செய்திப்பிரிவு

Published : 01 Sep 2019 08:01 am

Updated : : 01 Sep 2019 08:01 am

 

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

indha-naal-ungalukku-eppadi

மேஷம்: கணவன் - மனைவிக்குள் ஒற்றுமை பிறக்கும். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். சகோதரர்களால் நன்மை உண்டு. அக்கம்பக்கத்தினரின் ஆதரவு கிடைக்கும்.

ரிஷபம்: பிள்ளைகளின் பொறுப்புணர்வை பாராட்டுவீர்கள். நண்பர்கள், உறவினர்கள் உறுதுணையாக இருப்பார்கள். மூத்த சகோதரர் பாசமழை பொழிவார். அரசால் அனுகூலம் உண்டு.

மிதுனம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். பிள்ளைகள் உங்கள் பேச்சுக்கு மதிப்பளிப்பார்கள். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். விருந்தினர் வருகையால் வீடு கலகலப்பாகும்.

கடகம்: புது முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். உங்கள் மீது அக்கறை கொண்ட நண்பர்களைச் சந்திப்பீர்கள். கொடுக்கல் - வாங்கலில் சுமுக நிலை காணப்படும்.

சிம்மம்: எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்திகள் வரும். நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். உடன்பிறந்தவர்களால் ஆதாயம் உண்டு. திடீர் பயணம் ஏற்படலாம்.

கன்னி: பல வேலைகளையும் நீங்களே பார்க்க வேண்டியது வரும். சகோதரர் வகையில் பிரச்சினைகள் வரக்கூடும். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவைப் பயன்படுத்துவது நல்லது.


துலாம்: வேலைகளை உடனே முடிக்க வேண்டுமென்று நினைப்பீர்கள். பிள்ளைகளால் அலைச்சல் உண்டு. அக்கம்பக்கத்தினரின் செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் அடையலாம்.

விருச்சிகம்: விடாப்பிடியாகச் செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். கணவன் - மனைவிக்குள் மனம்விட்டு பேசுவீர்கள். பணவரவு திருப்தி தரும். பழைய கடனை பைசல் செய்வீர்கள்.

தனுசு: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். தைரியமாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பணவரவு திருப்தி தரும்.

மகரம்: பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து யோசிப்பீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை விலகும். புண்ணிய தலங்களுக்கு குடும்பத்துடன் சென்று வருவீர்கள். கலைப்பொருட்கள் சேரும்.

கும்பம்: குடும்பத்தினரின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள். மற்றவர்களை நம்பி எந்த பொறுப்பையும் ஒப்படைக்க வேண்டாம். ஆவணங்களில் கையெழுத்திடும்போது கவனம் தேவை.

மீனம்: குடும்பத்தில் குழப்பம் நீங்கி அமைதி நிலவும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். நவீன மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். வெளியூர் பயணம் உண்டு.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

இந்தநாள் உங்களுக்கு எப்படி?12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்ராசிபலன்இன்றைய ராசிபலன்
Popular Articles

You May Like

More From This Category

More From this Author