Published : 01 Nov 2019 08:53 AM
Last Updated : 01 Nov 2019 08:53 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: அலைச்சல் நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். பால்ய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.

ரிஷபம்: மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். வாகனத்தை எடுக்கும் முன்பு எரிபொருள் இருக்கிறதா என பார்த்துக் கொள்ளுங்கள். கலைப்பொருட்கள் சேரும்.

மிதுனம்: தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரியங்களை சாதிப்பீர்கள். குடும்பத்தினருடன் இருந்துவந்த கசப்புணர்வு நீங்கும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணவரவு உண்டு.

கடகம்: பழைய இனிய சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வாகனச் செலவு நீங்கும். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

சிம்மம்: சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். கணவன் - மனைவி இடையே நிலவிய கருத்துவேறுபாடு நீங்கும். உறவினர்கள், நண்பர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும்.

கன்னி: சத்தமே இல்லாமல் சில வேலைகளை முடிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பயணங்களால் ஆதாயம் உண்டு. அரசு காரியங்களில் நிலவிய தடை நீங்கும்..

துலாம்: மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். நம்பிக்கைக்கு உரியவர்களின் ஆதரவு கிட்டும். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. பணவரவு திருப்திகரமாக இருக்கும்.

விருச்சிகம்: அதிரடியாக செயல்பட்டு சில காரியங்களை முடிப்பீர்கள். குடும்பத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வீர்கள். பணவரவு உண்டு. சிந்தனைத்திறன் அதிகரிக்கும்.

தனுசு: வேலைச்சுமையால் பதட்டம் அதிகரிக்கும். பிள்ளைகளிடம் கோபத்தைக் காட்ட வேண்டாம். வெளி உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. வாகனம் திடீர் செலவு வைக்கும்.

மகரம்: மன உளைச்சல் நீங்கும். கணவன் - மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் இருக்கும். புது வாகனம் வாங்குவீர்கள்.

கும்பம்: துணிச்சலுடன் முடிவுகள் எடுப்பீர்கள். குடும்பத்தினரின் தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்வீர்கள். தாயின் உடல்நிலை சீராகும். நண்பர்கள், உறவினர்களின் உதவி கிட்டும்.

மீனம்: இழுபறியாக இருந்துவந்த காரியங்கள் முடிவுக்கு வரும். கணவன் - மனைவி இடையே நிலவிய மனக்கசப்புகள் நீங்கும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x