Published : 16 Oct 2019 13:04 pm

Updated : 16 Oct 2019 13:04 pm

 

Published : 16 Oct 2019 01:04 PM
Last Updated : 16 Oct 2019 01:04 PM

இந்த வார நட்சத்திரப் பலன்கள் (அக்டோபர் 14 முதல் 20ம் தேதி வரை) : திருவோணம் முதல் ரேவதி வரை ஜோதிடர் ஜெயம் சரவணன்

vaara-natchatra-palangal

திருவோணம்
எதையும் சிரித்த முகத்துடன் ஏற்றுக் கொள்வதும், நேரம் வரும்போது சாதிப்பதும் உங்களின் இயல்பான குணம். சொந்த வீடு கனவு நிறைவேறும். ஆடம்பர வாகனம் வாங்கவும் வாய்ப்பு உண்டு. பணிபுரியும் நிறுவனத்தில் ஆளுமை மிக்க பதவி கிடைக்கும். சொந்தத் தொழில் கனவு நிறைவேறும். அனைத்துத் துறை சார்ந்தவர்களும் ஏதாவதொரு சாதனை செய்வார்கள்.

உத்தியோகம் - பதவி உயர்வு தராவிட்டாலும் உங்களின் ஆளுமைக்கு அனைவரும் கட்டுப்படுவார்கள். ஊதிய உயர்வுடன் கூடிய பதவி உயர்வு உண்டு. உங்கள் கருத்தே வேதமாக இருக்கும். உங்களுடைய கருத்தே இறுதியாக இருக்கும். சிறு நிறுவனங்களில் பணிபுரிவோர் பெருநிறுவனங்களுக்கு மாறுவார்கள். சிறிய கடைகளில் இருப்பவர்கள் கூட அடுத்த கட்டத்தை நோக்கி நகருவார்கள். கட்டுமானத் தொழில் புரிவோர் பலவித வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவார்கள். மொத்தத்தில் வேலையில் இருப்பவர்கள் அனைவரும் அடுத்த வளர்ச்சிப் பாதையை நோக்கி பயணிப்பார்கள்.

தொழில் - சக தொழில் நிறுவனங்கள் திணறிக் கொண்டிருக்கையில், நீங்கள் எளிதாக எந்த பாதிப்பும் இல்லாமல் தொழிலில் கொடி கட்டிப் பறப்பீர்கள். வங்கியில் புதிய கடன் பெற்று துணை நிறுவனமோ அல்லது புதிய நிறுவனமோ தொடங்குவீர்கள். சங்கிலித் தொடர் போல் மாநிலம் முழுவதும் கிளைகள் தொடங்கும் எண்ணமும் இப்போது வெற்றியாகும். புதிதாக தொழில் தொடங்கும் ஆர்வம் உள்ளவர்களுக்கு வாய்ப்புகள் மற்றும் முதலீடுகள் தானாக தேடி வரும். ஒரு சிலர் கூட்டாகத் தொழில் தொடங்கவும் வழிவகை கிடைக்கும்.

பெண்களுக்கு - திருமணம் நிச்சயிக்கப்படும். திருமணம் ஆன பெண்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். சொந்த வீடு அமையும் சொத்து சேர்க்கை ஏற்படும். சுயதொழில் தொடங்க வாய்ப்புகள் உண்டாகும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். இதுவரை வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும்.

மாணவர்களுக்கு - உற்சாகத்தோடும் ஆர்வத்தோடும் படிப்பீர்கள். சாதனை மதிப்பெண் பெறுவீர்கள்.

கலைஞர்களுக்கு - காற்றுள்ளபோதே தூற்றிக் கொள் என்பது போல கிடைக்கின்ற வாய்ப்புகளை எல்லாம் தேர்ந்தெடுத்து ஏற்றுக்கொள்ளுங்கள். செல்வம் புழங்கும் நேரம்.

பொதுப் பலன் - நல்ல நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வீடு வாங்குவது, அசையா சொத்து வாங்குவது என பொன்னான நேரம் இது. புதன் வியாழன் வெள்ளி ஞாயிறு இந்த நாட்கள் பெரும் யோகத்தையும், நல்ல வாய்ப்புகளையும் திடீர் அதிர்ஷ்டத்தையும் தரும். சனிக்கிழமை மட்டும் சாதகமாக இல்லை.

வணங்க வேண்டிய தெய்வம் - லக்ஷ்மி குபேரர் ஆலயத்திற்கோ அல்லது அவரது படத்தை பூஜை அறையில் வைத்தோ வழிபடுங்கள். நன்மைகள் பெருகும்.

***********************************************************************************

அவிட்டம்
பொருளாதாரத்திற்காக பெரிதாக அலட்டிக் கொள்ள மாட்டீர்கள். தன்னம்பிக்கை அதிகம் இருப்பதால் செல்வத்தை எப்படியும் சேர்த்து விடலாம் என்ற மனோபாவம் உடையவர் நீங்கள். இந்த வாரம் சொல்லைச் செயலாக்கிக் காட்டுவீர்கள். எடுக்கின்ற முயற்சிகளில் வெற்றி பெறும் வரை ஒயமாட்டீர்கள். வேலை, தொழில் போன்ற வாய்ப்புகள் கிடைக்கும் திருமணம் நிச்சயம் ஆகும். விரும்பிய இடமாற்றம் ஏற்படும்.

உத்தியோகம் - அலுவலகத்தில் சகஜநிலையே இருக்கிறது. எந்த பிரச்சினையும் இல்லாமல் சுமூகமாக இருக்கும். இடமாற்றம் விரும்பியவர்களுக்கு அதற்கான உத்தரவு கிடைக்கப் பெறுவீர்கள். வேலை இழந்தவர்களுக்கு இந்த வாரம் நல்ல இடத்தில் வேலை கிடைப்பதற்கான அறிகுறிகள் உள்ளன. உடல் உழைப்பு பணியாளர்கள் ஊதிய உயர்வும் ஊக்கத்தொகையும் கிடைக்கப் பெறுவார்கள். மருத்துவமனை சார்ந்த பணியாளர்கள், அரசு இரண்டாம் நிலை ஊழியர்கள் இடமாற்றம் விரும்பியபடியே கிடைக்கும். புதிய வேலை வாய்ப்பு தேடியவர்களுக்கு இந்த வாரம் நல்ல தகவல் கிடைக்கும்.

தொழில் - வளர்ச்சிக்கான அறிகுறிகள் தென்படும். லாபம் அதிகரிக்கும். புதிய வழிமுறைகளைக் கையாண்டு தொழிலை விரிவுபடுத்துவீர்கள். கூட்டுத்தொழில் செய்தவர்கள் இனி தனியாக செய்ய முற்படுவீர்கள். உதிரி பாக தொழிலில், மந்த நிலை மாறி வளர்ச்சிப் பாதைக்கு தொழில் செல்லும். மருத்துவ உபகரணங்கள் தொழில் செய்வோர் இப்போது அதிக ஆர்டர்கள் பெறுவார்கள். உணவகம் நடத்துவோர், தேநீர் கடை நடத்துவோர் இப்போது கிளைகள் துவங்கும் எண்ணம் ஏற்பட்டு அதற்கான முயற்சிகளில் இறங்குவர்.


பெண்களுக்கு - திருமணம் உறுதி செய்யப்படும். விவாகரத்தானவராக இருந்தால் இப்போது மறுமணம் நிச்சயிக்கப்படும். பணியிட மாற்றம் உண்டு, நண்பர்களிடம் இருந்து பரிசுப் பொருட்கள் கிடைக்கும்.

