Published : 01 Aug 2019 08:22 AM
Last Updated : 01 Aug 2019 08:22 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: தன்னம்பிக்கை பிறக்கும். விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். கணவன்-மனைவிக்குள் அன் யோன்யம் பிறக்கும். பணப்பற்றாக்குறை நீங்கும்.

ரிஷபம்: மனதில் பட்டதை பளிச்சென்று பேசுவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். உறவினர்களால் மனநிம்மதி கிட்டும். அரசு காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படும்.

மிதுனம்: சொன்ன சொல்லைக் காப்பாற்ற பரபரப்புடன் செயல்படுவீர்கள். மனதுக்குப்பிடித்தவர்களுக்காக அதிகம் செலவு செய்வீர்கள். உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும்.

கடகம்: சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். குடும்பத்தில் சலசலப்புகள் வந்து போகும். நன்றி மறந்த ஒருவரை நினைத்து வருத்தமடைவீர்கள்.

 சிம்மம்: அலைச்சலுடன் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்துபோகும். அமைதியாக இருப்பது நன்மை பயக்கும். சுப செலவுகள், அலைச்சல் அதிகரிக்கும்.

கன்னி: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். நட்பு வட்டாரம் விரியும். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உடல் நிலை சீராக அமையும். கனவுத்தொல்லை, தூக்கமின்மை விலகும்.

துலாம்: எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். பழைய கடனை பைசல் செய்யுமளவுக்கு பணவரவு உண்டு. குழந்தைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.

விருச்சிகம்: திறமைகளை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பங்கள் அமையும். குடும்பத்தில் அமைதி நிலவும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிட்டும். கையில் காசு பணம் புரளும்.

தனுசு: எதையோ இழந்ததைப் போல் ஒருவித கவலை வந்து நீங்கும். உதவி கேட்டு உறவினர்களும் தர்மசங்கடத்துக்கு ஆளாக் குவார்கள். திடீர் பயணங்கள் உண்டு.

மகரம்: மனநிறைவுடன் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். சொந்த பந்தங்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி பொங்கும்.

கும்பம்: குடும்பத்தில் அமைதி நிலவும். நட்பு வட்டாரம் விரியும். கடன் பிரச்சினைகளுக்கு மாற்றுவழி காண்பீர்கள். வெளியூரிலிருந்து நற்செய்திகள் வந்து சேரும். திடீர் பயணம் ஏற்படும்.

மீனம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். குடும்பத்தி லுள்ளவர்களிடம் மனம் விட்டுப்பேசுவீர்கள். சகோதர, சகோதரி களால் உதவி கிடைக்கும். பணவரவு இருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x