

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
கிரகநிலை:
குரு பகவான் உங்கள் நட்சத்திரத்துக்கு பத்தொன்பதாவது நட்சத்திரத்தில் இருந்து இருபதாவது நட்சத்திரத்துக்கு மாறுகிறார்.
பலன்:
எதிலும் நேரிடையாக ஈடுபடாமல் மறைமுகமாக காரியம் சாதித்துக் கொள்ளும் திறமை உடைய ரேவதி நட்சத்திர அன்பர்களே.
இந்த குருப் பெயர்ச்சியால் மனதில் இருந்த கவலை நீங்கி தைரியம் உண்டாகும். எதிலும் லாபத்தை பார்க்க முடியும். எல்லா நன்மையும் உண்டாகி உடல் ஆரோக்கியம் பெறும். வாக்கு வன்மையால் எந்தக் காரியத்தையும் சுலபமாக செய்து முடிப்பீர்கள்.
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குழந்தைகள் எதிர்கால நலனில் அக்கறை காட்டுவீர்கள். நண்பர்கள் உறவினர்கள் மூலம் தேவையான உதவி கிடைக்கும். வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும். எதிர்ப்புகள் விலகும். தாமதமாகி வந்த சுபகாரியங்கள் சிறப்பாக நடக்கும்.
தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு : வேலைப் பளு குறைந்து மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். பணவரவு திருப்தியாக இருக்கும். எல்லாவற்றிலும் முன்னேற்றம் காணப்படும். அலுவலகத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் அகலும்.
கலைத்துறையினருக்கு : நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு வேலையை செய்து முடிப்பீர்கள். அரசு தொடர்பான பணிகளில் சாதகமான பலன் கிடைக்கும். எண்ணிய காரியங்கள் கைகூடும் சூழ்நிலை உருவாகும்.
அரசியல் துறையினருக்கு : ஆலோசனையில் ஈடுபடுவீர்கள். தேவையான நிதியுதவி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. பணிச்சுமை குறைந்து காணப்படும். நிலுவையில் இருந்த பணம் கிடைக்கும்.மேலிடத்திற்குத் தேவையானவற்றை செய்து கொடுத்து அவர்களது நன்மதிப்பைப் பெறுவீர்கள்.
பெண்களுக்கு : சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி காண்பீர்கள். மனக்கவலை நீங்கும். பணவரத்துகூடும்.
மாணவர்களுக்கு : கல்வியில் எதிர்பார்க்கும் வெற்றி கிடைக்க பாடுபடுவீர்கள். எதிலும் முன்னேற்றம் உண்டாகும்.
பரிகாரம்: அபிராமி அந்தாதி படித்து அம்மனை பூஜித்து வர காரியதடை நீங்கும். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும்.
மதிப்பெண்கள்: 80% நீங்கள் நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்.
+: பண வரத்து இருக்கும்.
-: தாமதமான போக்கு ஏற்படும்.
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |