Published : 11 Nov 2019 12:26 PM
Last Updated : 11 Nov 2019 12:26 PM

இந்த வாரம் இப்படித்தான் - நட்சத்திர பலன்கள் - எந்தக் கிழமைகளில் என்னென்ன பலன்கள்? (நவம்பர் - 11 முதல் 17 வரை ) திருவாதிரை முதல் மகம் வரை

ஜோதிடர் ஜெயம் சரவணன்


திருவாதிரை -
முயற்சிகள் செயல் வடிவம் பெறும் வாரம் .தேங்கி நின்ற காரியங்கள் எல்லாம் வேகமெடுக்கும்.தாமதப்பட்டு வந்த திருமண முயற்சிகள் இப்போது நல்லபடியாக முடியும். வேலை தேடும் முயற்சியில் இருப்பவர்கள் இப்போது நல்ல வேலை கிடைக்கப் பெறுவார்கள். சொந்த வீடு வாங்கும் கனவு நிறைவேறும். வெளிநாடு செல்லும் முயற்சிகள் இப்போது தங்குதடையில்லாமல் நடந்தேறும்.
உத்தியோகம் - இதுவரை தடைப்பட்டு வந்த பதவி உயர்வு இப்போது கிடைக்கும். எதிர்பார்த்த இடமாற்றம் ஏற்படும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்வீர்கள். நீண்டநாளாக முடிக்காத ஒரு வேலையை இப்போது செய்து முடிப்பீர்கள். இந்தவாரம் வேலையில் வரவேண்டிய நிலுவைத் தொகைகள் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. அலுவலக நண்பர்களோடு பயணமொன்றை மேற்கொள்வீர்கள். சேவை சார்ந்த தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், சிறு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், அனைவருக்கும் ஏற்றம் தரும் வாரம் இது. ஊதிய உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும்.

தொழில் - பிரச்சினைகள் எல்லாம் முடிவுக்கு வந்து தொழில் வளர்ச்சியை நோக்கிச் செல்லும். . அரசு வழியில் இருந்த சச்சரவுகள் நீங்கும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். அரசின் உதவிகள் கிடைக்கும். வரி சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் சுமுகமாக முடியும்.
வியாபாரிகளுக்கு வியாபாரம் பெருகும். தங்கள் வியாபார நிறுவனத்தை வேறு இடத்திற்கு மாற்றும் முயற்சி நன்மையை தரும். கொடுக்கல்வாங்கல் தொழில் செய்பவர்கள் பழைய பாக்கிகள் வசூலாகி மனநிறைவை அடைவார்கள். பங்கு வர்த்தகம் சார்ந்த தொழில் செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
பெண்களுக்கு - தடைபட்டு வந்த திருமணம் முயற்சிகள் இப்போது நல்ல முடிவுக்கு வரும். இதுவரை புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உருவாகும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். அரசு வேலை கிடைக்கவும் வாய்ப்புண்டு. சொத்து சேர்க்கை ஏற்படும். சகோதரர் வழியிலிருந்த பிரச்சினைகள் சுமுகமாகும். உங்கள் கணவருக்கோ, அல்லது பிள்ளைகளுக்கோ இப்பொழுது நல்ல வேலை அல்லது பதவி உயர்வு கிடைக்கும்.
மாணவர்களுக்கு - கல்வியில் சற்று கவனம் வேண்டும். கவனச்சிதறல் ஏற்படும். மனதை ஒருமுகப்படுத்த முடியாது திணறுவீர்கள். தியானப் பயிற்சி மேற்கொள்ளுங்கள்.
கலைஞர்களுக்கு - நல்ல ஒப்பந்தங்கள் கிடைக்கும். வெளிநாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். உங்கள் துறை சார்ந்த பயிற்சி நிறுவனங்கள் ஆரம்பிக்க முற்படுவீர்கள்.
பொதுப்பலன் - கிடைக்கின்ற வாய்ப்புகளை எல்லாம் சரியாகப் பயன்படுத்தினால் நல்ல முன்னேற்றம் வாழ்க்கையில் ஏற்படும். பணவரவு தாராளமாக இருக்கிறது. சேமிப்பு அவசியம். சேமிப்பும் உயரும் . வீட்டில் சுபகாரிய பேச்சுவார்த்தைகள் தொடங்கும். சொந்த வீடு வாங்குவீர்கள். வீட்டை மேலும் அழகுபடுத்த முற்படுவீர்கள். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். ஆரோக்கிய பிரச்சினைகள் தீரும்.
இந்த வாரம் -
திங்கள் - இன்று உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் சில வேலைகளை செய்து கொடுப்பீர்கள். இன்று செய்கின்ற வேலைகள் மற்றவர்களுக்காகவே இருக்கும்.
செவ்வாய் - மருத்துவச் செலவுகள் குறையும். கடன் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை தீர்ப்பீர்கள். வங்கிக்கடன் எதிர்பார்த்திருந்தால் இன்று நல்ல தகவல் கிடைக்கும்.
புதன் - இன்று உங்கள் செயல்பாடுகள் அனைத்தும் மற்றவர்களுக்கு சங்கடத்தை உண்டு பண்ணும். எனவே மற்றவர்களை எள்ளி நகையாட வேண்டாம்.
வியாழன் - அதிக நன்மைகள் ஏற்படும். பண வரவு உண்டு. எதிர்பாராத உதவி ஒன்று நண்பரால் கிடைக்கும்.
வெள்ளி - வெளிநாடு செல்லும் முயற்சிகள் இன்று நல்ல முடிவுகள் கிடைக்கும். வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளவும் வாய்ப்பு உண்டு. பணவரவு திருப்திகரமாக இருக்கும். நிலம் சம்பந்தப்பட்ட ஆதாயம் ஒன்று உண்டு.
சனி - ஒன்றுமில்லாத விஷயத்தை பெரிய பிரச்சினையாக நினைத்து உங்களை நீங்களே குழப்பிக் கொள்வீர்கள். மனதை நிதானமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
ஞாயிறு - அனைத்து நன்மைகளும் நடக்கும். எதிர்பார்த்த நல்ல காரியம் ஒன்று இன்று சுபமாக முடியும். திருமணப் பேச்சு வார்த்தைகள் உறுதியாகும். பணவரவு தாராளமாக இருக்கும். அனைத்து உதவிகளும் கிடைக்கும்.

