லாம் தீரும். ஒருவருக்கொருவர் ஆளுக்கொரு திசையில் பயணித்துக் கொண்டிருந்தீர்கள், இனி அந்த நிலை இருக்காது, குடும்பத்தினர் அனைவரும் ஒன்று சேர்வார்கள். சுபநிகழ்ச்சிகள், சுப விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். சுப விரயங்கள் ஏற்படும்.
மாணவர்களுக்கு - கல்வியில் ஓரளவுக்கு முன்னேற்றம் உண்டு. புதிய கல்வி பயிலும் ஆர்வம் ஏற்படும். அல்லது புதிய மொழி கற்கும் ஆர்வம் உண்டாகும். தேர்வுகளில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும்.


கலைஞர்களுக்கு - வாய்ப்புகள் தானாக வரும். இதுவரை பணப்புழக்கம் இல்லாமல் சிரமப்பட்டு வந்தீர்கள், இனி பணப் பழக்கத்திற்கு தடை இருக்காது. நின்றுபோன பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கும்.
பொதுப்பலன் - தேவையற்ற பிரச்சினைகளில் தலையிடாமல் இருந்தாலே போதும். இந்த வாரம் சிறப்பாகவே இருக்கும். வழக்கு ஏதேனும் நடந்து கொண்டிருந்தால் தள்ளிப்போகும். உங்கள் மீதான விசாரணைகள் இருந்திருந்தால் அது கைவிடப்படும். பணவரவில் இருந்த தடைகள் நீங்கும். வெளிநாடு செல்லும் முயற்சிகள் வெற்றியைத் தரும். குடும்பத்தை விட்டுப் பிரிந்து இருந்தவர்கள் இப்பொழுது ஒன்று சேர்வதற்கான வாய்ப்புகள்உண்டாகும்.
இந்த வாரம் -
திங்கள் - எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். பலவிதத்திலும் வருமானங்கள் வரும். கிடைக்கின்ற வாய்ப்புகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
செவ்வாய் - புதிதாக எதுவும் செய்ய வேண்டாம். குறிப்பாக பேச்சுவார்த்தைகள் தொடங்குவது, ஒப்பந்தங்கள் போடுவது போன்ற எதையும் செய்ய வேண்டாம். பயணங்களையும் தவிர்ப்பது நல்லது.
புதன் - ஆதாயங்கள் அதிகமாகும். வருமானம் கூடும். சொந்த வீடு கனவு நனவாகும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும்.
வியாழன் - இன்று நாள் முழுவதும் பலவித வேலைகள் செய்தாலும் ஆதாயங்கள் தள்ளிப்போகும். மற்றவர்களுக்கு நீங்களாகவே உதவிசெய்வீர்கள்.
வெள்ளி - நீண்ட நாளாக பிரச்சினை தந்து கொண்டிருந்த ஒரு கடனை இன்று அடைக்க வாய்ப்பு இருக்கிறது. அல்லது அதில் ஒரு பகுதியாவது இன்று அடைப்பீர்கள். எதிர் பார்த்த பணம் கிடைக்கும். ஒப்பந்தங்கள் உண்டாகும். பயணங்களால் ஆதாயம் உண்டு.
சனி- அமைதியாக இருக்க வேண்டும். தேவையற்ற பிரச்சினைகளில் தலையிட வேண்டாம் .அடுத்தவர் விஷயங்களில் உங்கள் கருத்துக்களைத் திணிக்க வேண்டாம்.
ஞாயிறு - பழைய நண்பர்களைச் சந்திப்பீர்கள். அவர்கள் தரும் தகவலை வைத்து ஒரு ஆதாயம் தரும் தொழிலை செய்வதற்கு வாய்ப்பிருக்கிறது. முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும்.
வணங்க வேண்டிய தெய்வம் - அனுமனுக்கு வெற்றிலை மாலை சூட்டி வழிபடுங்கள் .அனுமன் சாலீசா பாராயணம் செய்யுங்கள். நன்மைகள் பெருகும். தடைகள் விலகும். நம்பிக்கை அதிகமாகும்.

