

மேஷம்
நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். தள்ளிப்போன வழக்கில் சாதகமான திருப்பம் வரும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். புதியவர்களின் அறிமுகத்தால் ஆதாயம் உண்டு.
ரிஷபம்
நீங்கள் விரும்பிய புதிய பாதையில் பயணிப்பீர்கள். பணவரவு உண்டு. உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும். கணவன் - மனைவிக்குள் மனம்விட்டு பேசுவீர்கள்.
மிதுனம்
நண்பர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். வீட்டை பெரிதுபடுத்திக் கட்டுவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.
கடகம்
எதிர்மறை சிந்தனை, சிறுசிறு ஏமாற்றங்கள் வந்து நீங்கும். திட்டமிட்ட காரியங்கள் சற்று தாமதமாக முடியும். எதிலும் அவசரப்பட வேண்டாம். ஆன்மிகத்தில் ஈடுபாடு உண்டாகும்.
சிம்மம்
பணப் பற்றாக்குறை, வீண் டென்ஷன் வந்துபோகும். கோபத்தால் நல்லவர் நட்பை இழக்க நேரிடும். ஆன்மிகப் பெரியவர்கள், மகான்களின் ஆசி கிடைக்கும். எதிலும் நிதானம் தேவை.
கன்னி
முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். புதிய நபர்களால் ஆதாயம் உண்டு. குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனைகளை நல்லபடியாக நிறைவேற்றுவீர்கள்.
துலாம்
பழைய பிரச்சினைகளுக்கு சுமுகத் தீர்வு காண்பீர்கள். உறவினர்கள், நண்பர்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். வழக்கில் சாதகமான திருப்பம் உண்டாகும்.
விருச்சிகம்
பழைய கடனைத் தீர்க்க புது வழி யோசிப்பீர்கள். பெரிய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். தந்தை உடல்நலம் சீராகும். விலகிப்போன பழைய சொந்த பந்தங்கள் தேடி வருவார்கள்.
தனுசு
ஜாமீன் கையெழுத்திடுவது, சிபாரிசு செய்வது போன்றவை வேண்டாம். வீண் பேச்சுகளை தவிர்ப்பது நல்லது. சகோதர வகையில் சங்கடங்கள் வந்து நீங்கும். எக்காரியத்திலும் பொறுமை அவசியம்.
மகரம்
உற்சாகம், தோற்றப் பொலிவு அதிகரிக்கும். அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். அரசு, வங்கி காரியங்கள் விரைந்து முடியும். மனைவி வழியில் ஆதாயம் உண்டு.
கும்பம்
உங்கள் வித்தியாசமான அணுகுமுறையால் பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். பெரிய பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும்.
மீனம்
பேசாமல் இருந்த உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். நண்பர்கள் சிலர் உங்கள் உதவியை நாடி வருவார்கள். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.
*****
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |