இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்
Updated on
1 min read

மேஷம்: ஆடம்பரச் செலவுகளை குறையுங்கள். நன்கு அறிமுகம் இல்லாதவர்களை வீட்டில் அனுமதிக்க வேண்டாம். புண்ணிய தலங்களுக்கு குடும்பத்துடன் சென்று வருவீர்கள்.

ரிஷபம்: அடிப்படை வசதிகள் பெருகும். கனிவான பேச்சால் எல்லோரையும் கவர்வீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். அக்கம்பக்கத்தினரின் ஆதரவு கிடைக்கும்.

மிதுனம்: சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்கள் உதவுவார்கள். உங்களை கண்டும் காணாமல் சென்று கொண்டிருந்த பழைய சொந்தங்கள் தேடி வருவார்கள். பணவரவு உண்டு.

கடகம்: எதையும் சாதித்துக் காட்டும் மனவலிமை பிறக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். சாதுர்யமான பேச்சால் காரியங்களை முடிப்பீர்கள்.

சிம்மம்: வெளிநாட்டிலிருக்கும் நண்பர்களின் உதவி தக்கசமயத்தில் கிடைக்கும். வீடு, வாகனத்தை சீரமைப்பது குறித்து ஆலோசிப்பீர்கள். பால்ய நண்பரை எதிர்பாராது சந்திப்பீர்கள்.

கன்னி: புதியவர்கள் அறிமுகமாவார்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். வருங்காலத்துக்காக சேமிக்கத் தொடங்குவீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.

துலாம்: அனுபவப்பூர்வமாகவும், எதார்த்தமாகவும் பேசுவீர்கள். பங்கு வர்த்தகத்தில் பணம் வரும். உறவினர்கள், நண்பர்களின் சுயரூபம் தெரிய வரும். வாகனம் திடீர் செலவு வைக்கும்.

விருச்சிகம்: எடுத்ததற்கெல்லாம் கோபப்படுவீர்கள். சில சமயங்களில் நிம்மதி இல்லாமல் மனம் சஞ்சலப்படும். முக்கிய விஷயத்தில் திடமாக முடிவெடுக்க முடியாமல் தடுமாறுவீர்கள்.

தனுசு: சுபச்செலவுகள் அதிகரிக்கும். திருமண பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படும். யாருக்கும் பணம் கொடுக்கல் வாங்கலில் தலையிட வேண்டாம். விருந்தினர் வருகை உண்டு.

மகரம்: தேவைக்கேற்ப பணம் வரும். கைமாற்றாக வாங்கியிருந்த கடனை தந்து முடிப்பீர்கள். பங்கு வர்த்தகத்தில் பணம் வரும். கணவன் - மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.

கும்பம்: பிரபலங்கள், அரசியல்வாதிகளின் அறிமுகம் கிடைக்கும். தொடங்கிய பணிகள் தடங்கல் இன்றி முடியும். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். திடீர் பயணம் உண்டு.

மீனம்: தொட்ட காரியங்கள் துலங்கும். புதிய முயற்சிகள் வெற்றியடையும். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in