மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 16 நவம்பர் 2025

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 16 நவம்பர் 2025
Updated on
2 min read

மேஷம் : குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர். பணவரவு திருப்தி தரும். பிள்ளைகளின் சாதனைகளால் பெருமையடைவீர்கள். முன்கோபம் விலகும். உத்தியோகம் சிறக்கும். வியாபார ரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டிவரும்.

ரிஷபம் : குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளால் மகிழ்ச்சியுண்டு. பழைய நண்பர்களின் வீட்டு விசேஷங்களில் பங்கேற்று நட்பை புதுப்பிப்பீர். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.

மிதுனம் : நீண்டநாளாக அடைக்கமுடியாமல் இருந்த கடனை இப்போது அடைக்கும் அளவுக்கு பணம் வரும். மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றுவீர். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். உத்தியோகம் சிறக்கும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும்.

கடகம் : நீண்டநாள் கனவு நனவாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டாகும். மின்னணு, மின்சார சாதனங்கள்
வாங்குவீர். அலுவலக ரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர். வியாபாரத்தில் நிம்மதியுண்டு. மேலதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்.

சிம்மம் : பணவரவு திருப்திகரமாக இருக்கும் உற்றார் உறவினர்கள் உங்கள் வீடுதேடி வந்து பேசுவார்கள். குலதெய்வ பிரார்த்தனைகளை நிறை
வேற்றுவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பது நல்லது.

கன்னி : குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக் கொடுத்துப் போகவும். அண்டை, அயலார் சிலரின் செயல்பாடுகள் உங்களுக்கு கோபம், எரிச்சல் வரவழைக்கும். வியாபார ரீதியாக பிரபலங்களை சந்திப்பீர்கள். நல்ல லாபமுண்டு. அலுவலகத்தில் சக ஊழியர் மத்தியில் மதிப்பு உயரும்.

துலாம் : தடைகள் உடைபடும். தம்பதிக்குள் இருந்த பனிப்போர் விலகும். வருங்காலத்துக்கான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வரவேண்டிய பணம் கைக்கு வரும். வியாபாரம் சூடு பிடித்து லாபம் பார்க்கலாம். அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்.

விருச்சிகம் : தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பழைய நல்ல சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவு இருக்கும். கூட்டுத் தொழிலில் பாக்கி வசூலாகும். அலுவலக ரீதியாக பிரபலங்களை சந்திப்பீர்கள். மேலதிகாரிகள் ஆதரிப்பர்.

தனுசு : நீண்டநாட்களாக தடைபட்ட சுபநிகழ்ச்சிகள் கைகூடி வரும். பிள்ளைகள் மனம் விட்டுப் பேசுவார்கள். பண விஷயத்தில் கறாராக இருப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவு கிட்டும். அலுவலகரீதியாக பயணம் மேற்கொள்வீர். சக ஊழியர்கள் மதிப்பார்கள்.

மகரம் : பணவரவு திருப்தி தரும். புதிய சிந்தனையால் சில பிரச்சினைகளை முடிப்பீர். உறவினர், நண்பர்களின் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர். அக்கம் பக்கத்தினரை பகைத்துக் கொள்ளாதீர். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். உத்தியோகத்தில் ஏற்றம் காண்பீர்கள்.

கும்பம் : குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக் கொடுத்து போகவும். உடல்சோர்வு, மன உளைச்சல் வந்து போகும். வாகனம் பழுதாகும். அலுவலகத்
தில் புதிய பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகளை போராடி வசூலிப்பீர். ஓரளவு லாபமுண்டு.

மீனம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குடும்பத்தில் நிலவி வந்த குழப்பங்கள் விலகும். சகோதரவகையில் உதவியுண்டு. கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு லாபம் கிட்டும். அலுவலகத்தில் யாரைப் பற்றியும் புகார் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். விவாதங்களை தவிர்க்கவும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in