இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்
Updated on
1 min read

மேஷம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். சகோ தரரின் பிரச்சினையை தீர்த்து வைப்பீர்கள். புண்ணியத் தலங் களுக்கு குடும்பத்துடன் சென்று வருவீர்கள். பணவரவு உண்டு.

ரிஷபம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வீடு, வாகனத்தைச் சீர் செய்வீர்கள். உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும்.

மிதுனம்: குடும்பத்தினரின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள். சிலர் உங்களை குறை கூறினாலும் அதை பெரிதுபடுத்தாதீர்கள். நன்றி மறந்த ஒருவரை நினைத்து வருத்தமடைவீர்கள்.

கடகம்: மறைந்து கிடந்த திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். திடீர் பயணம் ஏற்படக் கூடும்.

சிம்மம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பழைய பிரச்சினைகளை தீர்ப்பீர்கள். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள்.

கன்னி: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளின் உயர் கல்வி, உத்தியோகம் குறித்து யோசிப்பீர்கள். சிக்கனமாகச் செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நட்பு வட்டம் விரியும்.

துலாம்: நீண்ட நாட்களாகப் பார்க்க நினைத்தவரை எதிர்பாராது சந்திப்பீர்கள். பழைய கடன் பிரச்சினைகளைத் தீர்க்க வழி பிறக்கும். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும்.

விருச்சிகம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பிரச்சினை களுக்குத் தீர்வு காண்பீர்கள். பிரபலங்களின் நட்பு கிட்டும். உங்க ளின் பெருந்தன்மையை உறவினர்கள் புரிந்து கொள்வார்கள்.

தனுசு: சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். முகப்பொலிவு கூடும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும்.

மகரம்: சில நேரங்களில் மனம் அமைதியற்ற நிலையில் இருக்கும். குடும்பத்தாருடன் இணக்கமாகச் செல்லவும். மற்றவர்கள் விஷயத் தில் அநாவசியமாகத் தலையிட வேண்டாம்.

கும்பம்: பண விஷயங்களில் சாதுர்யமாகப் பேசி சமாளிப்பீர்கள். வேலைகளை உடனே முடிக்க வேண்டுமென நினைப்பீர்கள். எதிர்பாராத பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள்.

மீனம்: குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வீடு வாங்கத் திட்டமிடுவீர்கள். விலகியிருந்த உறவினர்கள் வீடு தேடி வருவார்கள்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in