இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்
Updated on
1 min read

மேஷம்: நீண்ட நாட்களாகத் தொல்லை தந்த வாகனத்தை மாற்றும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். முக்கியப் பிரமுகர்கள் அறிமுகமாவார்கள். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

ரிஷபம்: எந்தப் பிரச்சினையையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். பழைய கடனில் ஒரு பகுதியை தீர்ப்பீர்கள். விருந்தினர் வருகை உண்டு.

மிதுனம்: சகோதரர்கள், நண்பர்களுடன் நிலவிவந்த பகை நீங்கும். ஈகோ பிரச்சினைகளும், விமர்சனங்களும் அவ்வப்போது தலைதூக்கும். வேலைச்சுமை, பொறுப்புகள் அதிகரிக்கும்.

கடகம்: ஆளுமைத் திறன் அதிகரிக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர் அறிமுகமாவார். பணவரவு உண்டு. அரைகுறையாக நின்றுபோன பல காரியங்களை விரைந்து முடிப்பீர்கள்.

சிம்மம்: சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். முக்கிய பிரமுகர் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். வழக்கு விவகாரங்களில் தீர்வு கிடைக்கும். அரசு காரியங்கள் சாதகமாகும்.

கன்னி: பிள்ளைகளால் வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். உறவினர் வீட்டு விசேஷத்தை முன்னின்று நடத்துவீர்கள். குலதெய்வப் பிரார்த்தனையை குடும்பத்துடன் சென்று நிறைவேற்றுவீர்கள்.

துலாம்: எங்கு சென்றாலும் எதிர்ப்புகள் அதிகரித்ததைப் போல உணர்வீர்கள். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். உங்களது முயற்சிகளுக்கு உறவினர்கள் ஆதரவும், உதவியும் கிடைக்கும்.

விருச்சிகம்: நவீன மின்சாதனங்கள் வாங்குவீர்கள். சகோதரர்களால் முக்கிய காரியங்கள் நிறைவேறும். பழைய கடனில் ஒரு பகுதியை தீர்ப்பீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.

தனுசு: பிரச்சினைகள், எதிர்ப்புகளை சமாளித்து முன்னேறுவீர்கள். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணவரவு உண்டு. சிலருக்கு நல்ல வேலை கிடைக்கும். திடீர் பயணம் ஏற்படலாம்.

மகரம்: மற்றவர்கள் உங்களை மதிப்பு குறைவாக நடத்துவதாகவும், உதாசீனப்படுத்துவதாகவும் எண்ணுவீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி சம்பந்தப்பட்ட குழப்பம் வந்து நீங்கும்.

கும்பம்: வீண் கவுரவத்துக்காக ஆடம்பரச் செலவுகளை செய்ய வேண்டாம். புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். விலகியிருந்த பழைய சொந்தபந்தங்கள் தேடி வருவார்கள்.

மீனம்: பழைய இனிமையான நிகழ்வுகளை அடிக்கடி நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். உறவினர்கள், நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். சமயோசிதமாகப் பேசி மற்றவர்களை கவர்வீர்கள்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in