இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்
Updated on
1 min read

மேஷம்: வீண் சந்தேகங்கள் விலகும். வாகனப் பழுதை நீக்கு வீர்கள். வீட்டில் பராமரிப்புப் பணியை மேற்கொள்வீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். அலைச்சல் குறையும்.

ரிஷபம்: சமயோசித புத்தியால் காரியங்களை சாதிப்பீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை தீர்க்க முயல்வீர்கள். வழக்கு சாதகமாகும். சகோதரர்களுடன் நிலவிய கருத்துவேறுபாடு நீங்கும்.

மிதுனம்: குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். தாமதமாகிக் கொண்டி ருந்த சுபகாரியங்கள் இனிதே நிறைவேறும். உங்கள் மகளின் திருமணத்துக்காக ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

கடகம்: புது நண்பர்கள் அறிமுகமாவார்கள். வருங்காலத்தைப் பற்றிய யோசனையில் அவ்வப்போது மூழ்குவீர்கள். பிரபலங்கள் வீட்டு சுபநிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள்.

சிம்மம்: எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். நீண்டநாள் பிரச்சினைகளுக்கு சுமுகத் தீர்வு கிடைக்கும். ஆனால் முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது.

கன்னி: குடும்ப வருமானம் உயரும். இழுபறியாக இருந்த வேலை கள் திடீரென முடியும். பிரபலமானவர்களின் தொடர்பு கிடைக்கும். தந்தையுடன் இருந்துவந்த மனக்கசப்புகள் நீங்கும்.

துலாம்: விருந்தினர் வருகையால் வீடு கலகலப்பாகும். கணவன் - மனைவிக்குள் நிலவிவந்த பனிப்போர் மறையும். நீண்டநாட்களாக எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி வரும். பணவரவு உண்டு.

விருச்சிகம்: எதிர்மறை எண்ணம் நீங்கும். கணவன் - மனைவிக்குள் இருந்துவந்த ஈகோ பிரச்சினை விலகும். பழைய கடனில் ஒரு பகுதியை அடைப்பீர்கள். பால்ய நண்பரை சந்திப்பீர்கள்.

தனுசு: பணவரவு உண்டு. ஆனால் அடுத்தடுத்த செலவுகளால் வந்த தடம் தெரியாமல் போகும். எந்த வேலையையும் மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே முடிப்பது நல்லது.

மகரம்: தைரியம், புகழ், கவுரவம் அதிகரிக்கும். கணவன் - மனைவிக்குள் இருந்துவந்த மனக்கசப்புகள் நீங்கி மகிழ்ச்சி தங்கும். எதிலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது.

கும்பம்: உங்களை அவமதித்தவர்கள், தவறை உணர்ந்து திரும்ப வருவார்கள். விலையுயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். சொந்த வீடு, மனை வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள்.

மீனம்: பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும். ஆடம்பர செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வீட்டை விரிவுபடுத்த முற்படுவீர்கள். மனைவிவழி உறவினர்களால் நன்மை உண்டு.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.
 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in