**************************************************************************************************************

மூலம் -
மனபாரங்கள் ஓரளவு தீரும். வீபரீத சிந்தனைகள் இனி இருக்காது. மன அழுத்தங்கள் குறைய ஆரம்பிக்கும். வாழ்க்கைத் துணைக்கு ஏற்பட்ட உடல் நலக் கோளாறுகள் சரியாகும், விரைவில் முழுமையாக குணமாவார்.இடமாற்றம், வீடு மாற்றம் ஏற்படும். உங்கள் உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள். வீடு பராமரிப்பு, வீட்டு உபயோகப் பொருட்கள் பழுதடைவது போன்ற செலவுகள் ஏற்படும்.
உத்தியோகம் - வேலையில் கூடுதல் சுமை ஏற்படும். வேலை இழந்தவர்களுக்கு இந்த வாரம் மீண்டும் வேலை கிடைக்கும். ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆட்பட்டவர்கள் இப்போது ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்பட்டு மீண்டும் பணியில் சேர்வார்கள்.அரசு ஊழியர்கள் விரும்பிய இடமாற்றம் கிடைக்கப் பெறுவார்கள். விற்பனைப் பிரதிநிதிகளுக்கு அலைச்சல் அதிகமாக இருந்தாலும், ஆதாயம் இருக்கும். சேவை சார்ந்த தொழில் செய்பவர்களுக்கு புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். லாபம் ஓரளவுக்கு கிடைக்கும்.
தொழில் - தொழிலில் ஓரளவுக்கு முன்னேற்றம் ஏற்படும். பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். வழக்குகள் தள்ளிப்போகும். போட்டி நிறுவனங்கள் சற்று அடக்கி வாசிப்பார்கள். ஏற்றுமதி இறக்குமதி தொழில் நல்ல வளர்ச்சி ஏற்படும். ஆடை உற்பத்தியாளர்கள் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். இரும்பு சம்பந்தப்பட்ட தொழில் நல்ல வளர்ச்சி உண்டாகும். உணவகத் தொழில் செய்பவர்கள் புதிய கிளைகளை தொடங்குவார்கள். உணவகம் சார்ந்து புதிய தொழில் செய்ய முனைபவர்கள் தகுந்த இடம் கிடைக்கப் பெறுவார்கள்.
பெண்களுக்கு - குடும்ப பாரம் அதிகரிக்கும். பொறுப்புகள் கூடும். குடும்ப பிரச்சினைகளை தனி ஒருவராக நீங்கள் சமாளிக்க வேண்டியது வரும். கணவரின் உடல்நலத்தில் சிறு சிறு குறைபாடுகள் வந்து மறையும். செலவுகள் கட்டுப்படுத்த முடியாது.
மாணவர்களுக்கு - அயல் நாட்டுக் கல்வி முயற்சிகள் வெற்றியடையும். உயர்கல்வி படிப்பவர்களுக்கு நல்ல மதிப்பெண்கள் , மற்றும் தேர்ச்சி விகிதம் அதிகமாக இருக்கும்.
கலைஞர்களுக்கு - லாபம் தரும் ஒப்பந்தங்கள் ஏற்படும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். புதிய வாய்ப்பு ஒன்று கிடைத்து அது சம்பந்தமான பேச்சுவார்த்தைகள் நடைபெறும்.


பொதுப்பலன் - பிரச்சினைகள் அதிகமாக இருந்தாலும் அதிலிருந்து வெளிவரும் சக்தி உங்களுக்குள் உருவாகும். நண்பர்களிடமிருந்த கொடுக்கல் வாங்கல்கள் மனவருத்தத்தை ஏற்படுத்தி, பின்பு சமாதானம் ஆகும். வாழ்க்கைத்துணையின் உடல்நலத்தில் அக்கறை செலுத்துங்கள்.
இந்த வாரம் -
திங்கள் - இடமாற்ற சிந்தனையில் ஏற்படும் ஆதாயம் தரும். வேலைக்காக அலைச்சல் கூடும்.
செவ்வாய் - அனைத்துக் காரியங்களும் வெற்றியாகும். எடுக்கின்ற முயற்சிகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக முடியும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். எதிர்பார்த்து காத்திருந்த பணம் கைக்கு வந்து சேரும்.
புதன் - நண்பர்கள், உறவினர்கள் வாடிக்கையாளர்கள் இவர்களிடம் கவனமாகப் பேச வேண்டும் உங்கள் பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட வாய்ப்பு இருக்கிறது.
வியாழன் - ஆதாயங்கள் அதிகமாகும். பயணங்களால் லாபமும் உண்டாகும். வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். பெரிய செலவாக இருக்குமோ என பயந்த வாகனச் செலவு ஒன்றுமில்லாமல் போகும்.
வெள்ளி - முகம் தெரியாத ஒரு நபருக்காக உதவி செய்வீர்கள். அலுவலகத்தில் உங்களுக்கு சம்பந்தமே இல்லாத ஒரு வேலையைக் கொடுப்பார்கள்.
சனி - எதிர்பார்த்த கடன் இன்று கைக்கு வந்து சேரும் ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தினர் தேவைகளுக்கான பணத்தை ஒதுக்கி தருவீர்கள்.
ஞாயிறு - அன்று பயணங்கள் எதுவும் மேற்கொள்ள வேண்டாம். அது வீண் அலைச்சலாக முடியும். அக்கம்பக்கத்தினரும் தேவையில்லாத சச்சரவுகளை ஏற்படுத்த வேண்டாம்.
வணங்கவேண்டிய தெய்வம் - சிவபெருமானுக்கு பால் அபிஷேகம் செய்யுங்கள் அல்லது அபிஷேகப் பொருட்கள் வாங்கித் தாருங்கள். கூடுதல் நன்மைகள் நடக்கும். ஆரோக்கியம் மேம்படும் பணத்தேவைகள் பூர்த்தியாகும்.

****************************************************************************************************************

பூராடம் -
வரவுகள் இருக்கும். ஆனால் வரவை விட செலவு அதிகமாக இருக்கும். சேமிப்பு குறையும். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். குடும்பத்தில் ஒருவித இறுக்கமான சூழ்நிலை இருக்கும். பிரச்சினைகள் என்னவென்று தெரியாது தவிப்பீர்கள். அதிக பற்றாக்குறையால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். பழைய கடன்கள் நெருக்கடி தரும். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் அதிகமாகும், ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது.
உத்தியோகம் - வேலையில் கூடுதல் பணிச்சுமை ஏற்படும். ஒரு சிலருக்கு இருக்கும் வேலையை விட்டுவிட்டு வேறு வேலைக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலைகள் உருவாகும். வெளிநாடு செல்லும் முயற்சிகள் நல்ல பலனைத் தரும். ஆசிரியர்கள், வங்கித் துறை சார்ந்தவர்கள் இடமாற்றத்தை வேண்டி கேட்டுக் கொள்வார்கள். பதவி உயர்வு தாமதம் ஆகலாம். எதிர்பார்க்கப்படும் ஊதிய உயர்வு தள்ளிப் போகும். சேவை சார்ந்த வேலை செய்பவர்கள் அலைச்சல் அதிகமாகும். ஆதாயம் குறையும். ஒரு சிலர் வாடிக்கையாளர்களை இழக்க வேண்டிய நிலை வரும்.
தொழில் - முன்னேற்றப் பாதைக்கு செல்ல முதலீடுகள் அதிகமாக வேண்டியது வரும். வரவேண்டிய பாக்கிகள் மேலும் தள்ளிப்போகும். வெளிநாட்டு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவீர்கள். ஒருசிலருக்கு அயல்நாட்டிலிருந்து முதலீடுகள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. ஏற்றுமதி-இறக்குமதி துறையில் நல்ல லாபத்தை தரும். பங்கு வர்த்தகத் துறையில் இருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும், அதிக முதலீடு செய்ய வேண்டாம். கட்டுமானத் தொழில் செய்பவர்கள் மந்த நிலை தொடரும். ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் இந்த வாரம் பெரிய எதிர்பார்ப்புகள் வைத்துக்கொள்ள வேண்டாம்.


பெண்களுக்கு - தேவையற்ற குழப்பங்கள் உருவாகும். சந்தேகம் அதிகமாகும். புதிய நட்பு உருவாகும். அந்த நட்பால் சில பிரச்சினைகள் வர வாய்ப்பு உள்ளது.
மாணவர்களுக்கு - கல்வியில் சுமாரான நிலையே இருக்கிறது. அதிக கவனம் வேண்டும். தேவையற்ற சிந்தனைகள் மனதில் உருவாகும்.
கலைஞர்களுக்கு - நல்ல வாய்ப்புகள் கிடைத்து ஒப்பந்தங்கள் உண்டாகும். நண்பர்களால் ஒரு சில வாய்ப்புகள் கிடைத்தாலும் கிடைக்கலாம்.
பொதுப்பலன் - குடும்பத்தினருக்குள் ஒற்றுமை வேண்டும். உங்களுக்குள் பிரச்சினைகளை உண்டுபண்ண வெளி நபர் ஒருவர் முயல்வார். அப்படிப்பட்ட நபரை இனம் கண்டு ஒதுக்கி வைக்க வேண்டும். சகோதரர்களுக்கும் தேவையற்ற மன வருத்தங்கள் உண்டாகும். கவனமாக ஒருவருக்கொருவர் பிரச்சினைகளைக் கையாள வேண்டும்.
இந்த வாரம் -
திங்கள் - இன்றைய தினம் அதிக நன்மைகளை கிடைக்கப் பெறுவீர்கள். இட மாற்றத்திற்கான உத்தரவு கிடைக்கும்.
செவ்வாய் - நன்மைகள் பலவாறாக நடக்கும். நினைத்ததை நினைத்த மாதிரியே செய்து முடிப்பீர்கள். தன வரவு தாராளமாக இருக்கும். செயல்களில் முழு வெற்றி உண்டாகும்.
புதன் - தன வரவு தாராளமாக இருக்கும். பணம் பல வழிகளிலும் வந்து சேரும். எடுத்த முயற்சிகள் நன்மை தரும். எல்லா செயல்களிலும் வெற்றியை உண்டாக்கும்.
வியாழன் - புதிய முயற்சிகளில் இறங்க வேண்டாம். பயணங்களைத் தவிர்க்க வேண்டும். ஒப்பந்தங்கள் எதுவும் போட வேண்டாம்.
வெள்ளி - வீடு மாற்றம் ஏற்படும். ஆதாயம் தரும் பயணம் ஏற்படும். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். வங்கிக் கடன் கிடைக்கும்.
சனி - வேலை நிமித்தமாக எவ்வளவு சுற்றினாலும் அலைச்சல்தான் மிச்சம். ஆதாயம் ஒன்றும் இருக்காது.
ஞாயிறு - சில்லறைக் கடன்களை அடைக்க பெரிய கடன் ஒன்றை வாங்குவீர்கள். புதிதாக தொழில் தொடங்கவும் சிந்தனை உருவாகும்.
வணங்கவேண்டிய தெய்வம் -
ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மருக்கு பொங்கல் நைவேத்தியம் செய்யுங்கள். வேண்டியது கிடைக்கும். தேவைகள் பூர்த்தியாகும். எதிர்ப்புகள் அகலும்.

****************************************************************************************************


உத்திராடம் -
பலவித உதவிகள் கிடைக்கும். நன்மைகள் அதிகமாகும். எதிர்ப்புகள் விலகும். வழக்குகள் சாதகமாகும். பணவரவு எதிர்பார்த்ததைவிட திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். சுபச் செலவுகள் உண்டாகும். உறவினர் வீட்டு விசேஷங்களுக்கு உதவி செய்வீர்கள். சொந்த வீடு வாங்கும் கனவு நனவாகும். விவசாய நிலம் வாங்கவும் வாய்ப்பு உண்டு. ஒருசிலர் வேலையை விட்டு விலகி சொந்தத் தொழில் செய்ய முற்படுவார்கள்.
உத்தியோகம் - வேலையில் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். விரும்பிய இடமாற்றம் ஏற்படும். சக ஊழியர்களிடம் நன்மைகளை எதிர்பார்க்கலாம். வெளிநாட்டில் வேலை தேடுபவர்களுக்கு இந்த வாரம் நல்ல தகவல் கிடைக்கும். இதுவரை வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும். சேவை சார்ந்த வேலை செய்பவர்களுக்கு அதிக ஒப்பந்தங்கள் கிடைக்கும். லாபம் அதிகமாகும்.
தொழில் - எதிர்பார்ப்பை விட அதிக வளர்ச்சி ஏற்படும். செய்கின்ற தொழிலோடு இணைந்த ஒரு தொழில் செய்ய முன்வருவீர்கள். புதிதாக தொழில் தொடங்க ஆர்வமுடையவர்கள் இந்த வாரம் அதற்கான பலன்கள் கிடைக்கப் பெறுவார்கள். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் சாதனை படைக்கும் அளவுக்கு ஒப்பந்தங்கள் கிடைக்கும். ஆடை உற்பத்தியாளர்கள் அதிக அளவில் ஏற்றுமதி செய்வார்கள். வியாபாரிகளுக்கு நல்ல வளர்ச்சி ஏற்படும். புதிதாக கிளைகள் தொடங்குவார்கள். கட்டுமானத் தொழில் செய்பவர்கள் நல்ல வளர்ச்சியைக் காண்பார்கள். பங்கு வர்த்தகத் தொழில் செய்பவர்கள் அதிக லாபம் கிடைக்கப் பெறுவார்கள்.
பெண்களுக்கு - இதுவரை திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் உறுதியாகும். வேலையில்லாதவர்களுக்கு இப்பொழுது வேலை கிடைக்கும். ஆன்மிகப் பயணங்கள் உண்டாகும். சொத்து சேர்க்கை இயல்பாக ஏற்படும்.
மாணவர்களுக்கு - கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு. எதிர்பார்த்ததை விட அதிக மதிப்பெண் பெறுவீர்கள். பட்டப்படிப்பு படிப்பவர்களுக்கு நல்ல தேர்ச்சி விகிதம் இருக்கும்.
கலைஞர்களுக்கு - கிடைக்கின்ற வாய்ப்புகள் அனைத்துமே உங்களுக்கு நன்மை தருவதாக இருக்கும். அசையாச் சொத்துக்கள் வாங்குவீர்கள்.
பொதுப்பலன் - பலவித நன்மைகள் ஏற்படுகின்ற வாரம் . எடுத்த முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடையக்கூடிய வாரம் . நிலம் வீடு போன்ற சொத்துக்களில் முதலீடுகள் செய்வீர்கள். ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். கடன்கள் தீரும். உங்கள் பிள்ளைகளுக்கு திருமண முயற்சிகள் ஆரம்பிப்பீர்கள்.


இந்த வாரம் -
திங்கள் - அதிக நன்மைகள் ஏற்படும். கணிசமான லாபம் கிடைக்கும். சேமிப்புகள் உயரும் . பல்வேறு விதமான உதவிகள் கிடைக்கும்.
செவ்வாய் - வெளிநாட்டில் இருந்து வரும் தகவல் உங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். வெளிநாட்டுப் பயணங்கள் உறுதியாகும். இடமாற்ற உத்தரவுகள் கிடைக்கும்.
புதன் - குடும்ப விஷயமாக ஒரு முக்கிய முடிவு எடுப்பீர்கள். உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக முதலீடு ஒன்றை செய்ய முற்படுவீர்கள்.
வியாழன் - எடுத்த காரியங்கள் அனைத்திலும் முழு வெற்றி கிடைக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். சொந்த வீடு வாங்கும் கனவு நிறைவேற வாய்ப்பு இருக்கிறது.
வெள்ளி - முக்கிய முடிவுகள் எதுவும் எடுக்க வேண்டாம். ஒப்பந்தங்கள் எதுவும் போட வேண்டாம். பயணங்களால் ஆதாயம் இருக்காது.
சனி- ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். மருத்துவச் செலவுகள் குறையும். கடன் அடைபடும். அடகு வைத்த நகைகளை மீட்பீர்கள்.
ஞாயிறு - அலைச்சல் அதிகரிக்கும். தேவையற்ற குழப்பங்கள் வரும். மனம் சஞ்சலப்படும். அமைதியாக இருப்பது நல்லது. நண்பர்களோடு வெளியே செல்ல வேண்டாம்.
வணங்கவேண்டிய தெய்வம் - ஸ்ரீகாளகஸ்தி சென்று வாருங்கள், நன்மைகள் அதிகமாகும், செல்வம் சேரும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x