வணங்க வேண்டிய தெய்வம் - திருக்கடையூர் அபிராமி அம்மனை வழிபடுங்கள். அல்லது அபிராமி அந்தாதி பாராயணம் செய்யுங்கள். நன்மைகள் அதிகமாகும். முயற்சிகள் வெற்றியாகும்.

****************************************************************************************************

புனர்பூசம் -
அதிக நன்மைகள் ஏற்படும் வாரம். பணவரவில் பெரிய தடைகள் எதுவும் இருக்காது. திருமண முயற்சிகள் கைகூடும். பிரிந்த தம்பதி மீண்டும் ஒன்றிணைவார்கள். கணவன் மனைவி பிரிவு சம்பந்தமாக வழக்குகள் ஏதும் இருந்தால், இப்போது அது வாபஸ் பெறப்பட்டு சேர்ந்து வாழ வழிவகை உண்டாகும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடக்கும். குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு திருமணம் நடக்கும். தாய்மையாக இருப்பவர்களுக்கு இந்த வாரம் குழந்தை பிறக்கும் வாய்ப்பு உண்டு.
உத்தியோகம் - பணியில் பெரிய மாறுதல் ஏதும் இல்லை. பதவி உயர்வு எதிர்பார்க்கலாம். இடமாற்றங்கள் நீங்கள் விரும்பியபடியே இருக்கும். வேறு நிறுவனங்களுக்கு மாறும் முயற்சிகள் வெற்றி பெறும். வேறு நிறுவனம் மாறும் முன் அவசர முடிவுகளை மட்டும் எடுக்க வேண்டாம். அதாவது இப்போது இருக்கும் வேலையை விட்டு விலக வேண்டாம், வேறு நிறுவனத்தில் இருந்து பணி ஆணை பெற்ற பின்பு இப்போது இருக்கும் வேலையை விடலாம். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு இப்போது நல்ல வேலை கிடைக்கும். அயல்நாடு செல்லும் முயற்சியெடுத்துக் கொண்டு இருந்தவர்கள் இந்த வாரமே நல்ல தகவல் கிடைக்கப் பெற்று, அயல்நாடு செல்வதற்கான முன் வேலைகளைத் தொடங்குவீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். சேவை சார்ந்த தொழில் செய்வோர் நல்ல வளர்ச்சி, முன்னேற்றம், அதிக வாடிக்கையாளர்களை பெறுதல் போன்றவை நடக்கும்,
தொழில் - தொழில் வளர்ச்சி நன்றாக இருக்கிறது. பலவாறான உதவிகள் கிடைக்கும். அரசு வழியில் இருந்த நிர்ப்பந்தங்கள் விலகும். இன்னும் சொல்லப்போனால், அரசின் உதவி கிடைக்கும். அரசின் சலுகைகள் கிடைக்கும். வரி தொடர்பான பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். கூட்டாளிகளிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் அகலும். புதிதாக தொழில் தொடங்குபவர்கள் இப்போது அதற்கு சாதகமான நேரம். எனவே, இப்போது தொழிலைத் தொடங்கலாம். கூட்டாக சேர்ந்து தொழில் செய்யும் எண்ணம் உடையவர்கள், அவரவர் ஜாதகத்தை ஆய்வு செய்த பின்பு கூட்டுத்தொழில் தாராளமாக தொடங்கலாம். வணிக நிறுவனங்கள், சிறு வியாபாரிகள் நல்ல வளர்ச்சி அடைவார்கள்., தங்கள் தொழில் சார்ந்த இடத்தை விரிவுபடுத்த முனைவீர்கள். நிதி நிறுவனங்கள் நடத்துபவர்களுக்கு இதுவரை வசூலிக்க முடியாமல் இருந்த தொகைகள் அனைத்தும் இந்த வாரம் திரும்பக் கிடைக்கும். பங்கு வர்த்தக தொழில் செய்பவர்கள் நல்ல வளர்ச்சியைக் காண்பார்கள். அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும்.
பெண்களுக்கு - மனக் கவலைகள் தீரும்.தாமதமாகிக் கொண்டிருந்த திருமண முயற்சிகள் இப்போது நல்ல முடிவுக்கு வரும். வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு இப்போது நல்ல வேலை கிடைக்கும். பதவி உயர்வு எதிர்பார்த்தவர்களுக்கு இப்போது பதவி உயர்வு ஏற்படும். திருமணமான பெண்களுக்கு புத்திரபாக்கியம் உண்டாகும். கணவருக்கு பதவி உயர்வு கிடைக்கும். கணவர் தனியாக தொழில் செய்யும் முயற்சியை செய்வார்.


மாணவர்களுக்கு - கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு. ஒரு சில கவனச்சிதறல் ஏற்படும். சிறிது அக்கறையை கூட்டிக் கொள்ளுங்கள்.
கலைஞர்களுக்கு - அற்புதமான வாய்ப்புகள் தேடி வரும்.புதிய ஒப்பந்தங்கள் உண்டாகும். தனவரவு திருப்தி தரும். அயல்நாடுகளுக்குச் சென்று நிகழ்ச்சிகள் நடத்த வாய்ப்பு கிடைக்கும். ஒரு சிலருக்கு கௌரவப் பதவிகள், உரிய அங்கீகாரங்கள், பாராட்டு விழாக்கள் நடக்கும்.
பொதுப்பலன் - 90 சதவிகித நன்மைகள் நடக்கும். ஒரு சில விஷயங்கள் தாமதப்பட்டு, ஆனால் நல்ல முடிவு உண்டாகும். பணவரவு திருப்திகரமாக இருக்கிறது. ஒரு சிலருக்கு கடைசி நேரத்தில் பணத்தேவைகள் பூர்த்தியாகும். சொந்த வீடு கனவு நிறைவேறும். வாடகை வீட்டில் இருப்போர் வேறு வீடு மாற முயற்சி செய்வார்கள், பெரிய லாபங்களுக்கு ஆசைப்படாதீர்கள்.
இந்த வாரம் -
திங்கள் - அதிக நன்மைகள் நடக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். புதிய நண்பர் ஒருவரை சந்திப்பீர்கள். அவரால் ஆதாயம் உண்டு.
செவ்வாய் - நண்பர்களுக்காக உதவிகள் செய்வீர்கள். தர்ம காரியங்கள் செய்வீர்கள். ஆலயங்களுக்கு தேவையான சில கைங்கரியங்களை செய்து தருவீர்கள்.
புதன் - கடன் பிரச்சினைகள் தீர ஒரு புதிய முயற்சிகளை எடுப்பீர்கள். அது சாதகமாக இருக்கும். சிறு கடன்களை முழுமையாக அடைக்க வழி கிடைக்கும். எதிர்பார்த்த அரசு கடன், வங்கி கடன் கிடைக்கும்.
வியாழன் - இன்று ஆலய தரிசனம் செய்வதும், அமைதியாக இருப்பதும், மௌன விரதம் இருப்பதும், உங்களுக்கு குருவின் அருட் பார்வையும், அவரின் ஆசிர்வாதமும் கிடைக்கும்.பயணங்களைத் தவிர்க்க வேண்டும்.
வெள்ளி - அதிக நன்மைகள் நடைபெறும். முகம் தெரியாத நபர் கூட உங்களுக்கு உதவுவார். செய்கின்ற தொழில் அல்லது வியாபாரத்தில் பெரிய லாபம் ஒன்று ஏற்படும்.
சனி -வெளிநாடு செல்லும் முயற்சிகள் முழு வெற்றியை அடையும். வேலை.உத்தரவாதம் ஏற்படும். பயணங்களால் ஆதாயம் ஏற்படும். தொழில் விஷயமாக அல்லது வேலை விஷயமாக வெளியூர் செல்ல வேண்டியது வரும்.
ஞாயிறு - முடிவுகளை எடுக்க தடுமாறுவீர்கள். சற்று குழப்ப நிலை உருவாகும். வெளியூரிலிருந்து வரும் தகவல் சரியானதுதானா என தெரியாமல் திண்டாடுவீர்கள்.

வணங்கவேண்டிய தெய்வம் - தட்சிணாமூர்த்தி குருபகவானுக்கு கொண்டைக் கடலை நிவேத்தியம் செய்து, குழந்தைகளுக்கு தானம் தாருங்கள். பள்ளி செல்லும் ஏழை மாணவர்களுக்கு எழுதுபொருட்கள் வாங்கித் தாருங்கள். நன்மைகள் கூடுதலாகும், தடைகள் அகலும். மன நிறைவு உண்டாகும்.

*******************************************************************************************************

பூசம் -
முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். எதிர்ப்புகள் முழுமையாக விலகும். எதிரிகள் காணாமல் போவார்கள். வழக்குகள் அனைத்தும் சாதகமாகும். தொழில் அல்லது உத்தியோகத்தில் இருந்த அத்தனை பிரச்சினைகளும் இப்பொழுது காணாமல் போகும். அயல்நாடு செல்லும் முயற்சிகள் வெற்றியாகும். வெளிநாட்டில் இருந்து பெரிய உதவி ஒன்று கிடைக்கும். வெளிநாட்டு நண்பர்கள் உங்கள் மூலமாக முதலீடுகளை செய்ய முன்வருவார்கள். தடைகளும் தாமதங்களும் இனி கிடையாது. நல்ல நல்ல வாய்ப்புகள் கிடைக்கும், கிடைக்கும் வாய்ப்புகள் அனைத்தும் உங்களுக்கு நன்மை தருவதாகவே இருக்கும்.
உத்தியோகம் - நீண்ட நாளாக இழுபறியில் இருந்த பதவி உயர்வு இப்போது கிடைக்கும். அதுவும் உங்கள் போராட்டத்தினால்தான் கிடைக்கும். அலுவலகத்தில் உங்களைப்பற்றி தவறாக சித்திரித்துக் கொண்டிருந்தவர்கள் இப்போது அலுவலகத்தை விட்டு வெளியேறுவார்கள். அயல்நாடு செல்லும் முயற்சி, அங்கேயே பணி நிரந்தரம், குடியுரிமை அனைத்தும் கிடைக்கும். சேவை சார்ந்த வேலை செய்வோர் மனநிறைவு ஏற்படும் வகையில் வருமானம் உண்டாகும். உங்களுக்கு போட்டியாளர்களாக இருந்தவர்கள் காணாமல் போவார்கள். உங்களுக்கு வாடிக்கையாளர்கள் அதிகமாவார்கள்.
தொழில் -தொழில் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கிறது. புதிதாக எடுக்கப்படும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். தொழிலை விரிவுபடுத்தும் எண்ணம் சாதகமாக இருக்கிறது. அது தொடர்பான முயற்சிகளில் இறங்கலாம். புதிதாக தொழில் தொடங்குபவர்கள் சிறந்த முதலீட்டு நிறுவனங்களை அடையாளம் காண்பீர்கள். அவர்கள் மூலமாக தொழில் தொடங்குவதற்கான முயற்சிகள் இந்த வாரம் ஏற்படும். மொத்த வியாபாரிகள் நல்ல வளர்ச்சி அடைவார்கள். சிறு கடைகள், சிறு நிறுவனங்கள் நடத்தி வருபவர்கள் போட்டியாளர்களை எளிதாக சமாளித்து வெற்றி காண்பீர்கள். பங்கு வர்த்தகத் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் ஏற்படும்.
பெண்களுக்கு - குடும்பத்தில் அமைதி நிலவும். மனதிலிருந்த சஞ்சலங்கள் தீரும். அடகு வைத்த நகைகள் மீட்கப்படும். கடன் தொல்லைகள் தீரும். சகோதர வழியில் ஒரு ஆதாயம் ஏற்படும். சொத்து சம்பந்தமான பிரச்சனைகள் எளிதாக தீர்ந்து, உங்களுக்கான பங்கு கிடைக்கும். திருமண முயற்சிகள் வெற்றியாகும். வேலை தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு இந்த வாரம் வேலைக்கான உத்தரவு கிடைக்கப் பெறுவீர்கள்.
மாணவர்களுக்கு - அயல்நாட்டில் சென்று கல்வி பயிலும் முயற்சி வெற்றி ஆகும். அதற்கான உத்தரவுகள் இந்த வாரம் கிடைக்கப் பெறுவீர்கள். தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெறுவீர்கள்.
கலைஞர்களுக்கு - நல்ல ஒப்பந்தங்கள் கிடைக்கும். அயல்நாடு சென்று கலை நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள், அல்லது நீங்களே கலை நிகழ்ச்சிகள் நடத்த ஒருங்கிணைப்பு வேலைகளை செய்வீர்கள். எனவே பணத்தட்டுப்பாடு என்பதே இந்த வாரம் இல்லை. பணம் பல வழிகளிலும் வரும்.
பொதுப்பலன் - எடுக்கின்ற முயற்சிகள் முழு வெற்றியை பெறுகின்ற வாரம் . தயக்கம் என்பதே இனி கூடாது. தைரியமாக நல்ல முடிவுகளை எடுப்பீர்கள். தாமதப்பட்டுக் கொண்டிருந்த வேலைகள் அனைத்தும் இந்த வாரம் விறுவிறுப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கிறது. சொத்து சேர்க்கை ஏற்படும்.


