இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்
Updated on
1 min read

மேஷம்: அவ்வப்போது உணர்ச்சிவசப்படுவீர்கள். எதிலும் ஒரு பிடிப்பற்ற போக்கு காணப்படும். செரிமானக் கோளாறு வந்து செல்லும். அநாவசியப் பேச்சுகளைத் தவிர்ப்பது நல்லது.

ரிஷபம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பொறுப்புகளும், பதவிகளும் தேடி வரும். உறவினர், நண்பர்களுடன் மனம்விட்டுப் பேசுவீர்கள். விருந்தினர் வருகை உண்டு.

மிதுனம்: உங்களின் நிர்வாகத் திறமை, ஆளுமைத் திறன் அதிகரிக்கும். பிரபலமானவர்கள் அறிமுகமாவார்கள். பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். கலைப்பொருட்கள் வாங்குவீர்கள்.

கடகம்: எத்தனை பிரச்சினைகள் வந்தாலும் அதை எதிர்கொண்டு சமாளிக்கும் மனோபலமும், வலிமையும் உண்டாகும். நவீன மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

சிம்மம்: எதையும் சாதித்துவிடலாம் என்ற எண்ணம் வரும். நேர்மறை சிந்தனைகள் பிறக்கும். பிரபலங்கள் பக்கபலமாக இருப்பார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். திடீர் பயணம் உண்டு.

கன்னி: எதிலும் உங்கள் கை ஓங்கும். மனஉறுதி அதிகரிக்கும். சுபநிகழ்ச்சிகள், பொது விழாக்களில் முதல் மரியாதை கிடைக்கும். புதிய யோசனைகள் உதயமாகும். பணவரவு உண்டு.

துலாம்: தடைகள், தாமதங்கள் வந்தாலும் தளராமல் சாதிக்க முற்படுவீர்கள். எடுத்த வேலையை முடிக்காமல் ஓயமாட்டீர்கள். கோயில் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

விருச்சிகம்: உங்கள் திறமை மீது உங்களுக்கே சந்தேகம் வரும். தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் திணறுவீர்கள். பிள்ளைகளின் நடவடிக்கைகளை கண்காணிப்பது நல்லது.

தனுசு: மனஇறுக்கம் வந்து செல்லும். நீண்டதூர பயணத்தை தவிர்ப்பது நல்லது. வழக்கில் வழக்கறிஞரை கலந்தாலோசித்து முடிவெடுங்கள். வீட்டை விரிவுபடுத்துவது குறித்து யோசிப்பீர்கள்.

மகரம்: எதிர்ப்புகளை எளிதாக சமாளிப்பீர்கள். பணவரவு திருப்தி தரும். பிரபலமானவர்கள் அறிமுகமாவார்கள். பங்கு வர்த்தகத்தில் பணம் வரும். பிள்ளைகளின் ஆசையை பூர்த்தி செய்வீர்கள்.

கும்பம்: கடன் பிரச்சினைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். விருந்தினர் வருகை உண்டு. வீடு கட்ட வரைபட அனுமதி கிடைக்கும்.

மீனம்: திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். தொழிலதிபர்கள் அறிமுகமாவார்கள். தடைபட்டிருந்த வீடு கட்டும் வேலையை மீண்டும் தொடர்வீர்கள். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் வரும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in