மாணவர்களுக்கு - கல்வியில் முன்னேற்றம் உண்டு. தேர்வில் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். அரியர்ஸ் ஏதும் இருந்தால் இப்போது எழுதி முடிப்பீர்கள்.

கலைஞர்களுக்கு - அயல்நாட்டு நண்பரால் உதவி கிடைத்து புதிய வாய்ப்பு ஒன்றைப் பெறுவீர்கள். இசை மற்றும் நாடகத்துறையினருக்கு நல்ல நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.

பொதுப் பலன் - ஏற்ற இறக்கங்கள் பொதுவானதுதான். கடந்த சில மாதங்களாக நடந்த விஷயங்களை நினைத்து கவலைப்படுவதைவிட இனி நடக்க இருக்கும் நல்ல விஷயங்களை நினைத்து மகிழ்ச்சி கொள்ளுங்கள். புதன் வியாழன் வெள்ளி சனி இந்த நான்கு நாட்களும் நற்பலன்கள் விளையும் நாட்கள். நினைத்தது நினைத்த மாதிரியே நடக்கும். ஞாயிறு..... ? ஓய்வெடுங்களேன்.

வணங்க வேண்டிய தெய்வம் - வீட்டிற்கு அருகில் உள்ள சிவாலயத்தில் இருக்கும் முருகப் பெருமானை வணங்குங்கள், அதாவது சிவ வழிபாடும் முருகன் வழிபாடும் செய்வது பெரும் நன்மைகளைத் தரும்.

****************************************************************************************************

சதயம்
நீங்கள் நிதானமாக பொறுமையாக செய்கின்ற செயல் அனைத்துமே வெற்றி பெறும். அவசரமாக பரபரப்பாக செய்கின்ற செயல்கள் யாவும் பாதியிலேயே நின்று போகும். இந்த வாரம் திருமணம் உறுதியாகும். மிக முக்கியமாக குழந்தை பாக்கியம் உண்டாகும்.

உத்தியோகம் - பணியில் இருந்த சுணக்கம் விலகி சுறுசுறுப்பு அடைவீர்கள். அலுவலக விஷயமாக வெளியூர் அல்லது வெளிநாடு செல்வீர்கள். ஒரு சிலர், குழுத் தலைவராக (Team Head) நியமிக்கப்படுவீர்கள். புதிதாக ஒரு வேலையை உங்களை நம்பி ஒப்படைப்பார்கள். அரசு ஊழியர்களாக இருந்தால் உயரதிகாரிகளின் வருத்தத்துக்கு ஆளாவீர்கள். எளிய தொழிலாளர்கள் தங்கள் வருமானத்தை இரட்டிப்பாக்குவார்கள். ஓட்டுனர்கள் அதிக ஊதியம் பெறுவார்கள். வேலை தேடுவோருக்கு இந்த வாரம் நல்ல தகவல் கிடைக்கும்.

தொழில் - நல்ல அபிவிருத்தி உண்டு. கடந்த சில மாதங்களாக இருந்த தேக்க நிலை மாறி மெல்ல தொழில் சூடு பிடிக்கும். வர வேண்டிய பணம் ஒவ்வொன்றாக வசூலாகும். ஊழியர்கள் உங்கள் சிரமத்தில் பங்கெடுப்பர். புதிய தொழில் முனைவோர் நீண்ட போராட்டத்திற்குப் பின் இந்த வாரம் நல்ல வாய்ப்பைப் பெறுவார்கள். ஏற்றுமதி தொழில் வேகம் பிடிக்கும். சில்லறை வியபாரிகள் நல்ல லாபம் கிடைக்கப்பெறுவார்கள். கவரிங் நகைக்கடைக்காரர்கள், பெண்களின் உடை உள்ளிட்டவை வியாபாரம் செய்பவர்கள் கூடுதல் லாபம் பார்ப்பார்கள். ஹோட்டல் தொழில் செய்பவர்கள் புதிய கிளை ஆரம்பிப்பார்கள்.

பெண்களுக்கு - திருமணம் உறுதி செய்யப்படும். திருமணம் ஆன பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஆண் வாரிசு எதிர்பார்த்தவர்களுக்கு உறுதியாக ஆண் வாரிசு உண்டாகும். சொத்துச் சேர்க்கை ஏற்படும். பரம்பரை சொத்தில் பாகம் கிடைக்கும்.

மாணவர்களுக்கு - மனம் தேவையில்லாமல் அலைபாயும். மனதை கட்டுப்படுத்த வேண்டும். படிப்பில் முழு கவனமும் இருக்கட்டும்.

கலைஞர்களுக்கு - நாலாபக்கமும் வாய்ப்புகள் குவியும். நல்ல வாய்ப்புகளை சரியாக தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். பணம் கொழிக்கும். நல்லவிதமாக முதலீடு செய்து கொள்ளுங்கள்.

பொதுப் பலன் - திருமணம், வீடு வாங்குதல் உள்ளிட்ட சுப காரியங்கள் நடக்கும். மன உளைச்சல் நீங்கும்.புதிய தன்னம்பிக்கை பிறக்கும். புதன் வெள்ளி ஞாயிறு இந்த மூன்று நாட்களும் எதிர்பாராத வகையில் அதிர்ஷ்டத்தைத் தரும். வியாழன் மற்றும் சனி சாதகமாக இல்லை, புதிய முயற்சிகளில் இறங்க வேண்டாம், வீண் விவாதம் வேண்டாம்.

வணங்க வேண்டிய தெய்வம் - நடராஜர் பெருமானை வணங்குங்கள். தீபம் ஏற்றி வழிபடுங்கள். சிவாய நம மந்திரத்தை உச்சாடனம் செய்யுங்கள். நன்மைகள் பெருகும்.

******************************************************************************************

பூரட்டாதி
எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் தன் கெளரவத்தை விட்டுக் கொடுக்க மாட்டீர்கள். இந்த வாரம் எடுத்துக் கொண்ட எல்லாக் காரியங்களும் வெற்றியடையும். பணம் புரளும். தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தினரோடு பயணம் மேற்கொள்வீர்கள்.

உத்தியோகம் - பெரிய சலசலப்புகள் இல்லை. கடந்த வாரத்தை விட இந்த வாரம் உற்சாகமாகவே இருக்கும். அலுவலகம் பணியிடம் போல் இல்லாமல் சுற்றுலா தலம் போல் கலகலப்பாக இருக்கும். அதற்கு நீங்களே காரணமாக இருப்பீர்கள்.
வங்கிப் பணியாளர்கள் இடமாற்றம் கேட்டு வாங்கிக் கொள்வீர்கள்.கட்டுமானத் தொழிலாளர்கள் ஊக்கத்தொகை மற்றும் சம்பள உயர்வு பெறுவார்கள். சிறு நிறுவன ஊழியர்கள் ஒன்று சேர்ந்து ஏதாவது வருமானத்திற்கு வழி தேடுவார்கள்.

தொழில் - இதுவரை இருந்த பிரச்சினைகள் ஒவ்வொன்றாக விலகும். வழக்குகள் சாதகமாகும். எதிரிகள் விலகுவார்கள் கூட்டாளிகளுக்குள் ஒற்றுமை ஏற்படும். ஊழியர்கள் உங்கள் பிரச்சினைகளைப் புரிந்து நடப்பார்கள். இன்ஜினியரிங் ஒர்க் ஷாப் நடத்துபவர்கள் கார் மற்றும் இரு சக்கர வாகன ஒர்க் ஷாப் நடத்துபவர்கள் இவர்களுக்கெல்லாம் தொழில் வளர்ச்சி ஏற்படும். லாபம் அதிகமாகும்.

பெண்களுக்கு - மகிழ்ச்சியான வாரம். ஆடை ஆபரணச் சேர்க்கை ஏற்படும். வீட்டு உபயோக பொருட்கள் வாங்குவீர்கள். திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். குடும்பத்தோடு குலதெய்வக் கோயில் சென்று வருவீர்கள்.

மாணவர்களுக்கு - கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உயர் கல்வி பயில்பவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெறுவார்கள். ஏதேனும் தேர்வில் தோற்றிருந்தால் இப்போது தேர்வு எழுதி முடிப்பீர்கள்.

கலைஞர்களுக்கு - அயல்நாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். இசைத்துறை, நாட்டியத் துறை கலைஞர்கள் ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். ஒரு சிலர் பிரபல நிறுவனங்களுக்கு தூதராக பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கும்.

பொது பலன் - சொந்த வீடு கனவு நிறைவேறும். வாடகை வீட்டில் இருப்பவர்கள் சொந்தவீடு மாறுவார்கள். ஆரோக்கியத்தில் அவ்வப்போது அச்சுறுத்தல் இருந்தாலும் பெரிய பாதிப்புகள் ஏதும் வராது.
புதன் வெள்ளி ஞாயிறு இந்த மூன்று நாட்களும் யோகமான நாட்கள். தனவரவு, புதிய வாகனம் வாங்குதல், வீட்டுப் பத்திரம் பதிவு போன்றவை செய்யலாம் . வியாழன் மற்றும் சனி இந்த இரு நாட்களும் பெரிய நன்மைகள் ஏதும் நடக்காது.

வணங்க வேண்டிய தெய்வம் : குரு தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமை தோறும் வணங்குங்கள். கொண்டக்கடலை மாலை சார்த்தி பிரார்த்தனை செய்யுங்கள். மனதில் தெளிவு பிறக்கும். காரியம் யாவும் வெற்றி கிடைக்கும்.

**********************************************************************************************


உத்திரட்டாதி
இரக்ககுணமே உங்கள் பலம். பின்விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல் அடுத்தவருக்கு உதவுவீர்கள். இந்த வாரம் பணவரவு திருப்தியாக இருக்கிறது. குடும்பத்தில் அமைதி நிலவும். சகோதர வழியில் ஆதாயம் கிடைக்கும். சகோதர ஒற்றுமை மேலோங்கும்.

உத்தியோகம் - வேலை செய்யும் இடத்தில் பெரிய பிரச்சினைகள் ஏதும் இல்லை. ஒருசிலருக்கு இடமாற்றம் அல்லது பதவி மாற்றம் ஏற்படும். ஒரு சிலர் திடீரென வேலையை விட்டு வேறு வேலைக்குப் போக முடிவெடுப்பார்கள். இன்னும் ஒரு சிலருக்கு நிறுவனத்தின் தலைமையிடம் மனவருத்தங்கள் உண்டாகும். அதன் காரணமாக வேறு வேலை தேடுவீர்கள். நண்பர்கள் உதவுவார்கள். வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்வீர்கள். இது பெரு நிறுவனங்களுக்கு மட்டுமல்ல சிறு நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கும் பொருந்தும். இன்னும் ஒரு சிலருக்கு வேலையை விட்டுவிட்டு சொந்தத் தொழில் தொடங்கலாமா என்ற சிந்தனை வரும். இப்போதைக்கு பொருளாதாரக் கஷ்டம் வராது. எனவே கவலை வேண்டாம்.

தொழில் - தொழில் வளர்ச்சிப் பாதையில் போகும். சிறுசிறு தடைகள் வரும். போராடி வெற்றி பெறுவீர்கள். அரசு வழியிலிருந்து நெருக்கடிகள் வரும். வழக்குகள் தள்ளிப்போகும். அலைச்சல் அதிகரிக்கும். நீண்ட தூர பயணங்கள் போக வேண்டியது வரும். இந்தத் தொழிலை விட்டுவிட்டு வேறு தொழில் செய்யலாமா என்ற எண்ணம் ஒரு சிலருக்கு வரும். அவர்களுக்கு நான் சொல்ல வருவது... பொறுமையாக இருந்தால் அனைத்தும் மாறும். வெற்றி உங்கள் வசமாகும்.

