குருப்பெயர்ச்சி : பூரம் நட்சத்திரப் பலன்கள்

குருப்பெயர்ச்சி : பூரம் நட்சத்திரப் பலன்கள்
Updated on
2 min read

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்


கிரகநிலை:

குரு பகவான் உங்கள் நட்சத்திரத்துக்கு எட்டாவது நட்சத்திரத்தில் இருந்து ஒன்பதாவது நட்சத்திரத்துக்கு மாறுகிறார்.

பலன்:

தன்னலம் கருதாமல் பிறர் நலத்தை மனதில் கொண்டு செயல்படும் பூரம் நட்சத்திர அன்பர்களே.

நீங்கள் அனைவரையும் அனுசரித்து செல்லக் கூடியவர். இந்த குருப் பெயர்ச்சியால் அறிவுத் திறமை கூடும். சில முக்கிய முடிவுகள் எடுப்பதன் மூலம் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். இனிமையான பேச்சின் மூலம் எதிலும் வெற்றி காண்பீர்கள். வீண் குற்றச்சாட்டிற்கு ஆளாக நேரிடலாம். கவனமாக இருப்பது நல்லது. மற்றவர்களின் செய்கையால் கோபம் ஏற்படலாம். நிதானம் தேவை.

குடும்பத்தில் பூர்வீகச் சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் குறையும். அதன் மூலம் வருமானம் கிடைக்கும். பிள்ளைகள் ஒற்றுமையுடன் இருப்பார்கள். புத்திசாதுர்யம் அதிகரிக்கும். வெளியூரில் இருந்து வரும் தகவல்கள் நல்ல தகவல்களாக இருக்கும். கணவன்-மனைவிக்கிடையே எதையும் மனம் விட்டு பேசுங்கள். குடும்பத்தில் அமைதி உண்டாக கோபத்தைக் குறைப்பது நல்லது.

தொழில், வியாபாரம் எதிர்பார்த்த அளவு லாபம் தராவிட்டாலும் வருமானத்திற்கு குறைவு இருக்காது. தொழில் விரிவாக்கம் செய்யும் திட்டத்தை தள்ளிப்போடுவது நல்லது.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களது பணியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மற்ற விஷயங்களில் தலையிடாமல் இருப்பது வீண் பிரச்சினை வராமல் தடுக்கும்.

பெண்களுக்கு : அறிவுபூர்வமாக செயல்பட்டு சில முக்கிய முடிவு எடுப்பதன் மூலம் நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்து வந்த காரியம் நிறைவேறும். அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது.

கலைத்துறையினருக்கு : முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ஆனால் பொருளாதார ரீதியாக சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும்.

அரசியல் துறையினருக்கு : வாகனங்கள் பயன்படுத்தும் போது கவனம் தேவை. சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வாழ்க்கைத் தரம் உயரும்.

மாணவர்களுக்கு : எதிர்காலத்தை பற்றிய எண்ணம் உண்டாகும். மேல் படிப்பு பற்றிய சிந்தனையில் ஈடுபடுவீர்கள். சக மாணவர்களின் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி இருப்பது நல்லது.

பரிகாரம்: திருப்பாவை சொல்லி ஆண்டாள் நாச்சியாரை வணங்குங்கள். எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். கடன் பிரச்சினை தீரும்.

மதிப்பெண்கள்: 78% நீங்கள் நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்.

+: மனோ தைரியம் அதிகரிக்கும்.

-: வேலை தொடர்பான அலைச்சல் இருக்கும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in