

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
கிரகநிலை:
குரு பகவான் உங்கள் நட்சத்திரத்துக்கு இருபத்தி இரண்டாவது நட்சத்திரத்தில் இருந்து இருபத்தி மூன்றாவது நட்சத்திரத்துக்கு மாறுகிறார்.
பலன்:
வாழ்வில் எதையும் சமாளித்து முன்னேறும் சாமர்த்தியம் மிக்க சதயம் நட்சத்திர அன்பர்களே.
இந்த குருப்பெயர்ச்சியால் எதையும் சாதிக்கும் திறமையும், சாமர்த்தியமும் அதிகமாகும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். எதிர்ப்புகள் விலகும். புதிய நண்பர்கள் கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். மரியாதை கூடும். மனதில் துணிச்சல் அதிகரிக்கும். தன்னம்பிக்கையுடன் செயலாற்றுவீர்கள்.
குடும்பத்தில் இதமான சூழ்நிலை நிலவும். கணவன் மனைவிக்கிடையில் இருந்த கருத்து வேற்றுமை நீங்கி ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகள் எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். உறவினர்கள் மூலம் நன்மை உண்டாகும்.
தொழில் வியாபாரம் முன்னேற்றப் பாதையில் செல்லும். தேவையான பண உதவியும் கிடைக்கும். கடன் தொல்லை குறையும். தொழில் போட்டிகள் நீங்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு : எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.
கலைத்துறையினருக்கு : பணவரத்து இருக்கும். எடுத்த முடிவை செயல்படுத்தும் முன் ஒரு முறைக்கு இருமுறை ஆலோசிப்பது நல்லது. எந்த ஒரு காரியத்திலும் அவசர முடிவு எடுக்கத் தூண்டும். வீண் வாக்குவாதங்களால் பகையை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.
அரசியல் துறையினருக்கு : வீண் அலைச்சலுக்குப் பிறகே எந்த ஒரு காரியமும் நடந்து முடியும். வேலை தொடர்பாக அலைய வேண்டி இருக்கும். வரவேண்டிய பாக்கிகள் தாமதமாக வந்து சேரும்.
பெண்களுக்கு : மனோ தைரியம் கூடும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரியத்தில் வெற்றி காண்பீர்கள்.
மாணவர்களுக்கு : கல்வியில் இருந்த போட்டிகள் குறையும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். மனதில் நம்பிக்கை உண்டாகும்.
பரிகாரம்: பாலாம்பிகை மற்றும் அம்பாளுக்கு மல்லிகை மலர் சார்த்தி வணங்குங்கள். உடல் ஆரோக்கியம் உண்டாகும். குடும்ப பிரச்சினைகள் தீரும்.
மதிப்பெண்கள்: 72% நீங்கள் நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்.
+: பேச்சு சாமர்த்தியம் உண்டாகும்.
-: பொறுப்புகளை ஒப்படைப்பதில் கவனம் தேவை.
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |