இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்
Updated on
1 min read

மேஷம்: யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். உடல்நலத்தில் கவனம் செலுத்துவது நல்லது. அரசு காரியங்கள் தாமதமாகி முடியும். கலைபொருட்கள் சேரும்.

ரிஷபம்: தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வேலைகளை முடிப் பீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். அக்கம்பக்கத்தினரின் அன்புத் தொல்லை அதிகரிக்கும்.

மிதுனம்: வருமானத்தை உயர்த்த முயற்சிப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். வீட்டில் சுபகாரியங்களுக்கு ஏற்பாடாகும். வெளியூர் பயணங்கள் மகிழ்ச்சி தரும்.

கடகம்: கணவன் - மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும்.

சிம்மம்: தாழ்வுமனப்பான்மையால் மனஇறுக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராறில் போய் முடியும். கூடாபழக்கமுள்ளவர்களின் நட்பைத் தவிர்ப்பது நல்லது.

கன்னி: பேச்சில் கம்பீரம் பிறக்கும். தடைபட்ட காரியங்களை உடனே முடிப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.

துலாம்: எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். உங்களைச் சுற்றியிருப்ப வர்களால் ஏற்பட்ட தொந்தரவுகள் விலகும். குடும்பத்தினருடன் மனம்விட்டுப் பேசுவீர்கள். திடீர் பயணம் ஏற்படலாம்.

விருச்சிகம்: சோர்வு நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். நீங்கள் பார்க்க நினைத்த நபரே உங்களை வந்து சந்தித்து மகிழ்ச்சியில் ஆழ்த்துவார். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.

தனுசு: குடும்பத்தினரின் விருப்பங்களை உடனுக்குடன் நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளின் வருங்காலத்துக்காக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். நல்லவர்களின் நட்பு கிடைக்கும்.

மகரம்: குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. பிள்ளைகளின் கோபம், அலட்சியப் போக்கு மாறும். பழைய இனிய நினைவுகள் நெஞ்சில் நிழலாடும். ஆடை, ஆபரணங்கள் சேரும்.

கும்பம்: முகப்பொலிவு கூடும். அதிகாரப்பூர்வமாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். ஆடம்பர செலவுகளைத் தவிர்ப்பீர்கள். உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும்.

மீனம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் ஒன்று பேசப் போய் மற்றவர்கள் அதை வேறுவிதமாகப் புரிந்து கொள்வார்கள். திடீர் பயணம் உண்டு.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in