இந்த வாரம் -
திங்கள் - அமைதியாக ஆலோசிப்பது நல்லது. மனதில் தேவையற்ற சிந்தனைகள் உருவாகும். சிலருக்கு குறுக்குவழி சிந்தனைகள் ஏற்படும். இதையெல்லாம் தவிர்க்க வேண்டும்.
செவ்வாய் - கிடைக்கின்ற வாய்ப்புகள் அனைத்தும் ஆதாயம் உடையதாக இருக்கிறது. எனவே சரியாக பயன்படுத்திக்கொள்ளுங்கள். வீடு வாங்கும் முயற்சி இன்று நல்ல முடிவுக்கு வரும். பத்திரப் பதிவு செய்யவும் இன்று உங்களுக்கு சாதகமாக இருக்கிறது.
புதன் - இன்று நீங்கள் எடுக்கின்ற முயற்சிகள் அனைத்தும் மற்றவர்களுக்கு ஆதாயமாகவும் ., உங்களுக்கு பெருமை மட்டும் சேர்ப்பதாகவும் இருக்கும்.
வியாழன் - மனதை வாட்டிக் கொண்டிருந்த கடன் பிரச்சினை ஒன்று இன்று முடிவுக்கு வரும். அந்த கடனை தீர்ப்பதற்கான வழி கிடைக்கும். கடன் அல்லது வட்டிகளில் சலுகைகள் ஏற்படும்.
வெள்ளி -இன்று பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. மற்றவர்களிடம் பேசும் பொழுது கவனமாக வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும். வீண் விவாதங்கள், சண்டை சச்சரவுகளை தவிர்க்க வேண்டும்.
சனி- பலவித உதவிகள் கிடைக்கும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். பண வரவு திருப்திகரமாக இருக்கும். பயணமொன்றை மேற்கொள்வீர்கள்.
ஞாயிறு - அதிக நன்மைகள் ஏற்படும். இன்று நீங்கள் எடுத்துக்கொள்ளும் முயற்சி முழு வெற்றியைத் தரும். அயல்நாடு செல்லும் முயற்சிகளில் இன்று நல்ல தகவல் கிடைக்கும்.
வணங்கவேண்டிய தெய்வம் - நாகராஜா அல்லது நாககன்னி அம்மன் போன்ற புற்றுக் கோயிலுக்கு சென்று வாருங்கள். நன்மைகள் அதிகமாகும், தடைகள் அகலும், எதிர்ப்புகள் காணாமல் போகும்.

**********************************************************************************************************


ஆயில்யம் -
உழைப்பதற்கு சிறிதும் தயங்காதவர்கள் நீங்கள். இந்த வாரம் உங்கள் உழைப்புக்கேற்ற வருமானம் கிடைக்கும். ஒரு சிலருக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டாகும். தொல்லை தந்த எதிரிகள் காணாமல் போவார்கள். வழக்குகள் சாதகமாகும். நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சினை இந்த வாரம் தீர்வு பெறும். திருமண முயற்சிகள் கைகூடும். சொந்த வீடு கனவு நனவாகும். அதற்கான வங்கிக்கடன் இந்த வாரம் கிடைக்கும்.
உத்தியோகம் - பணியிடத்தில் இருந்த எதிர்ப்புகள் முற்றிலுமாக அகலும். தொல்லை தந்தவர்கள் விலகிப் போவார்கள். அலுவல் விஷயமாக வெளியூர் அல்லது வெளிநாடு சென்று வருவீர்கள். கூடுதல் பொறுப்புகள் ஒப்படைக்கப்படும். ஒரு குழுவுக்கு தலைமை ஏற்று வழி நடத்த நியமிக்கப்படுவார்கள். ஊதிய உயர்வு உண்டாகும். வெளிநாடு சென்று வேலை செய்யும் முயற்சி வெற்றியாகும். அரசு ஊழியர்களுக்கு விரும்பிய இடமாற்றம் ஏற்படும். நிர்வாக ரீதியாக இருந்த பிரச்சினைகள் ஒன்றுமில்லாமல் போகும். விற்பனைப் பிரதிநிதிகள் தீவிரமாகப் பணியாற்றி இருமடங்கு இலக்குகளை எட்டுவீர்கள். சேவை சார்ந்த வேலை செய்பவர்கள் புதிய வாடிக்கையாளர்களைப் பெறுவார்கள்.
தொழில் -தொழில் நல்ல வளர்ச்சி உண்டாகும். விற்பனை சார்ந்த விஷயங்களில் இருந்த தொய்வுகள் மாறி மீண்டும் வளர்ச்சிப் பாதையில் செல்லும். எதிர்பார்த்த வங்கிக் கடன் உதவி கிடைக்கும். அரசு வழி தொந்தரவுகள் தீரும். புதிய தொழில் தொடங்குவது அல்லது கிளை நிறுவனங்கள் ஆரம்பிப்பது போன்ற சிந்தனைகள் இப்பொழுது உருவாகும். அதை செயல்படுத்தவும் இப்போது முயற்சி செய்வீர்கள். பெரு வியாபாரிகள், சிறு வியாபாரிகள் வணிக நிறுவனங்கள் நடத்துபவர்கள், அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்பவர்கள், என அனைவருக்கும் ஏற்றம் தரும் வாரம் . லாபம் மிகுதியாக இருக்கும். ஒரு சிலர் கடையை விரிவுபடுத்துவது, புதிய கிளை துவங்குவது, அல்லது செய்கின்ற வியாபாரத்திற்கு இணையாக மாற்று தொழில் தொடங்குவது போன்றவை நடக்கும்.
பெண்களுக்கு - குடும்பத்தோடு வெளியூர் அல்லது ஆன்மிகப் பயணம் மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். ஒரு சிலருக்கு சொத்து சேர்க்கை ஏற்படும். வீடு சம்பந்தமான பிரச்சினைகள் ஏதும் இருந்திருந்தால் அந்த பிரச்சினை இந்த வாரம் முடிவுக்கு வரும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நடக்கும். வேலையில் இருக்கும் பெண்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு உண்டாகும். மருத்துவச் செலவுகள் குறையும். அடகு வைத்த பொருட்களை மீட்பீர்கள்.


மாணவர்களுக்கு - கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு. எதிர்பாராத அளவு மதிப்பெண்கள் கிடைக்கும். புதிய பாடத்திட்டத்தில் சேர்வதற்காக இப்போதே அதற்கான பயிற்சி வகுப்புகளில் சேருவீர்கள்.
கலைஞர்களுக்கு - நல்ல ஒப்பந்தங்கள் கிடைக்கும். நீண்டநாளாகப் பேசிவந்த விவாதம் ஒன்று முடிவுக்கு வந்து ஒப்பந்தமாக மாறும். அதற்கான ஒரு தொகையைப் பெறுவீர்கள். நண்பர்களால் நல்ல ஆதாயம் ஏற்படும்.
பொதுப்பலன் - பயணங்களால் அதிக லாபம் ஏற்படும். நிலம் சம்பந்தப்பட்ட வியாபாரம் நல்ல சாதகப் பலனை தரும். கமிஷன் தொழில் செய்பவர்கள் பெரிய லாபத்தைப் பெறுவார்கள். இடமாற்றம், ஊர் மாற்றம் ஏற்படும். அது உங்கள் விருப்பத்தின் பேரிலேயே இருக்கும். பணவரவில் எந்த தாமதமும் இருக்காது, குறித்த நேரத்தில் பணம் கிடைக்கும்.
இந்த வாரம் -
திங்கள் - எடுத்துக்கொண்ட அத்தனை வேலைகளிலும் வெற்றி கிடைக்கும். முயற்சிகள் முழுமையடையும். பணவரவு தாராளமாக இருக்கும். எதிர்பார்த்த வெளிநாட்டு தகவல் சாதகமான பதிலாக கிடைக்கப் பெறுவீர்கள். அனைத்தும் வெற்றிகரமாக இருப்பதால் தயக்கம் இல்லாமல் செயல்படுங்கள்.
செவ்வாய் - பயணங்களைத் தவிர்த்து விடுங்கள். அது தொலைதூர பயணமாக இருந்தால் முற்றிலுமாக தவிர்த்துவிடுங்கள். பொதுப் பயண வாகனங்களைப் பயன்படுத்துங்கள். உங்கள் அக்கம்பக்கத்தினர், நண்பர்கள் என யாரிடமும் தேவையற்ற வீண் விவாதங்களை செய்ய வேண்டாம்.
புதன் - இடம், வீடு, பூமி போன்றவற்றால் லாபம் கிடைக்கும். ஆதாயம் பெருகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். ஆரோக்கியம் சீராகும். தாயார் வழியில் ஒரு பெரும் ஆதாயம் ஏற்படும்.
வியாழன் - எடுக்கின்ற முயற்சிகள் அனைத்தும் முழுமையடையாது அனைத்தும் பாதி பாதியாக தொக்கி நிற்கும். அதற்காக கவலை வேண்டாம்.
வெள்ளி - நேற்றைய தாமதமான விஷயங்கள் அனைத்தும் இன்று முழுமையாக நடந்தேறும். ஆதாயமுண்டு. பணவரவு ஏற்படும். கடன் தீர வழி வகை கிடைக்கும். எதிர்பார்த்த வங்கிக் கடன் இப்பொழுதுகிடைக்கும்.
சனி - இன்று நீங்கள் செய்யும் காரியங்கள் அனைத்தும் மற்றவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும். கோபத்தை உண்டு பண்ணும். அது உங்கள் மீது முழுமையாகக் காட்டப்படும். மனவேதனைக்கு ஆளாக வேண்டியது வரும். நீங்கள் அமைதியாக இருப்பதும், எந்த விவாதங்களில் ஈடுபடாமல் இருப்பதும் நல்லது.
ஞாயிறு - எதிர்பார்த்த தகவல்கள் இன்று கிடைக்கும். அதில் ஆதாயமும் உண்டு. வெளிநாடு செல்லும் முயற்சி வெற்றி ஆகும். உங்களுக்கு உதவ பலர் முன்வருவார்கள்.
வணங்க வேண்டிய தெய்வம் - விஷ்ணுசகஸ்ரநாமம் கேளுங்கள். அனுமன் சாலீசா கேளுங்கள். தாமதங்கள் அகலும். மன நிறைவு உண்டாகும். பணவரவு திருப்தி உண்டாகும்.

*********************************************************************************************

மகம் -
நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். ஆரோக்கியத்தில் இருந்துவந்த பிரச்சினைகள் அகலும். மருத்துவச் செலவுகள் வெகுவாக குறையும். மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டு இருந்தவர்கள் இப்போது வீடு திரும்புவார்கள். பணவரவில் இருந்த தடைகள் எல்லாம் இப்பொழுது விலகும். பணம் தாராளமாக வரும். ஒரு சிலர் வீடு விற்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பார்கள், அந்த சூழ்நிலைகள் மாறி வீடு தக்க வைக்கப்படும். கடன் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். வரவேண்டிய பணம் அனைத்தும் இப்பொழுது வசூலாகும். லாபங்கள் அதிகம் ஆகும்.
உத்தியோகம் - வியாபாரத்தில் இருந்த அனைத்து நெருக்கடிகளும் விலகும். தேவையற்ற இடமாற்றம் மீண்டும் மாற்றி அமைக்கப்படும். ஒரு சிலருக்கு வேலை விட்டு விலக நிர்ப்பந்தம் கொடுத்திருப்பார்கள். இப்போது அந்த பிரச்சினை சுமூகமாக தீர்ந்து பணி நீட்டிப்பு கிடைக்கும். இதுவரை வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு இப்பொழுது வேலை கிடைக்கும். அரசு ஊழியர்களுக்கு பணிச்சுமை கூடும். கூடுதல் பொறுப்புகள் வழங்கப்படும். அடுத்தவர் வேலையையும் சேர்த்து பார்க்க வேண்டிய நிர்பந்தம் உண்டாகும்.
தொழில் - தொழில் துறையில் இருந்த மந்தநிலை மாறும். தொழில் புதிய வேகமெடுக்கும். தொழிலுக்காக வாங்கியிருந்த கடன் கடந்த காலங்களில் ஏற்பட்ட நெருக்கடிகள் அனைத்தும் இப்பொழுது கட்டுக்குள் வரும். வங்கிகளில் சலுகைகள் கிடைத்து எளிதாக அடைக்க வாய்ப்பு உருவாகும். புதிதாக தொழில் தொடங்குவோருக்கு இதுவரை இருந்த தடை அகலும். இந்த வாரம் தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பங்கு வர்த்தகத் துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றங்கள் ஏற்படும். நிதானமாக முடிவெடுப்பது நல்லது. சேவை சார்ந்த தொழில் செய்பவர்களுக்கு அதிக ஒப்பந்தங்களைப் பெறுவார்கள்.


