

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
கிரகநிலை:
குரு பகவான் உங்கள் நட்சத்திரத்துக்கு பனிரெண்டாவது நட்சத்திரத்தில் இருந்து பதிமூன்றாவது நட்சத்திரத்துக்கு மாறுகிறார்.
பலன்:
காரியத்தை கச்சிதமாக முடிக்கும் திறமையும் சாதித்தே தீர வேண்டும் என்ற பிடிவாதமும் கொண்ட புனர்பூச நட்சத்திர அன்பர்களே.
நீங்கள் எந்தக் காரியத்தையும் கச்சிதமாக முடிக்கும் திறன் கொண்டவர்கள். இந்த குருப்பெயர்ச்சியால் தடைபட்ட காரியங்கள் தடைநீங்கி நன்றாக நடந்து முடியும். வாக்குவன்மையால் நன்மைகள் ஏற்படும். தெய்வ சிந்தனை அதிகரிக்கும். பண பிரச்சினை நீங்கும். சூரியனால் நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வாகன யோகம் உண்டாகும்.
தொழில், வியாபாரம் எதிர்பார்த்த வளர்ச்சி பெறும் பழைய பாக்கிகள் வசூலாகும். நீண்ட நாட்களாக நடந்து முடியாத காரியம் நடந்தேறும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். மேல் அதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கும். சக ஊழியர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.
குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை அதிகரிக்கும். பிள்ளைகள் எதிர்காலத்திற்காக சில பணிகளை மேற்கொள்வீர்கள். நண்பர்களால் இருந்து வந்த மனக்கிலேசங்கள் அகலும்.
பெண்களுக்கு : கொடுக்கல் வாங்கலில் இருந்த சிக்கல்கள் தீரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். இழுபறியாக இருந்த காரியம் நன்கு நடந்து முடியும்.
அரசியல்வாதிகளுக்கு : நெருங்கிய நண்பர்கள் மூலமாகவே பதவிகளுக்கு சில இடையூறுகள் ஏற்படலாம். அதனால் எவரிடமும் மனம் திறந்து பேச வேண்டாம். மற்றபடி தொண்டர்கள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பதால் உற்சாகமடைவீர்கள். உங்கள் செயல்களை நேர்த்தியாகச் செய்வீர்கள்.
கலைத்துறையினருக்கு : சுமாரான வாய்ப்புகளையே பெறுவீர்கள். ரசிகர்களின் ஆதரவும் எதிர்பார்க்கும் அளவுக்கு இருக்காது. புகழைத் தக்க வைத்துக்கொள்ள சீரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
மாணவர்களுக்கு : கல்வியில் திறமை வெளிப்படும். மற்றவர் பாராட்டும் கிடைக்கும்.
பரிகாரம்: குரு ஸ்தோத்திரம் சொல்லி நவக்கிரக குருவை வணங்குங்கள். கடன் பிரச்சினை தீரும். பணவரத்து அதிகரிக்கும்.
மதிப்பெண்கள்: 77% . நீங்கள் நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்.
+: கொடுத்த கடன் வசூலாகும்
-: அலைச்சல் அதிகரிக்கும்.
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |