செய்திப்பிரிவு

Published : 09 Sep 2019 08:45 am

Updated : : 09 Sep 2019 08:45 am

 

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

indha-naal-ungalukku-eppadi

மேஷம்: கணவன் - மனைவிக்குள் மனஸ்தாபம் நீங்கி அன்யோன் யம் பிறக்கும். கைமாற்றாக வாங்கிய பணத்தை திருப்பித் தருவீர்கள். எதிர்பாராத நன்மைகள், பணவரவு உண்டாகும்.

ரிஷபம்: உறவினர்கள், நண்பர்களிடம் உரிமையுடன் பேசி பெயரை கெடுத்துக் கொள்ளாதீர்கள். அநாவசியமாக யாருக்கும் எந்த உறுதிமொழியும் தரவேண்டாம். ஆன்மிக நாட்டம் கூடும்.

மிதுனம்: மனைவி வழியில் நல்ல சேதி உண்டு. புதியவர்களின் அறிமுகமும், அதனால் ஆதாயமும் கிடைக்கும். பெற்றோர், உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். பணவரவு உண்டாகும்.

கடகம்: அரசு, வங்கி வகையில் அனுகூலம் உண்டு. எதிர்பார்த்த இடத்தில் இருந்து நல்ல சேதி வரும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். எதிலும் நிதானம் தேவை.

சிம்மம்: பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து நடப்பார்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம் பக்கத்தினரின் அன்புத் தொல்லைகள் குறையும்.

கன்னி: தடைகள், எதிர்ப்புகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். புதிய முயற்சிகள் மூலம், பழைய கடனை பைசல் செய்வீர்கள்.


துலாம்: குடும்பத்தினரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். இழுபறியாகும் சொத்து பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.

விருச்சிகம்: குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். உற்சாகம், தோற்றப் பொலிவு அதிகரிக்கும். உறவினர்களால் ஆதாயம், லாபம் உண்டு.

தனுசு: பணம், நகை விஷயத்தில் கறாராக இருங்கள். வேலைகளை உடனுக்குடன் முடிக்க வேண்டும் என்று நினைப்பீர்கள். திடீர் பயணத்தால் அலைச்சல், அசதி, செலவு அதிகரிக்கும்.

மகரம்: முக்கிய கோப்புகளை கவனமாக கையாளுங்கள். பால்ய நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.

கும்பம்: எப்பாடுபட்டாவது, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்று வீர்கள். சுப நிகழ்ச்சிகளில் குடும்பத்தோடு கலந்துகொள்வீர்கள்- பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக்கொடுப்பீர்கள்.

மீனம்: குடும்பத்தினரின் விருப்பத்துக்கேற்ப உங்கள் போக்கை மாற்றிக்கொள்வீர்கள். உறவினர், நண்பரால் அனுகூலம் உண்டு. விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேருவார்கள்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்இந்தநாள் உங்களுக்கு எப்படி?இன்றைய ராசிபலன்ராசிபலன்
Popular Articles

You May Like

More From This Category

More From this Author