Published : 30 Aug 2019 08:40 AM
Last Updated : 30 Aug 2019 08:40 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: பழைய வாகனத்தை மாற்றி புது வாகனம் வாங்குவீர்கள். வீடு, வாகனம் வாங்க வங்கிக் கடன் கிடைக்கும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். திடீர் பயணம் ஏற்படக் கூடும்.

ரிஷபம்: சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். டி.வி., ஃப்ரிட்ஜ், வாஷிங்மெஷின் போன்ற மின்சாதனங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

மிதுனம்: பணவரவு திருப்திகரமாக இருந்தாலும் சேமிக்க முடியாதபடி அடுத்தடுத்த செலவுகள் இருந்துகொண்டே இருக்கும். உடன்பிறந்தோருடன் நிலவிய குழப்பங்கள் நீங்கும்.

கடகம்: வெற்றி வாய்ப்புகள் தேடிவரும். புது வாகனம், ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். வழக்குகள் சாதகமாகும். விருந்தினர் வருகை உண்டு.

சிம்மம்: சின்ன விஷயங்களுக்கெல்லாம் டென்ஷனாவீர்கள். அடிக்கடி உடல்நிலை பாதிக்கக் கூடும். முன்கோபம் தலைகாட்டும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும்.

கன்னி: திட்டமிட்டபடி பயணங்கள் அமையும். நீண்ட நாட்களாக விலகியிருந்த நண்பர்கள், உறவினர்கள் மீண்டும் வந்து பேசுவார்கள். திடீர் பணவரவு உண்டு. கலைபொருட்கள் சேரும்.

துலாம்: பெரிய திட்டங்கள் தீட்டுவீர்கள். நீண்டநாட்களாக எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். வெற்றி பெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு.

விருச்சிகம்: கடந்தகால இனிய அனுபவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். வீட்டை புதுப்பிக்க திட்டமிடுவீர்கள். அரசு காரியங்கள் சாதகமாக முடியும். விருந்தினர் வருகை உண்டு.

தனுசு: எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். பிள்ளைகள் பொறுப்புடன் இருப்பார்கள். வெளிநாட்டிலிருப்பவர்கள், வேற்றுமொழி பேசுபவர்களால் திடீர் திருப்பம் உண்டாகும்.

மகரம்: ஒருவித சலிப்பு, வெறுப்பு, தாழ்வுமனப்பான்மை வந்து போகும். நேரம் ஒதுக்கி யோகா, தியானம் செய்வது நல்லது. அக்கம்பக்கத்தினரின் செயல்பாடு எரிச்சலை உண்டாக்கும்.

கும்பம்: உங்களின் முன்னேற்றத்துக்கு எத்தனை தடைகள் வந்தாலும் போராடி வெற்றி பெறும் சக்தி கிடைக்கும். பெரிய மனிதர்கள் அறிமுகமாவார்கள். கலைப்பொருட்கள் சேரும்.

மீனம்: தோற்றப்பொலிவு கூடி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். சவாலான காரியங்களையும் சர்வசாதாரணமாக முடித்துக் காட்டுவீர்கள்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x