பெண்களுக்கு - சகோதரர் வழியில் ஆதாயம் உண்டு. நிலம் பூமி வீடு உங்கள் பெயரில் இருந்தால் அதன் வழியாக ஆதாயம் பெற வாய்ப்பு இருக்கிறது, அதாவது அந்த சொத்துக்களை விற்று வேறு சொத்துக்களை வாங்கும் யோகம் உண்டு. குழந்தைகளின் எதிர்காலம் கருதி யாருக்கும் தெரியாமல் சேமிப்பு ஒன்றை தொடங்குவீர்கள். வேலைக்குப் போகும் பெண்களுக்கு இடமாற்றம் ஏற்படும். ஒருசிலருக்கு பதவி மாற்றம் ஏற்படும். திருமணம் உறுதியாகும். எதிர்காலம் பற்றிய கவலை அதிகமாகும்.

மாணவர்களுக்கு - உயர்கல்வி படிப்பவர்கள் கவனம் திசை திருப்பாமல் பார்த்துக் கொள்ளுங்கள். கவனம் பிசகினால் கல்வியில் கோட்டை விடுவீர்கள். எனவே கவனம் தேவை.


கலைஞர்களுக்கு- நல்ல வாய்ப்புகள் வாசல் தேடி வரும். நண்பர்கள் உதவியோடு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கிடப்பில் போடப்பட்ட பழைய விஷயங்கள் மீண்டும் உயிர்பெறும். அருமையான வாரம்.

பொதுப்பலன் - உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுக்க வேண்டாம். நிதானமாக யோசித்து முடிவெடுங்கள். பிரச்சினைகள் இருந்தாலும் பணத்திற்கு குறை இருக்காது. தேவைகள் பூர்த்தியாகிக் கொண்டே இருக்கும்.
வியாழன் சனி ஞாயிறு இந்த மூன்று நாட்களும் நல்ல பலன்களைத் தரும்.
புதன் வெள்ளி இந்த இரண்டு நாட்களும் புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். பயணங்கள் வேண்டாம்.

வணங்க வேண்டிய தெய்வம்- காவல் தெய்வங்களாக இருக்கின்ற முனீஸ்வரன் அய்யனார் கருப்பசாமி போன்ற எல்லை தெய்வங்களை வணங்குங்கள். கவலைகள் தீரும், மனதில் தெளிவு பிறக்கும்.

*********************************************************************


ரேவதி
எதையும் எளிதாக எடுத்துக் கொள்பவர் நீங்கள். எவ்வளவு அழுத்தங்கள் இருந்தாலும் அதை எளிதாக தாங்கி கடந்துசெல்வீர்கள்.
இந்த வாரம் நற்பலன்கள் அதிகரிக்கும். எதிர்பார்த்த இடமாற்றம் இப்போது கிடைக்கும். வீடு வாங்குதல், திருமண முயற்சிகள் அனைத்தும் வெற்றி தரும். ஒருசிலர் பழைய வாகனத்தை விற்று விட்டு புதிய வாகனம் வாங்குவார்கள்.

உத்தியோகம் - வேலையில் சிறு சலசலப்புகள் உண்டாகும். பிறகு தானாகவே சரியாகும். எந்த உயரதிகாரி உங்களை வாட்டி வதைத்தாரோ அவர் இப்பொழுது வேறு இடத்துக்கு மாற்றப்படுவார்.
சக ஊழியர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். உங்கள் கருத்துக்கு மதிப்பு கிடைக்கும், அலுவல் விஷயமாக வெளியூர் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகும். சொந்த ஊருக்கு இடமாற்றம் விரும்பியவர்களுக்கு இப்பொழுது அந்த இடமாற்றம் நிறைவேறும். வணிக நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் வேறு நிறுவனங்களுக்கு மாறுவார்கள். ஒரு சில நிறுவனங்களில் ஊதியம் தொடர்பான பிரச்சினைகள் எழும். அதன் காரணமாக வேறு நிறுவனத்திற்கு மாற வேண்டிய கட்டாயம் ஏற்படும். விற்பனைப் பிரதிநிதிகள் தபால் தொடர்பான ஊழியர்கள் இப்போது அதை விடுத்து அலுவலகத்தில் உட்கார்ந்து செய்யும் வேலையைப் பெறுவார்கள்.

தொழில் - தொழிலில் சிறுசிறு மாற்றங்களை ஏற்படுத்தி வளர்ச்சிக்கு பாடுபடுவீர்கள். இந்த மாற்றங்கள் அனைத்தும் இன்னும் சில வாரங்கள் கழித்து முன்னேற்றம் ஏற்படும். வெளிநாட்டிலிருந்து ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள், வெளிநாட்டு நிறுவனத்தோடு இணைந்து செயலாற்றவும் ஒரு சிலருக்கு வாய்ப்பு உண்டு. சிறு நிறுவனங்கள் மூடக்கூடிய சூழ்நிலையிலிருந்து மீண்டும் மெதுவான வளர்ச்சியை நோக்கிச் செல்லும். அது இந்த வாரம் தெரியும்.

பெண்களுக்கு - பூர்வீக சொத்து விஷயம் முடிவுக்கு வரும். பாகப்பிரிவினையில் உங்கள் பங்கு சிறப்பாக இருக்கும். சகோதர வழியில் ஆதாயம் கிடைக்கும். பள்ளித் தோழிகள் மீண்டும் உங்களை தொடர்பு கொள்வார்கள், அது உங்களுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கும். வீட்டில் இருந்தே வேலை செய்யும் வாய்ப்பு ஒரு சிலருக்கு உண்டாகும்.

மாணவர்களுக்கு - பள்ளிக்கல்வி பயில்பவர்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. உயர்கல்வி படிப்பவர்கள் அசட்டையாக இருந்து ஏமாந்து போக வாய்ப்பு உண்டு. எனவே அசட்டைத் தனத்தை விடுத்து கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.

கலைஞர்களுக்கு - பொன்னான வாய்ப்புகள் தேடி வரும். ஒரு சிலருக்கு அயல்நாட்டு தொடர்புகளால் வாய்ப்புகள் கிடைக்கும். புதிய நிறுவனங்களில் இணைந்து பணியாற்ற வாய்ப்பு கிடைக்கும்.

பொதுப்பலன் - ஏற்றமும் இறக்கமும் மாறி மாறி இருக்கும். இது இந்த வாரத்திற்கு மட்டுமே. எனவே பெரிய கவலைகள் மனவருத்தங்கள் அடைய வேண்டாம்.
புதன் வெள்ளி ஞாயிறு இந்த மூன்று நாட்களும் யோகத்தைத் தரும் நாட்கள். பணம் வரவு உண்டு. பயணங்களால் லாபம் உண்டாகும். வியாழன் மற்றும் சனி இந்த இரண்டு நாட்களும் பெரிய யோகத்தை தராது. எனவே எந்த முயற்சிகளும் செய்யவேண்டாம்.

வணங்கவேண்டிய தெய்வம் : ஆறுமுகப் பெருமானை செவ்வரளி மாலை சார்த்தி வணங்குங்கள். எதிர்ப்புகளும் தடைகளும் விலகும். காரிய வெற்றி நிச்சயம்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை


இந்த வார நட்சத்திரப் பலன்கள் (அக்டோபர் 14 முதல் 20ம் தேதி வரை) : திருவோணம் முதல் ரேவதி வரைஜோதிடர் ஜெயம் சரவணன்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author