Published : 23 Oct 2019 08:57 am

Updated : 23 Oct 2019 08:57 am

 

Published : 23 Oct 2019 08:57 AM
Last Updated : 23 Oct 2019 08:57 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

indha-naal-ungalukku-eppadi

மேஷம்: வெளிவட்டாரத்தில் புது அனுபவம் கிடைக்கும். பழைய வாகனத்தை மாற்றி புது வாகனம் வாங்குவீர்கள்.. தாய்வழி உறவினரால் அலைச்சல் அதிகரிக்கும். கலைப்பொருட்கள் சேரும்.

ரிஷபம்: நீண்டநாள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். வழக்கு சாதகமாகும். மனைவிவழி உறவினர்களுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பணவரவு திருப்தி தரும்.

மிதுனம்: பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வரும். கணவன் - மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். விருந்தினர் வருகை உண்டு.

கடகம்: உடல் உஷ்ணம் அதிகரிக்கும். யாருக்கும் உறுதிமொழியோ, உத்தரவாதமோ தர வேண்டாம். பொதுக் காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள். கலைப்பொருட்கள் சேரும்.

சிம்மம்: அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. எதிர்பாராத பயணங்கள் உண்டாகும். நீண்ட நாட்களாக விலகியிருந்த நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் விரும்பி வந்து பேசுவார்கள்.

கன்னி: எதையும் தாங்கும் மனவலிமை கிட்டும். பணவரவு திருப்தி தரும். எதிர்ப்புகள், ஏமாற்றங்களை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். சகோதரர்கள் பக்கபலமாக இருப்பார்கள்.

துலாம்: எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். தெளிவான முடிவுகளால் தொல்லைகள் நீங்கும். குடும்பத்தாரின் ஆதரவு அதிகரிக்கும். பால்ய நண்பரை சந்திப்பீர்கள்.

விருச்சிகம்: சவாலான விஷயங்களையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். ஆன்மிக சுற்றுலா செல்வீர்கள். பழைய நண்பர்கள், உறவினரை சந்திப்பீர்கள். வாகனம் செலவு வைக்கும்.

தனுசு: அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பும், உதவியும் கிடைக்கும். பழைய சொந்தபந்தங்கள் தேடி வந்து பேசுவார்கள். நீண்ட இழுபறிக்குப் பின்னர் காரியங்கள் நிறைவேறும்.

மகரம்: சாதுர்யமாகப் பேசி எல்லோரையும் கவருவீர்கள். உறவினர்களால் ஆதாயம் கிடைப்பதுடன் கவுரவமும் உயரும். முக்கிய காரியங்களில் நிதானமுடன் செயல்படுவது நல்லது.

கும்பம்: சமயோசித புத்தியுடன் பல காரியங்களையும் முடித்துக் காட்டுவீர்கள். கைமாற்றாக வாங்கியிருந்த தொகையை தந்து முடிப்பீர்கள். சுகாதாரமான வீட்டுக்கு குடிபெயர்வீர்கள்.

மீனம்: கல்வித் தகுதியை அதிகப்படுத்திக் கொள்வீர்கள். அறிஞர்கள், சான்றோர்களின் நட்பு கிடைக்கும். சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். சிலருக்கு பெரிய பொறுப்புகள் கிடைக்கும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

இந்தநாள் உங்களுக்கு எப்படி?12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்இன்றைய ராசிபலன்ராசிபலன்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author