குருப்பெயர்ச்சி : மிருகசீரிஷம் நட்சத்திரப் பலன்கள்

குருப்பெயர்ச்சி : மிருகசீரிஷம் நட்சத்திரப் பலன்கள்
Updated on
1 min read

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்


கிரகநிலை:

குரு பகவான் உங்கள் நட்சத்திரத்துக்கு பதினான்காவது நட்சத்திரத்தில் இருந்து பதினைந்தாவது நட்சத்திரத்துக்கு மாறுகிறார்.

பலன்:

மற்றவர்களிடம் இருந்து மாறுபட்டு தனித் தன்மையுடன் செயலாற்றும் குணமுடைய மிருகசீரிஷ நட்சத்திர அன்பர்களே. நீங்கள் எப்போதும் சுறுசுறுப்புடன் பணியாற்றுபவர்கள். இந்த குருப் பெயர்ச்சியால் உடல்நிலை தேறும். செலவு கட்டுக்குள் இருக்கும். காரியத் தடைகள் நீங்கும். தொட்டதெல்லாம் துலங்கும். தந்தையாரின் நலனில் அக்கறை தேவை. கொடுக்கல் வாங்கலில் கவனமாக செயல்படுவது நல்லது.

தொழில் வியாபாரத்தில் மெத்தனப் போக்கு காணப்பட்டாலும் பணவரத்து நன்றாக இருக்கும். சரக்குகளை கவனமாகக் கையாள்வது நல்லது.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் குறையும். உத்தியோகம் தொடர்பான இடமாற்றம் உண்டாகலாம். கேட்ட பதவி உயர்வு கிட்டும். வெளிநாடு சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.

குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் குறையும். கணவன் மனைவிக்கிடையே இருந்த பூசல்கள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். உறவினர்களுக்காக விருப்பம் இல்லாத காரியத்தில் தலையிட வேண்டி இருக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் ஏற்படும்.

பெண்களுக்கு : தடைப்பட்ட காரியங்கள் நடந்து முடியும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. பணவரத்து குறையலாம்.

அரசியல்வாதிகளுக்கு : சங்கடங்கள் குறையத் தொடங்கும். எதிர்க்கட்சியினர் உங்களைப் பற்றிக் குறை சொல்வதைக் குறைத்துக் கொள்வார்கள். தொண்டர்கள் உங்கள் பெருமைகளைப் புரிந்து கொள்வார்கள். கட்சி மேலிடத்தின் ஆதரவுடன் மனதிற்கினிய பொறுப்புகளைப் பெறுவீர்கள்.

கலைத்துறையினருக்கு : திறமைக்கேற்ற புகழும், கௌரவமும் கட்டாயம் கிடைக்கும். பண வரவில் முன்னேற்றம் உண்டாகும். நண்பர்கள் மூலம் தக்க சமயத்தில் தேவையான உதவிகளைப் பெறுவீர்கள். அமைதியாகச் செயலாற்றுவீர்கள்.

மாணவர்களுக்கு : கல்வியில் நாட்டம் உண்டாகும். போட்டிகள் நீங்கும். சக மாணவர்களுடன் இருந்த மனக்கசப்பு மாறும்.

பரிகாரம்: முருகனுக்கு அரளிப்பூ சமர்ப்பித்து வணங்கி வந்தால், எல்லா நன்மைகளும் உண்டாகும். எதிர்பார்த்த காரியங்கள் திருப்திகரமாக நடக்கும்.

மதிப்பெண்கள்: 72% . நீங்கள் நல்ல நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்.

+: குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்

-: சுபச்செலவுகள் ஏற்படலாம்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in