

மேஷம்: நண்பர்கள் உங்கள் தேவை அறிந்து உதவுவார்கள். மனைவிவழி உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சியும், ஆதாயமும் உண்டு.
ரிஷபம்: ஊர் பொது விஷயங்களை முன்னின்று நடத்துவீர்கள். பிள்ளைகளால் சமூகத்தில் மரியாதை, அந்தஸ்து உயரும். வெளிநாட்டில் இருக்கும் நண்பர்களால் ஆதாயம் அடைவீர்கள்.
மிதுனம்: அலைச்சல், டென்ஷன் வந்துபோகும். முன்கோபத்தால் நல்ல நண்பர்களை இழக்க நேரிடும். பெற்றோருடன் கருத்து மோதல்கள் வரும். ஆன்மிகத்தில் நாட்டம் ஏற்படும்.
கடகம்: குடும்பத்தில் சின்னச் சின்ன விவாதங்கள் வந்து நீங்கும். சகோதர உறவுகளால் டென்ஷன், ஏமாற்றம் வரக்கூடும். மறைமுக எதிரிகள் தோன்றுவார்கள். பேச்சில் நிதானம் தேவை.
சிம்மம்: மனதில் பட்டதை பளிச்சென்று பேசி அனைவரையும் ஆச்சர்யப்படுத்துவீர்கள். நம்பிக்கை, உற்சாகத்துடன் காணப் படுவீர்கள். இழுபறியாக உள்ள காரியங்களை முடிப்பீர்கள்.
கன்னி: சோம்பல், களைப்பு, அசதியில் இருந்து விடுபட்டு சுறுசுறுப்பாவீர்கள். எங்கு சென்றாலும் மதிப்பு, மரியாதை கூடும். புதிதாக வாகனம், வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவீர்கள்.
துலாம்: எதிலும் வெற்றி, மகிழ்ச்சி உண்டு. பணவரவு திருப்திகரமாக இருக்கும். சேமிப்பில் கவனம் செலுத்துவீர்கள். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.
விருச்சிகம்: பிள்ளைகளுக்கு கொஞ்சம் அலைச்சலும், ஆரோக்கியக் குறைவும் வந்துபோகும். திடீர் பயணம், செலவுகள் வந்து கொண்டே இருக்கும். ஆன்மிகம், யோகாவில் ஈடுபாடு உண்டாகும்.
தனுசு: உங்கள் பேச்சு, செயலில் வேகம் கூடும். கணவன் - மனைவிக் குள் அன்யோன்யம் அதிகரிக்கும். தன்னிச்சையாக செயல்பட்டு முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். காரியத்தில் நிதானம் அவசியம்.
கும்பம்: மரியாதை, செல்வாக்கு கூடும். வெள்ளி ஆபரணங்கள் வாங்குவீர்கள். பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். வீடு வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். பேச்சில் பொறுமை தேவை.
மீனம்: விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். பழு தான மின்னணு, மின்சார சாதனங்களை மாற்றுவீர்கள். உறவினர் களால் ஆதாயம் உண்டு. மகான்களின் தரிசனம் கிடைக்கும்.
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |