இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்
Updated on
1 min read

மேஷம்: பேச்சில் கம்பீரம் பிறக்கும். அனுபவ அறிவு வெளிப்படும். உங்களின் மாறுபட்ட அணுகுமுறையை எல்லோரும் வரவேற்பார்கள். விருந்தினர் வருகையால் வீடு கலகலப்பாகும்.

ரிஷபம்: தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். மனோபலம் அதிகரிக்கும். அழகு, ஆரோக்கியம் கூடி புத்துணர்ச்சியுடன் திகழ்வீர்கள்.

மிதுனம்: வீடு, வாகன பராமரிப்பு செலவு அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளுங்கள். நெருங்கியவர்களாக இருந்தாலும் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம்.

கடகம்: எத்தனை பிரச்சினைகள் வந்தாலும் தைரியமுடன் எதிர்கொள்வீர்கள். நல்லவர்களின் ஆதரவாலும், ஆலோசனையாலும் சிக்கல்களை சாதுர்யமாக சமாளித்து வெற்றி காண்பீர்கள்.

சிம்மம்: இழுபறியான விஷயங்கள் உடனே முடியும். வீடு, மனை வாங்குவதற்கு முன்பணம் தருவீர்கள். நீண்ட நாட்களாக இருந்துவந்த சொத்து பிரச்சினை, வழக்குகள் முடிவுக்கு வரும்.

கன்னி: அடிமனதில் நிலவிய பயஉணர்வு நீங்கும். தடைகள் விலகும். சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். பிரபலமான சிலரும் பக்கபலமாக இருப்பார்கள். கலைப்பொருட்கள் சேரும்.

துலாம்: பால்ய நண்பரின் சந்திப்பால் உற்சாகமடைவீர்கள். சொந்தபந்தங்களின் சுயரூபத்தை தெரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுவீர்கள். குலதெய்வப் பிரார்த்தனை நிறைவேறும்.

விருச்சிகம்: தொட்ட காரியங்கள் துலங்கும். தக்க சமயத்தில் சகோதரர் உதவுவார். தள்ளிப் போன திருமணம் கூடிவரும். பழைய இடத்தை விற்று புது வீடு வாங்குவீர்கள்.

தனுசு: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வரும். அழகு, இளமை கூடும். சகிப்புத் தன்மையும் அதிகரிக்கும். விருந்தினர் வருகை உண்டு.

மகரம்: யாருக்கும், எதற்காகவும் உறுதிமொழி தரவேண்டாம். ஊர் பொதுக் காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள். ஆனாலும் சிலர் உங்களைக் குறைகூறிக் கொண்டிருப்பார்கள்.

கும்பம்: அரசு அதிகாரிகளின் உதவி கிடைக்கும். புண்ணிய தலங்களுக்கு குடும்பத்துடன் சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். பால்ய நண்பரை எதிர்பாராது சந்திப்பீர்கள்.

மீனம்: தன்னம்பிக்கை உண்டாகும். புகழ் பெற்ற புண்ணிய தலங்களுக்கு ஆன்மிக சுற்றுலா செல்வீர்கள். விலகியிருந்த பழைய நண்பர்கள், உறவினர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in