

மேஷம்
பிள்ளைகள் தங்கள் முடிவில் பிடிவாதமாக இருப்பார்கள். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். அக்கம் பக்கத்தினரின் செயல்பாடுகள் கோபம், எரிச்சலை ஏற்படுத்தும்.
ரிஷபம்
பளிச்சென்று பேசி அனைவரையும் கவருவீர்கள். கணவன் - மனைவிக்குள் மனஸ்தாபம் நீங்கி அன்யோன்யம் பிறக்கும். வருங்கால வளர்ச்சிக்காக முக்கிய முடிவு எடுப்பீர்கள்.
மிதுனம்
சாதுர்யமாக திட்டமிட்டு, எடுத்த காரியத்தில் வெற்றி காண்பீர்கள். கணவன் - மனைவிக்குள் விட்டுக்கொடுத்துப் போவீர்கள். வெளி வட்டாரத்தில் மதிப்பு, மரியாதை உயரும்.
கடகம்
தேவையற்ற மனக் குழப்பங்கள், சஞ்சலங்கள் விலகும். வெளியூரில் இருந்து உறவினர்கள், நண்பர்கள் வருகை உண்டு. குடும்பத்தினரின் எண்ணங்களை அறிந்து பூர்த்தி செய்வீர்கள்.
சிம்மம்
பழைய கசப்பான சம்பவங்கள் பற்றி யாரிடமும் பேச வேண்டாம். அடுத்தவர் பிரச்சினையில் தலையிடுவதால் வீண் பழிக்கு ஆளாக நேரிடும். வெளி வட்டாரத்தில் நிதானம் அவசியம்.
கன்னி
மரியாதை, அந்தஸ்து உயரும். பணப் பற்றாக்குறை விலகும். சுபச் செலவுகள் ஏற்படும். மனதுக்குப் பிடித்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். பிள்ளைகளை நல்வழிப்படுத்துவீர்கள்.
துலாம்
உற்சாகமான பேச்சால் அனைவரையும் கவருவீர்கள். பழுதான வீடு, வாகனத்தை மாற்றுவீர்கள். நீங்கள் ஏற்கெனவே செய்த உதவிகளுக்கு இப்போது பாராட்டு பெறுவீர்கள்.
விருச்சிகம்
குடும்பத்தினருடன் மனம்விட்டுப் பேசுவீர்கள். பிள்ளைகள் உடல்நலம் சீராக இருக்கும். காசு, பணம் தேவையான அளவு இருக்கும். சகோதர வகையில், கேட்டிருந்த உதவிகள் கிடைக்கும்.
தனுசு
அடிமனதில் இருந்த பயம் விலகும். துணிச்சலுடன் செயல்பட்டு சில முடிவுகளை எடுப்பீர்கள். அலைக்கழிக்கும் வேலைகளை உடனே முடிப்பீர்கள். வீண் செலவுகளைக் குறைப்பீர்கள்.
மகரம்
உங்கள் குறிக்கோளை எட்டிப்பிடிக்க முயற்சிப்பீர்கள். பிள்ளைகளின் அடிமனதில் என்ன இருக்கிறது என்பதை கண்டறிவீர்கள். ஆன்மிகம், தியானம், யோகாவில் நாட்டம் ஏற்படும்.
கும்பம்
அதிரடி திட்டங்களை தீட்டி செயல்படுத்துவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். கலைப் பொருட்கள், பரிசுப் பொருட்கள் சேரும். விருந்தினர்கள் வருகையால் வீடு களை கட்டும்.
மீனம்
உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலைதூக்கும். அடுத்தவர்கள் மனம் காயப்படும்படி பேசாதீர்கள். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம்.
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |