இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்
Updated on
1 min read

மேஷம்: சாதுர்யமாகப் பேசி காரியங்களை சாதிப்பீர்கள். உங்களிடம் கடன் வாங்கி நீண்ட நாட்களாக நிலுவையில் வைத்திருந்தவர்கள் பணத்தை திருப்பித் தருவார்கள்.

ரிஷபம்: உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். பூர்வீக சொத்தை சீரமைப்பீர்கள். உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும். விலகியிருந்த சொந்தபந்தம் விரும்பி வருவர்.

மிதுனம்: நயமான பேச்சை நம்பி சொந்த விஷயங்களை மற்றவரிடம் பகிர்ந்து விடாதீர்கள். முக்கிய பணிகளை மற்றவரை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே சென்று முடிப்பது நல்லது.

கடகம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். வீடு, வாகனம் வாங்குவதற்கான காலம் கனிந்து வரும். விருந்தினர் வருகை உண்டு.

சிம்மம்: வெளிநாட்டு பயணம், வேற்று மதத்தினரால் உதவி உண்டு. பிரபலங்களுக்கு நண்பராவீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

கன்னி: வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை கூடும். கவுரவமான பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். தாயாரின் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். திடீர் பயணம் உண்டு.

துலாம்: இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். மனக்குழப்பம் நீங்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பிள்ளைகளின் வருங்காலத்தை பற்றி முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.

விருச்சிகம்: தொட்ட காரியம் துலங்கும். புதிய முயற்சிகள் வெற்றியடையும். குடும்பத்தில் உள்ளவர்களின் ஆசாபாசங்களுக்கு மதிப்பளிப்பீர்கள். வீடு, வாகன பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.

தனுசு: அனுபவப்பூர்வமாகவும், எதார்த்தமாகவும் பேசுவீர்கள். குடும்பத்தில் குழப்பங்களை ஏற்படுத்திய உறவினர், நண்பர்களின் சுயரூபத்தைக் கண்டறிந்து ஒதுக்குவீர்கள்.

மகரம்: வேலைச்சுமை அதிகரிக்கும். அவ்வப்போது உடல்நிலை லேசாக பாதிக்கும். நன்கு அறிமுகம் இல்லாதவர்களை வீட்டில் அனுமதிக்க வேண்டாம். வாகனம் செலவு வைக்கும்.

கும்பம்: அடுத்தடுத்த செலவுகளால் சேமிப்பு கரையும். வாகனத்தை இயக்கும்போது கவனம் தேவை. புண்ணிய தலங்களுக்கு குடும்பத்துடன் சென்று வருவீர்கள். கலைப்பொருட்கள் சேரும்.

மீனம்: சொந்த ஊரில் மதிப்பு உயரும். கவுரவப் பதவிகள் தேடி வரும். மூத்த சகோதரர், சகோதரிகளுடன் நிலவிய கருத்துவேறுபாடு நீங்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in