இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்
Updated on
1 min read

மேஷம்: கல்யாண முயற்சிகள் பலிதமாகும். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வீட்டை விரிவுபடுத்தும் முயற்சியில் ஈடுபடுவீர்கள்.

ரிஷபம்: உடன்பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு ஆதரவாக இருப்பார்கள். பழைய பிரச்சினைகளை தீர்ப்பீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். ஆடை, ஆபரணங்கள் சேரும்.

மிதுனம்: கடந்தகால இனிமையான சம்பவங்கள் மனதில் நிழலாடும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள்.

கடகம்: திட்டமிடாத செலவுகளும், பயணங்களும் குறுக்கிட்டாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். பிள்ளைகளிடம் கோபத்தைக் காட்டாமல் அவர்கள் போக்கிலேயே விட்டுப் பிடியுங்கள்.

சிம்மம்: கணவன் - மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். தாய்வழி உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.

கன்னி: பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். உதவி கேட்டு வருபவர்களுக்கு உங்களால் இயன்றதை செய்து கொடுப்பீர்கள். சுபநிகழ்ச்சிகளில் குடும்பத்துடன் கலந்து கொள்வீர்கள்.

துலாம்: பிள்ளைகளின் வருங்காலத் திட்டங்களில் ஒன்று நிறைவேறும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் வரும்.

விருச்சிகம்: தடைகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். வீடு, வாகனப் பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு.

தனுசு: மற்றவர்களுக்காக சிலவற்றை செய்து பெருமைப்படுவீர்கள். உறவினர், நண்பர்களின் வருகையால் வீடு களைகட்டும். பூர்வீக சொத்து பிரச்சினைகளுக்கு சுமுகத் தீர்வு கிடைக்கும்.

மகரம்: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள்.

கும்பம்: முன்கோபத்தை குறையுங்கள். எளிதாக முடிய வேண்டிய காரியங்களைக் கூட பலமுறை போராடி முடிப்பீர்கள். உறவினர், நண்பர்களால் அன்புத் தொல்லை அதிகரிக்கும்.

மீனம்: முக்கிய கோப்புகளைக் கையாளும்போது அலட்சியம் வேண்டாம். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. வெளி உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. பணவரவு உண்டு.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in