

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
கிரகநிலை:
குரு பகவான் உங்கள் நட்சத்திரத்துக்கு இருபத்தி நான்காவது நட்சத்திரத்தில் இருந்து இருபத்தி ஐந்தாவது நட்சத்திரத்துக்கு மாறுகிறார்.
பலன்:
மன உறுதியுடன், எதைக் கண்டும் அஞ்சாமல் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிக்க பாடுபடும் திருவோணம் நட்சத்திர அன்பர்களே.
இந்த குருப்பெயர்ச்சியால் வாக்கு வன்மையால் காரிய அனுகூலம் உண்டாகும். ஆனால் மனதில் ஏதாவது சஞ்சலம் இருந்து கொண்டே இருக்கும். திடீர் பணத்தேவை ஏற்படலாம். தேவையான நேரத்தில் மற்றவர்களின் உதவி கிடைக்கும். புதிய சொத்து வாங்குவதில் கவனம் செல்லும்.
குடும்பத்தில் அமைதி ஏற்படும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் மனம்விட்டுப் பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகள் பற்றிய கவலை நீங்கும். அவர்களுக்குத் தேவையான பொருட்கள் வாங்கிக் கொடுத்து மகிழ்வீர்கள்.
தொழில் வியாபாரம் முன்னேற்றமடைய தேவையான உதவிகள் கிடைக்கும். திறமையான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வீர்கள்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு : மேல் அதிகாரிகள் சொல்வதை செய்வதன் மூலம் நன்மை கிடைக்கப் பெறுவார்கள்.
கலைத்துறையினருக்கு : நட்பு வகையில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. சிலநேரத்தில் விபரீதமான எண்ணம் தோன்றலாம் கவனம் தேவை. பணிகள் தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். கடன் பிரச்சினைகள் குறையும்.
அரசியல்துறையினருக்கு : எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். எடுத்த வேலைகளில் மிகவும் கவனமுடன் செயல்படுவது நல்லது. மன வலிமை அதிகரிக்கும். மக்கள் மத்தியில் மதிப்பு கூடும்.
பெண்களுக்கு : புதிதாக செய்யும் காரியங்களில் கவனம் தேவை. இனிமையான வார்த்தைகளால் பேசுவதன் மூலம் மற்றவர் மத்தியில் மதிப்பு கூடும்.
மாணவர்களுக்கு : ஆசிரியர் சொல்படி பாடங்களை படிப்பது கூடுதல் மதிப்பெண் பெற்று வெற்றி பெற உதவும்.
பரிகாரம்: திருப்பதி ஸ்ரீநிவாஸ பெருமாளை வணங்கி வர கஷ்டங்கள் குறையும். வேலைப் பளு குறையும்.
மதிப்பெண்கள்: 64% நீங்கள் நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்.
+: எதிர்பார்த்த பணவரவு இருக்கும்.
-: அலைச்சல் இருக்கும்.
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |