குருப்பெயர்ச்சி : உத்திரம் நட்சத்திரப் பலன்கள்

குருப்பெயர்ச்சி : உத்திரம் நட்சத்திரப் பலன்கள்
Updated on
2 min read

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

கிரகநிலை:

குரு பகவான் உங்கள் நட்சத்திரத்துக்கு ஏழாவது நட்சத்திரத்தில் இருந்து எட்டாவது நட்சத்திரத்துக்கு மாறுகிறார்.

பலன்:

எதிர்காலத்தை மனதில் கொண்டு செயல்பட்டு வரும் உத்திரம் நட்சத்திர அன்பர்களே.

நீங்கள் காலத்தை வீணாக்க மாட்டீர்கள். இந்த குருப்பெயர்ச்சியால் பொருள் சேர்க்கை உண்டாகும். அனைத்து விதமான நலங்களையும் பெறப் போகிறீர்கள். சுப நிகழ்ச்சிகளுக்கு பஞ்சமிருக்காது. விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். இட மாற்றம் ஏற்படும். எடுத்த காரியம் தாமதப்படுகிறதே என்ற கவலை உண்டாகும். இரவில் நீண்ட நேரம் கண் விழிக்க வேண்டி வரலாம் கவனம் தேவை.

குடும்பத்தில் இருப்பவர்களால் இருந்த மனவருத்தம் நீங்கும். வாழ்க்கைத் துணையின் உடல் நிலையில் கவனம் தேவை. வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவதன் மூலம் செலவு கூடும். விருந்தினர் வருகை இருக்கும். புதிய முடிவுகள் எடுப்பதில் தயக்கம் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் உண்டாகலாம். பிள்ளைகள் வழியில் செலவு உண்டாகலாம். பண விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது.

தொழில் , வியாபாரம் எதிர்பார்த்ததை விட அதிகமான லாபம் தரும். ஆனால் தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் எப்போதும் பிசியாக காணப்படுவார்கள். செலவுகள் கூடும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். கடன் விவகாரங்களிலும் கொடுக்கல் வாங்கலிலும் எச்சரிக்கை தேவை. பொறுப்புகள் கூடும்.

பெண்களுக்கு : பயணங்கள் செல்ல நேரிடலாம். எடுத்த வேலையை செய்து முடிக்க காலதாமதமாகலாம். வழக்கத்தை விட கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.

கலைத்துறையினருக்கு : உகந்த காலகட்டமிது. கைக்கு எட்டிய அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி முன்னேற்றப் பாதையில் செல்வீர்கள்.

அரசியல்வாதிகள், சமூக சேவகர்களுக்கு : பலன்கள் நன்மை தீமை என கலந்து கிடைத்தாலும் சிறப்பாக இருக்கும். எந்த ஒரு வேலையை செய்யும் போதும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது. செலவு அதிகரிக்கும்.

மாணவர்களுக்கு : கல்வியில் வெற்றி பெற கூடுதல் நேரம் பாடங்களை படிப்பது நல்லது. பொறுப்புகள் அதிகரிக்கும்.

பரிகாரம்: தினம்தோறும் அருகிலிருக்கும் ஐயப்பன் கோயிலுக்குச் சென்று வலம் வருவது பொருளாதார நிலையை உயர்த்தும். கவலைகளைப் போக்கும். .

மதிப்பெண்கள்: 68% நீங்கள் நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்.

+: சக மனிதர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

-: குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதத்தைத் தவிர்க்கவும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in