

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
கிரகநிலை:
குரு பகவான் உங்கள் நட்சத்திரத்துக்கு இருபத்தி ஒன்றாவது நட்சத்திரத்தில் இருந்து இருபத்தி இரண்டாவது நட்சத்திரத்துக்கு மாறுகிறார்.
பலன்:
தான் உண்டு தன்வேலை உண்டு என்று இருக்கும் பூரட்டாதி நட்சத்திர அன்பர்களே.
நீங்கள் மற்றவர்களின் நடவடிக்கைகளை நன்கு அறிந்து கொள்வதில் வல்லவர். இந்த குருப் பெயர்ச்சியால் எதிர்பாராத வகையில் செல்வச் சேர்க்கை உண்டாகும். அதே நேரத்தில் மனதில் வீண் கவலையும் ஏற்படலாம். எதிலும் ஒரு வேகம் உண்டாகும். அடுத்தவர் விஷயங்களில் தலையிடும்போது கவனம் தேவை. உல்லாசப் பயணங்கள் செல்ல நேரலாம் எதிலும் அளவுக்கு மீறாமல் இருப்பது நல்லது. ஆடம்பரப் பொருட்கள் சேரும்.
குடும்பத்தில் திருப்தியான நிலை காணப்படும். வீட்டிற்குத் தேவையன பொருள் வாங்குவதால் செலவு ஏற்படலாம். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கி நெருக்கம் ஏற்படும். பிள்ளைகளுடன் மனதுக்குப் பிடித்த இடத்திற்கு சென்று பொழுதைக் கழிப்பீர்கள். வீடு மனை போன்ற முதலீடுகளில் ஆர்வம் அதிகரிக்கும்.
தொழில் வியாபாரத்தில் இருந்த மெத்தனப் போக்கு நீங்கி வேகம் பிடிக்கும். தொழில் விஷயமாக வெளியூர் செல்ல நேரலாம். எதிர்பார்த்த ஆர்டர் கிடைக்க இருந்து வந்த தாமதம் நீங்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு : புதிய பொறுப்புகள் கிடைக்கப் பெற்று அதனால் நன்மை அடைவார்கள். மேலிடத்திலிருந்து பொறுப்புகள் அதிகமாக வழங்கப்படும்.
கலைத்துறையினருக்கு : எல்லோரையும் எளிதில் வசீகரிக்கும் திறமையும் அதிகரிக்கும். செல்வம் பல வழிகளில் சேரும். வாக்கு வன்மையால் எதையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.
அரசியல்துறையினருக்கு : உங்களது செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் விலகி விடுவார்கள். முயற்சிகள் சாதகமான பலன் தரும்.
பெண்களுக்கு : எதிர்பார்த்த செல்வச் சேர்க்கை உண்டாகும். மனதில் வீண் கவலை ஏற்படலாம். அடுத்தவர் பிரச்சினைகளில் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது.
மாணவர்களுக்கு : கல்வியைப் பற்றிய மனக்கவலை உண்டாகும். பயணங்கள் மகிழ்ச்சிகரமாக இருக்கும்.
பரிகாரம்: தினமும் கந்தசஷ்டி கவசம் படித்து முருகனை வணங்கினால் கஷ்டம் நீங்கும். எதிர்ப்புகள் விலகும். எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும்.
மதிப்பெண்கள்: 79% நீங்கள் நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்.
+: இடமாற்றம் ஏற்படும்.
-: ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |