இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்
Updated on
1 min read

மேஷம்

பயணத்தின்போதும், வெளியே செல்லும்போதும் கவனம் தேவை. விஐபிகளிடம் அளவாகப் பழகுங்கள். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போகும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.

ரிஷபம்

வீண், ஆடம்பர செலவுகளை குறையுங்கள். நீண்ட நாளாக திட்டமிட்ட புண்ணிய ஸ்தலங்களுக்கு குடும்பத்துடன் சென்று வருவீர்கள். யாரையும் எடுத்தெறிந்து பேசக்கூடாது.

மிதுனம்

எதிர்பாராத பணவரவு, பொருள் வரவு உண்டு. பிள்ளைகளுடன் வெளியூர் சென்று வருவீர்கள். வீடு, வாகனம் சம்பந்தப்பட்ட செலவுகள், தேவையற்ற மன உளைச்சல்கள் நீங்கும்.

கடகம்

உங்களிடம் மறைந்துகிடக்கும் திறமைகள் வெளிப்படும். காரியத் தடை விலகும். எதிர்பார்த்த பணம் வரும். பிள்ளைகளின் உயர்கல்வி குறித்து முக்கிய முடிவு எடுப்பீர்கள்.

சிம்மம்

உற்சாகம், புதுப் பொலிவுடன் காணப்படுவீர்கள். பழைய கடன் பிரச்சினைகள், பணப் பற்றாக்குறை தீரும். விருந்தினர் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும்.

கன்னி

உணவில் கட்டுப்பாடும், உடல்நலத்தில் கவனமும் அவசியம். வீடு, வாகன வகையில் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். யாரிடமும் வீண் பேச்சு, வாக்குவாதங்கள் வேண்டாம்.

துலாம்

புதுமையாக சிந்திப்பீர்கள். புது முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். கணவன் - மனைவிக்குள் மனஸ்தாபம் நீங்கி அன்யோன்யம் பிறக்கும்

விருச்சிகம்

பொது அறிவை வளர்த்துக் கொள்வீர்கள். வெளி வட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். பிரபலங்களின் நட்பும், அதனால் ஆதாயமும் உண்டு. வெளிநாட்டில் இருந்து நல்ல சேதி வரும்.

தனுசு

சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் வரும். பழைய வீட்டை இடித்துக் கட்டுவீர்கள். தொழில், வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். குடும்பத்தில் இருந்த சலசலப்புகள் ஓய்ந்து, அமைதி திரும்பும்.

மகரம்

உங்கள் செயலில் வேகம் கூடும். பணப் புழக்கம் அதிகரிக்கும். உங்கள் ரசனைக்கேற்ற, பெரிய வீட்டுக்கு மாறுவீர்கள். குடும்பத்தில் நிம்மதி, மகிழ்ச்சி, மனநிறைவு உண்டாகும்.

கும்பம்

கடினமான காரியங்களையும் எளிதாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். பெரிய மனிதர்களின் நட்பால் ஆதாயம் கிடைக்கும். தடைபட்டிருந்த வீடு கட்டுமானப் பணி தொடங்கும்.

மீனம்

எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். அசதி, உடல் வலி நீங்கும். கம்பீரமாக பேசி பல வேலைகளை முடிப்பீர்கள். எதிர்த்தவர்கள் நண்பராக மாறுவார்கள். ஆன்மிகம், யோகாவில் ஈடுபாடு ஏற்படும்.

**************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in