இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்
Updated on
1 min read

மேஷம்: பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து யோசிப்பீர்கள். ஆடை, ஆபரணங்கள் சேரும்.

ரிஷபம்: புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். மனதில் நிலவிய தயக்கம் நீங்கும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் வரும்.

மிதுனம்: உங்களின் நிர்வாகத் திறமையை அனைவரும் பாராட்டுவார்கள். அடகு வைத்திருந்த ஆபரணங்களை மீட்பீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை விலகும். திடீர் பயணம் உண்டு.

கடகம்: அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியோ உத்தரவாதமோ தர வேண்டாம். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்காதீர்கள். உடல்நலத்தில் கவனம் செலுத்துங்கள்.

சிம்மம்: எதிர்பாராத பயணங்கள் உண்டு. சொத்து வாங்குவது, விற்பதில் அலட்சியம் காட்டாதீர்கள். வேலைச்சுமை, மறைமுக எதிர்ப்பு, செலவுகள் வந்து போகும். வாகனம் செலவு வைக்கும்.

கன்னி: எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். சில முடிவுகளை தைரியமாக எடுப்பீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. கணவன் - மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்..

துலாம்: உங்களின் திறமைகள் பளிச்சிடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். பங்கு வர்த்தகம் லாபம் தரும். கணவன் - மனைவிக்குள் மனம்விட்டுப் பேசுவீர்கள்.

விருச்சிகம்: நேர்மறை எண்ணங்கள் தோன்றும். தாய்வழி உறவினர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை உயரும். எதிர்காலத் திட்டங்கள் குறித்து குடும்பத்தினருடன் ஆலோசிப்பீர்கள்.

தனுசு: முன்கோபம் வந்து நீங்கும். சொத்து வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்து விலகும். உடன்பிறந்தவர்களை அனுசரித்து போவது நல்லது. தாயாரின் ஆதரவு கிடைக்கும்.

மகரம்: தேங்கிக் கிடந்த வேலைகளை மளமளவென்று முடிப்பீர்கள். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் தொடர்பும் உதவியும் கிடைக்கும். தோற்றப் பொலிவு அதிகரிக்கும்.

கும்பம்: சவால்களில் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் இருந்துவந்த கூச்சல், குழப்பங்கள் நீங்கி அமைதி திரும்பும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். பணவரவு திருப்தி தரும்.

மீனம்: குடும்பத்தில் அமைதி நிலவும். நண்பர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். மகளுக்கு நீங்கள் எதிர்பார்த்ததைப் போல் நல்ல இடத்தில் வரன் அமையும். திடீர் பயணம் ஏற்படலாம்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in