இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்
Updated on
1 min read

மேஷம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். பிள்ளைகள் உங்கள் பேச்சுக்கு மதிப்பளிப்பார்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும்.

ரிஷபம்: புது முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். நல்ல நண்பர்களைச் சந்திப்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். கலைப்பொருட்கள் சேரும்.

மிதுனம்: எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்திகள் வரும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் ஏற்படும். வாகனம் செலவு வைக்கும்.

கடகம்: குடும்பத்தில் இருப்பவர்களுடன் விட்டுக்கொடுத்து போவது நல்லது. வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். திடீர் பயணம் உண்டு.

சிம்மம்: மனசாட்சிக்கு விரோதமின்றி செயல்பட வேண்டுமென்று நினைப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.

கன்னி: சகோதரரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள் கல்யாண முயற்சிகள் பலிதமாகும். உங்கள் ஆலோசனையை அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள். பால்ய நண்பரை சந்திப்பீர்கள்.

துலாம்: கணவன் - மனைவிக்குள் நிலவிய கருத்துவேறுபாடு நீங்கும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுத்து வெற்றி பெறுவீர்கள்.

விருச்சிகம்: பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி யோசிப்பீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லைகள் விலகும். புண்ணிய தலங்கள் சென்று வருவீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு.

தனுசு: குடும்பத்தில் குழப்பம் நீங்கி அமைதி நிலவும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். பூர்விகச் சொத்து கைக்கு வரும்.

மகரம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். சாமர்த்தியமாக பேசி காரியங்களை சாதிப்பீர்கள். உங்கள் பலம், பலவீனத்தை உணர்ந்து செயல்படுவது நல்லது.

கும்பம்: எடுத்த வேலையை முழுமையாக முடிக்க முடியாமல் திணறுவீர்கள். பிள்ளைகளின் வருங்காலம் குறித்த கவலைகள் வந்து நீங்கும். வீடு பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.

மீனம்: உறவினர்களின் ஆதரவு உண்டு சகோதரர் பாசமழை பொழிவார். நீங்கள் சாதாரணமாகப் பேசுவதுகூட குடும்பத்தில் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். நிதானித்து செயல்படுங்கள்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in