செய்திப்பிரிவு

Published : 06 Sep 2019 08:48 am

Updated : : 06 Sep 2019 08:48 am

 

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

indha-naal-ungalukku-eppadi

மேஷம்: வீண் விவாதங்களைத் தவிர்த்து விடுங்கள். சிலரின் தவறான நடவடிக்கைகளைக் கண்டு வருந்துவீர்கள். எதிலும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பால்ய நண்பரை சந்திப்பீர்கள்.

ரிஷபம்: பழைய நண்பர்களின் சந்திப்பு எதிர்பாராமல் நிகழும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளின் தேவைகளைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள்.

மிதுனம்: பழைய கடனை பைசல் செய்வீர்கள். குடும்பத்தினரின் நீண்டநாள் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். பணவரவு திருப்தி தரும்.


கடகம்: முக்கிய காரியங்களில் இருந்துவந்த தடைகள் நீங்கும். குடும்பத்தில் மதிக்கப்படுவீர்கள். முன்கோபம் விலகும். எதிர்காலம் பற்றி சிந்திப்பீர்கள். அரசுப்பணிகள் சுமுகமாக முடியும்.

சிம்மம்: விருந்தினர் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பணவரவு தேவையான அளவு இருக்கும். சகோதரர் வகையில் நன்மை பிறக்கும். கலைப்பொருட்கள் சேரும்.

கன்னி: சோம்பல், அசதி, உடல் வலி நீங்கும். தடைபட்ட வேலைகளை மளமளவென்று முடிப்பீர்கள். கோபம் தணியும். தேவையற்ற குழப்பங்கள் முடிவுக்கு வரும். திடீர் பயணம் ஏற்படலாம்.

துலாம்: நீண்ட நாட்களாக இழுத்தடித்த காரியங்கள் முடிவுக்கு வரும். கணவன் - மனைவிக்குள் நிலவிய கருத்துவேறுபாடுகள் நீங்கும். வீட்டை விரிவுபடுத்த முயற்சிப்பீர்கள்.

விருச்சிகம்: ஆடம்பரச் செலவுகளை தவிர்க்கவும். கணவன் - மனைவிக்குள் மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். பயணங்கள் அலைச்சல் தரும். அக்கம்பக்கத்தினரின் அன்புத் தொல்லை உண்டு.

தனுசு: உங்கள் நலனில் அதிக அக்கறை கொண்டவர்களுடன் சந்திப்பு நிகழும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பணவரவு திருப்தி தரும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

மகரம்: பிரியமானவர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுவீர்கள். தாய்வழி உறவினர்களால் நன்மையுண்டு. வெளியூரில் இருந்து எதிர்பார்த்த செய்தி வரும்.

கும்பம்: புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். வாகனப் பழுது நீங்கும். தாய்வழி உறவினர்களால் மகிழ்ச்சியுண்டு. புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். பணவரவு திருப்தி தரும்.

மீனம்: வீடு, மனை, வாகனம் வாங்குவது குறித்து குடும்பத்தினருடன் ஆலோசிப்பீர்கள்.. தந்தைவழி உறவினர் வீட்டு விசேஷத்தில் கலந்து கொள்வீர்கள். தோற்றப் பொலிவு கூடும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

இந்தநாள் உங்களுக்கு எப்படி?12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்இன்றைய ராசிபலன்கள்ராசிபலன்




Popular Articles

You May Like

More From This Category

More From this Author