பெண்களுக்கு - பெண்களுக்கு மன மகிழ்ச்சி ஏற்படும்.திருமண முயற்சிகள் கைகூடும். குடும்பத்தின் நிர்வாகம் உங்கள் கைக்கு வந்து சேரும். குழந்தைகளின் எதிர்காலத்திற்காக சேமிப்பு தொடங்குவீர்கள்.
மாணவர்களுக்கு - கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு. ஏற்கனவே இருந்த மந்தநிலை மாறும். கல்வியில் ஆர்வமும், ஒரு புதிய உத்வேகமும் ஏற்படும்.
கலைஞர்களுக்கு - கவலைகள் தீரும் வண்ணம் ஒப்பந்தங்கள் கிடைக்கும். வெளிநாடுசெல்லும் வாய்ப்புகள் கிடைக்கும். பணவரவில் இருந்த தடைகள் அகன்று பணவரவு அதிகரிக்கும். நண்பர்கள் உதவுவார்கள். எதிர்பாராத இடத்தில் இருந்து அழைப்பு வரப் பெற்று ஒப்பந்தமொன்றைப் பெறுவீர்கள்.
பொதுப்பலன் - இதுவரை இருந்த தடைகள் தாமதங்கள் இனி எதுவும் இருக்காது. இனி ஓய்வு என்பதே இல்லை. எனவே சளைக்காமல் ஓடி ஆதாயங்களை அதிகமாக்கிக் கொள்ளுங்கள். சொந்த வீடு வாங்கும் கனவு இப்போது நனவாகப் போகிறது. சரியாகத் திட்டமிட்டால் இந்த வாரமே நடைபெறும். திருமண முயற்சிகள் நிச்சயதார்த்தமாக மாறும். இதுவரை புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு மருத்துவத்தின் உதவியோடு புத்திர பாக்கியம் உண்டாகும்.
இந்த வாரம் -
திங்கள் - அலைச்சல்கள் அதிகரிக்கும். அதற்கு தகுந்த ஆதாயமும் ஏற்படும். தன வரவு திருப்திகரமாக இருக்கும். ஒரு சிறிய பிரச்சினையில் தேவையற்ற குழப்பமும் உண்டாகும்.
செவ்வாய் - தன வரவுகள், எதிர்பார்த்த லாபங்கள், எதிர்பார்த்த உதவிகள் என அனைத்தும் கிடைக்கும். எடுத்த முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெரும் . காலையில் திட்டமிட்ட விஷயங்கள் மாலைக்குள் அனைத்தும் முடித்துக் காட்டுவீர்கள்.
புதன் - வாடிக்கையாளர்கள், அக்கம்பக்கத்தினர், நண்பர்கள் என யாரிடம் பேசினாலும் கவனமாக பேச வேண்டும். உறுதிப்படாத தகவல்களைப் பரப்ப வேண்டாம். அது பிரச்சினையை உண்டு பண்ணும்.
வியாழன் - சொந்த வீடு வாங்கும் கனவுநிறைவேற இன்று நல்ல சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். ஆதாயங்கள் அதிகரிக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். ஆரோக்கியம் மேம்படும்.
வெள்ளி - பொது சேவை செய்வீர்கள். நண்பர்களுக்கு உதவுவீர்கள். இன்று முடிக்கப்படும் செயல்களில் மனநிறைவு மட்டும் ஏற்படும்.
சனி- நீண்ட நாளாக முடிக்கப்படாத ஒருவேளை இன்று முடிக்கப்படும். அதில் ஆதாயம் ஏற்படும். பண வரவு திருப்திகரமாக இருக்கும். கடன்கள் தீர வழி கிடைக்கும்.
ஞாயிறு - குடும்பத்தினர், அக்கம்பக்கத்தினர், நண்பர்கள் என அனைவரும் உங்கள் கருத்துக்கு எதிராகத்தான் பேசுவார்கள். இன்றைய நாள் அப்படி! எனவே அமைதியாக இருங்கள்‌.
வணங்கவேண்டிய தெய்வம்- சக்தி வாய்ந்த அம்மன் ஆலயங்களுக்கு சென்று வாருங்கள். அம்மனுக்கு மஞ்சள் நிற புடவை சாத்தி, நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள். நன்மைகள் அதிகமாகும். நோயின் தீவிரம் குறையும். மருத்துவச் செலவுகள் இல்லாமல் போகும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x