இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்
Updated on
1 min read

மேஷம்: விடாப்பிடியாகச் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். கணவன் - மனைவிக்குள் மனம்விட்டுப் பேசுவீர்கள். சகோதரர் வகையில் நன்மை கிட்டும். பணவரவு திருப்தி தரும்.

ரிஷபம்: விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். பெரிய பதவி, பொறுப்பு தேடி வரும். திடீர் பயணம் ஏற்படும்.

மிதுனம்: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். குடும்பத்தினரின் கோரிக்கைகளுக்கு முக்கியத்துவம் தருவீர்கள்.

கடகம்: கணவன் - மனைவிக்குள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போவது நல்லது. வாகனத்தை இயக்கும்போது கவனம் தேவை. மின்னணு சாதனங்கள் திடீரென பழுதாகும்.

சிம்மம்: திடமாக முடிவுகள் எடுப்பீர்கள். விருந்தினர் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். மனைவிவழியில் உதவியுண்டு.

கன்னி: தடைகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். முக்கிய பிரமுகர் ஒருவரின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். சோர்வு நீங்கி சுறுசுறுப்படைவீர்கள். கலைப்பொருட்கள் சேரும்.

துலாம்: உறவினர்கள், நண்பர்கள் வீட்டு சுபகாரியங்களில் குடும்பத்துடன் கலந்து கொள்வீர்கள். புது வீடு, மனை வாங்கும் சூழல் கனிந்து வரும்.. கலை, இசையில் ஈடுபாடு அதிகரிக்கும்.

விருச்சிகம்: நெடுநாட்களாகத் திட்டமிட்டிருந்த காரியம் கைகூடி வரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

தனுசு: கணவன் - மனைவிக்குள் நிலவிய கருத்துவேறுபாடு நீங்கும். நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும்.

மகரம்: பணவரவு அதிகரிக்கும். பிரபலங்களுடன் எதிர்பாராத சந்திப்பு நிகழும். குடும்பத்தில் சுபகாரியங்களுக்கு ஏற்பாடாகும். பிள்ளைகளின் கூடாப் பழக்கவழக்கங்கள் விலகும்.

கும்பம்: வீண் பகை, விரயச் செலவு, முன்கோபம், திடீர் பயணம் வந்து செல்லும். அரசாங்க அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம்.

மீனம்: வேலைகளை உடனே முடிக்க வேண்டுமென்று நினைப்பீர்கள். பிள்ளைகளால் அலைச்சல் உண்டு. அக்கம்பக்கத்தினரின் செயல்பாடுகள் கோபம், எரிச்சலை உண்டாக்கும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in